Tamil Computer Tips and Tricks

Google-Translate-Chinese (Simplified) BETA Google-Translate-English to French Google-Translate-English to German Google-Translate-English to Italian Google-Translate-English to Japanese BETA Google-Translate-English to Korean BETA Google-Translate-English to Russian BETA Google-Translate-English to Spanish

Tuesday, March 29, 2011

கண்ட்ரோல் பேனல் இரு தோற்றங்கள்

இது குறித்த சிறு குறிப்பு ஒன்றை இந்த பகுதியில் வெளியிட்டிருந்தாலும் பல வாசகர்கள் கண்ட்ரோல் பேனலின் இரு வேறு தோற்றங்கள் குறித்து கேள்விகள் அனுப்பியுள்ளதால் மீண்டும் சற்று விளக்கமாக இங்கு தருகிறேன்.

கண்ட்ரோல் பேனல் விண்டோ நமக்கு இருதோற்றங்களில் கிடைக்கிறது. அவை Classic View மற்றும் Category View என அழைக்கப் படுகின்றன. இந்த இரண்டு வெவ்வேறு தோற்றங்களைக் கொண்டு வழக்கமான கண்ட்ரோல் பேனலில் மேற்கொள்ளக் கூடிய அனைத்து பணிகளைச் செயல்படுத்தலாம்.

ஒன்றுக்கொன்று தோற்றத்தில் தான் வேறுபாட்டினைக் கொண்டுள்ளதே தவிர செயல்பாடுகளில் அல்ல. அதே போல இரண்டு வெவ்வேறு தோற்றங்களுக்கிடையே மிக எளிதாக மாற்றிக் கொள்ளவும் செய்யலாம். முதலில் கிளாசிக் வியூவைக் கவனிப்போம். இதனை நீங்கள் தேர்ந்தெடுத்தால் பலவகையான ஐகான்களுடன் ஒரு விண்டோ கிடைக்கும். இந்த ஐகான்களின் மூலம் அனைத்து பிரிவுகளையும் நீங்கள் அடையலாம்: – Accessibility Options, Date and Time, Printers and Faxes, User Accounts என அனைத்தும் இங்கே தனித்தனியாக உள்ளன. அவற்றைக் கிளிக் செய்வதன் மூலம் இவற்றைப் பெற்று குறிப்பிட்ட வகையில் செட் செய்திடலாம்.

கேடகிரி வியூவில் கிடைப்பதைக் காட்டிலும் அதிகமான எண்ணிக்கையில் பிரிவுகளை முதல் தோற்றத்திலேயே பெறலாம். இதுதான் கண்ட்ரோல் பேனலின் மிகப் பழைய தோற்றம். இதற்கு எதிர்மாறாக கேடகிரி வியூ என்பது சுருக்கமான ஒரு விண்டோவினைக் கொடுக்கும். இருந்தாலும் கண்ட்ரோல் பேனல் மூலம் வழக்கமாக எதனை எல்லாம் பெறுகிறீர்களோ அவை அனைத்தையும் இதில் பெறலாம். இதில் என்ன பிரச்னை என்றால் சில கம்ப்யூட்டர் தொழில் நுட்பங்கள் அல்லது வழிகள் குறிப்பிட்ட வியூவில் கண்ட்ரோல் பேனல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க் கின்றன. அவ்வாறு இல்லை என்றால் அது சிக்கலில் கொண்டு போய்விட்டுவிடும். இருப்பினும் அது எப்போதாவது ஒரு முறை தான் ஏற்படும்.

அதனால் கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கு சிறிதளவும் பாதிப்பினை ஏற்படுத்தாது. மேலும் முதலில் கூறியது போல இந்த இரண்டு வியூக்களுக்கிடையே மாறிக் கொள்வதும் எளிதுதான். இதனை எப்படி மேற்கொள்வது என்பதற்குக் கீழ்க்காணும் வழியைப் பின்பற்றவும். முதலில் Start அழுத்தி, Control Panel செல்லுங்கள். மேலாக இடது மூலையில் பார்க்கவும். இதில் “Switch to Category View” அல்லது “Switch to Classic View” என்பதனைப் பார்க்கலாம். இதில் கிளிக் செய்வதன் மூலம் அடுத்த வியூவிற்கு மாறிக் கொள்ளலாம். மாறிக் கொண்டு கண்ட்ரோல் பேனலில் மேற்கொள்ளும் அனைத்து செயல்பாடுகளையும் இதில் மேற்கொள்ளலாம்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Tamil Computer Tips

Popular Posts