Tamil Computer Tips and Tricks

Google-Translate-Chinese (Simplified) BETA Google-Translate-English to French Google-Translate-English to German Google-Translate-English to Italian Google-Translate-English to Japanese BETA Google-Translate-English to Korean BETA Google-Translate-English to Russian BETA Google-Translate-English to Spanish

Tuesday, March 29, 2011

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 7க்கான சில கூடுதல் டிப்ஸ்கள்

பயர்பாக்ஸ் மற்றும் பிற பிரவுசர் தொகுப்புகளின் அதிரடி புதிய பதிப்புகளினால் சிறிது சிறிதாக இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 7 பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் உலகில் இன்று அதிகமான எண்ணிக்கையில் பயன்படுத்தப்படுவது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 7 தான். அதற்கான சில கூடுதல் டிப்ஸ்களை இங்கு பார்க்கலாம்.

இத்தொகுப்பிலேயே பல தேடுதல் சாதனங்கள் இணைந்துள்ளன. பிரவுசரின் மேலாக வலது மூலையில் இந்த தேடுதல் சாதனங்களைக் காணலாம். இவற்றுடன் உங்களுக்குத் தேவையான அல்லது பிரியமான தேடுதல் சாதனங்களையும் இணைத்துக் கொள்ளலாம். அதற்கு தேடுதல் பாரின் வலது கோடியில் உள்ள கீழ் நோக்கிய அம்புக் குறியில் கிளிக் செய்து கிடைக்கும் பட்டியலில் Find More Providers என்பதைத் தேர்ந்தெடுத்து இணைக்கலாம். அது மட்டுமின்றி இந்த தேடுதல் சாதனம் ஒரு சர்ச் இஞ்சினாகத்தான் இருக்க வேண்டியதில்லை. நீங்கள் அடிக்கடி பார்க்கும் தளத்தில் தரப்பட்டிருக்கும் தேடுதல் சாதனத்தையும் இணைக்கலாம். மேலே காட்டியபடி Find More Providers என்பதைத் தேர்ந்தெடுத்தவுடன் Create Your Own section என்று ஒரு பிரிவு இருக்கும்.

இதில் தரப்படும் படிவத்தில் உங்கள் பிரியமான சர்ச் இஞ்சின் தளம் குறித்த தகவல்களை பூர்த்தி செய்திடவும். இன்னொரு டேபில் எந்த தளத்தில் தரப்பட்டிருக்கும் சர்ச் இஞ்சினை நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரருடன் இணைத்துப் பயன்படுத்த வேண்டுமோ அதனைத் திறக்கவும். அங்கு கொடுக்கப்பட்டுள்ள சர்ச் பாக்ஸில் இந்ததளத்திற்கேற்ற வகையில், நினைவில் கொள்ளும் வகையில் ஒரு பெயரை டைப் செய்திடவும். இந்த பெயரை முழுமையாக கேப்பிடல் எழுத்துக்களில் டைப் செய்திடவும். சர்ச் முடிந்த பின்னர் கிடைக்கும் தளத்தின் அட்ரஸ் பாரில் உள்ள யு.ஆர்.எல். முகவரியை காப்பி செய்து முதலில் திறக்கப்பட்டிருக்கும் Create Your Own section பக்கத்தில் ஒட்டி விடவும். இங்கு இந்த சர்ச் இஞ்சினுக்கு ஒரு பெயர் கொடுக்கவும். பின்னர் Install பட்டனில் கிளிக் செய்திட்டால் ஒரு சின்ன விண்டோவில் அதனை உறுதி செய்திட கேள்வி கேட்கப்படும். இதனை உறுதி செய்திட Add Provider என்பதில் கிளிக் செய்திடவும். இனி இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பில் சர்ச் பாரில் வலது மூலையில் கிடைக்கும் கீழ் நோக்கிய அம்புக் குறியில் கிளிக் செய்தால் வரும் பட்டியலில் உங்களுடைய சர்ச் இஞ்சின் கிடைக்கும். இதனைத் தேர்ந்தெடுத்து என்டர் கொடுத்தால் நேராக அந்த தளம் திறக்கப்பட்டு தேடல் வேலை நடைபெறும்.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 7 நமக்கு தந்த சிறப்பான வசதி டேப் பிரவுசிங் தான். ஒவ்வொரு டேபிலும் நாம் பார்க்கும் ஒவ்வொரு தளம் திறக்கப்படுகிறது. இதனால் நாம் அவற்றைக் கிளிக் செய்து உடனே பெற்று இயங்க முடிகிறது. இவ்வாறு நிறைய தளங்களை ஒவ்வொன்றாகப் புதிய டேப் மூலம் திறக்கையில் அதிக எண்ணிக்கையில் டேப்கள் தெரிகின்றன. இவற்றைக் கண்ட்ரோல் செய்து தேவையான தளங்களைப் பெறுவது சற்று கஷ்டமாகிறது. இதற்கு ஒரு வழியை இந்த பிரவுசர் தருகிறது. நீங்கள் திறந்துள்ள அனைத்து தளங்களின் சிறிய தம்ப் நெயில் படங்களைப் பெற டேப்களின் இடது மூலையில் உள்ள Quick Tabs என்ற பட்டனைத் தட்டவும். அல்லது கீழ் நோக்கி விரியும் கட்டமாக அனைத்து தளங்களும் தெரிய கிதடிஞிடு கூச்ஞண் பட்டனின் வலது புறமாக உள்ள Tab List என்னும் பட்டனில் தட்டவும். அனைத்து தளங்களும் நீங்கள் விரும்பியபடி கிடைக்கும். அதிக எண்ணிக்கையில் தளங்கள் இருக்கையில் பல டேப்கள் திரையில் தெரிகின்றதல்லவா? ஒரு நிலையில் ஒரே ஒரு தளம் மட்டும் போதும். பார்த்ததெல்லாம் வேண்டாம் என்று எண்ணுகிறீர்களா? எந்த தளம் வேண்டுமோ அதில் சென்று அந்த டேப்பில் ரைட் கிளிக் செய்திடவும். வரும் மெனுவில் Close Other Tabs என்பதில் கிளிக் செய்திடுங்கள். நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் தளம் தவிர மற்ற அனைத்து தளங்களின் டேப்கள் மூடப்படும்.

இறுதியாக இன்னொன்றையும் பார்ப்போம். பிரவுசிங் வேலையெல்லாம் முடித்த பின்னர் இன்டர்நெட் எக்ஸ்புளோரரை மூடுவோம். அப்போது ஒரு சிலருக்கு எரிச்சல் தரும் வகையில் “Do you want to close all tabs?” என்ற எச்சரிக்கை செய்தி கிடைக்கும். இது வேறு எதற்கு? என்று எண்ணுகிறீர்களா? அடுத்த முறை பிரவுசரை மூடுகையில் இந்த செய்தி வராமல் பார்த்துக் கொள்ளலாம். Tools பட்டனில் கிளிக் செய்து என்ற பிரிவில் என்டர் தட்டவும். கிடைக்கும் டயலாக் பாக்ஸில் General என்னும் டேபில் தட்டவும். பின்னர் Settings என்னும் டேபைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது கிடைக்கும் விண்டோ ஸ்கிரீனில் Warn me when closing multiple tabs என்பதன் முன் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். அதன் பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி இந்த செய்தி கிடைக்காது.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Tamil Computer Tips

Popular Posts