பொதுவாக அனைவரும் புகைப்படங்கள் , மற்றும் கோப்புகளை ஸ்கேன் செய்வதற்கு போடோஷாப் ( photoshop) அல்லது( ms paint ) போன்ற மென்பொருட்களையே பயன்படுத்துவர் . குறைவான கோப்புகளை ஸ்கேன் செய்வதற்கு இந்த மென்பொருட்கள் போதுமானதே ஆனால் பல் வேறு கோப்புகளை ஒரே நேரத்தில் scan செய்வதற்கு இந்த மென்பொருட்கள் பொருத்தமானது இல்லை ஏன் எனில் ஒவ்வொரு தடவை ஸ்கேன் செய்யும் போதும் அதை உடனே save செய்து விட வேண்டும் .
உதாரணத்திற்கு 50 பக்கங்கள் கொண்ட ஒரு கோப்பை ( document ) ஸ்கேன் செய்ய வேண்டுமெனில் 50 தடவை ஒவ்வொரு பக்கத்தையும் சேமிக்க ( save ) செய்ய வேண்டும் .இவ்வாறு செய்வது சலிப்பையும் ,மற்றும் நேரத்தை விரயமாக்கும் ஓர் செயலாகும் .
உதாரணத்திற்கு 50 பக்கங்கள் கொண்ட ஒரு கோப்பை ( document ) ஸ்கேன் செய்ய வேண்டுமெனில் 50 தடவை ஒவ்வொரு பக்கத்தையும் சேமிக்க ( save ) செய்ய வேண்டும் .இவ்வாறு செய்வது சலிப்பையும் ,மற்றும் நேரத்தை விரயமாக்கும் ஓர் செயலாகும் .
இவ்வாறு நேரம் விரயம் ஆகுவதை தவிர்க்கவென்றே அறிமுகப்படுத்தப்பட்ட மென்பொருளே ( scan to pdf ) ஆகும் .இந்த மென்பொருளின் மூலம் 50 என்ன ஒரே நேரத்தில் 500 பக்கங்களை கூட எளிதாக ஸ்கேன் செய்யலாம் . அதோடு ஸ்கேன் செய்த பக்கங்களை எளிதாக ( .pdf , .tiff , .psd ) போன்ற வடிவத்துக்கு மாற்றிக் கொள்ளலாம் .பல்வேறு ஸ்கேன் மென்பொருட்களை விட குறைந்த அளவான நேரத்திலயே எளிதாக இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் .எந்த ஒரு scanner ஐயும் இந்த மென்பொருள் மூலம் எளிதாக உபயோகப்படுத்தலாம் .அலுவலகம் மற்றும் வீட்டுத்தேவை இரண்டுக்கும் இந்த மென்பொருள் ஏற்றது .நீங்கள் பல்வேறு கோப்பு மற்றும் படங்களை அடிக்கடி ஸ்கேன் செய்பவராக இருந்தால் இந்த மென்பொருள் நிச்சயம் உங்களுக்கே . கீழே சொடுக்கி தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் .
0 comments:
Post a Comment