Tamil Computer Tips and Tricks

Google-Translate-Chinese (Simplified) BETA Google-Translate-English to French Google-Translate-English to German Google-Translate-English to Italian Google-Translate-English to Japanese BETA Google-Translate-English to Korean BETA Google-Translate-English to Russian BETA Google-Translate-English to Spanish

Saturday, April 30, 2011

WINDOWS Shortcut KEYS

நீங்கள் கட்டாயம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய சில ஷார்ட்கட் கீ தொகுப்புகள் இங்கு தரப்பட்டுள்ளன. இவற்றை மனப்பாடம் செய்ய வேண்டாம். அடிக்கடி பயன்படுத்துங்கள். பின்  எப்போது கேட்டாலும் இவற்றை நீங்கள் சரியாகச் சொல்வீர்கள்.



1. CTRL+C (Copy): தேர்ந்தெடுத்தடெக்ஸ்ட், படம், பைல் என எதனையும் காப்பி செய்திட; காப்பி 

    செய்ததை அடுத்து எந்த இடத்திலும் எந்த பைலிலும் ஒட்டிக் கொள்ளலாம்.

2. CTRL+X (Cut): தேர்ந்தெடுத்தடெக்ஸ்ட், படம், பைல் என எதனையும் நீக்கிட; நீக்கப்பட்டவை  

    கிளிப் போர்டு மெமரியில் இருக்கும் அதனை பேஸ்ட் செய்து கொள்ளலாம்.

3. CTRL+V (Paste): ஏற்கனவே தேர்ந்தெடுத் ததை, கட் செய்ததை பேஸ்ட் செய்திட; இதற்குப் 

    பதிலாக இன்ஸெர்ட் கீயையும் பயன்படுத்தலாம்.

4. CTRL+Z (Undo): சற்று முன் மேற்கொண்ட செயலை மாற்றி பழைய நிலைக்குக் கொண்டு வர.

5. DELETE (Delete): எதனையும் அழித்துவிட; இதனை மீண்டும் கொண்டு வர ரீசைக்கிள் பின்னில் 

    தேட வேண்டும்; தேடிப் பெறாமல் பேஸ்ட் செய்திட முடியாது.

6. SHIFT+DELETE: நிரந்தரமாக அழித்துவிட; இந்த கட்டளை மூலம் அழிக்கையில் அது ரீ சைக்கிள்

    பின்னுக்குப் போகாது.

7. F2 Key: பைல் ஒன்றின் பெயரை மாற்றிப் புதிய பெயரிட.

8. CTRL+RIGHT ARROW: ஒவ்வொரு சொல்லாக கர்சரைக் கொண்டு செல்ல.

9. CTRL+UP ARROW: முந்தைய பாராவின் முதல் தொடக்கத்திற்குக் கொண்டு செல்ல.

10. CTRL: இந்த கீயை அழுத்திக் கொண்டு மவுஸை இழுத்தால் அதில் அடைபடும் டெக்ஸ்ட் 

      அல்லது படம் செலக்ட் செய்யப்படும்.

11. CTRL+DOWN ARROW: அடுத்த பாராவில் தொடக்கத்திற்குக் கொண்டு செல்ல.

12. SHIFT: இந்த கீயை அழுத்தியவாறே ஆரோ கீகளை அழுத்தினால் தொடர்ந்து கூடுதலாக

      வரிகளோ, எழுத்தோ பாராவோ செலக்ட் ஆகும்.

ஒரு சிடி அல்லது டிவிடியை அதன் ட்ரேயில் செலுத்தியபின் அதில் உள்ள ஆட்டோமெடிக் ஸ்டார்ட் அதனை இயக்கும். அந்த இயக்கத்தை நிறுத்த வேண்டுமாயின் இந்த கீயை சிடியை ட்ரேயில் வைத்து தள்ளிவிட்டபின் அழுத்திக் கொண்டிருக்க வேண்டும்.

13. CTRL+A: அனைத்தும் செலக்ட் செய்திட.

14. F3 Key: பைல் அல்லது போல்டரைத் தேட.

15. ALT+ENTER: தேர்ந்தெடுக்கப்பட்ட பைலின் புராபர்ட்டீஸ் விண்டோ காட்டப் படும்; இதில் பைல்

       குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.

16. ALT+F4: அப்போது இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராமை மூடலாம்.

17. ALT+SPACEBAR: எந்த விண்டோ இயங்கிக் கொண்டிருக்கிறதோ அதற்கான ஷார்ட் கட் 

     திறக்கப்படும்.

18. CTRL+F4: ஒரே நேரத்தில் பல டாகுமெண்ட்களைத் திறந்து பணியாற்றிக் கொண்டிருக்கையில் 

      நீங்கள் அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் பைலை மூடுவதற்கு உதவும்.

19. ALT+TAB: திறந்திருக்கும் புரோகிராம்களில் ஒவ்வொன்றாகச் செல்ல உதவும்; எந்த புரோகிராம்

       தேவையோ அதில் கர்சரை நிறுத்தி என்டர் செய்தால் அந்த புரோகிராம் திறக்கப்படும்.

20. ALT+ESC: டாஸ்க் பாரில் திறக்கப் பட்டுள்ள புரோகிராம் டேப்களில் ஒவ்வொன்றாகச் 

        செல்லும்; தேவையான புரோகிராம் தேர்ந்தெடுக்கப்படுகையில் கிளிக் அல்லது என்டர் 
        செய்தால் அந்த புரோகிராமில் உள்ள பைல் ஸ்கிரீனில் காட்டப்படும்.

21. CTRL+ESC : ஸ்டார்ட் மெனு திறக்க.

22. F10 Key: ஒரு மெனுபாரினை இந்த கீ இயக்கத் தொடங்கும்.

23. ESC: அப்போதைய செயல்பாட்டினைக் கேன்சல் செய்திடும்


0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Tamil Computer Tips

Popular Posts