Tamil Computer Tips and Tricks

Google-Translate-Chinese (Simplified) BETA Google-Translate-English to French Google-Translate-English to German Google-Translate-English to Italian Google-Translate-English to Japanese BETA Google-Translate-English to Korean BETA Google-Translate-English to Russian BETA Google-Translate-English to Spanish

Wednesday, April 6, 2011

தமிழ் மொழியில் ஓப்ரா பிறவுஸர் தொகுப்பு

கூகுளின் குரோம் பிரவுசர் சந்தையில் வெளியான பின், பிரவுசர் சந்தையில் பலமான சுறுசுறுப்பு ஏற்பட்டுள்ளது. அதன் எதிரொலி தான் அண்மையில் வெளியான ஓப்பரா பிரவுசர் பதிப்பு 9.6. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பிற்கு பதிலாக முதன் முதலாக பலர் நாடிய தொகுப்பு ஓப்பரா பிரவுசராகும். இன்டர்நெட் பிரவுஸ் செய்வதற்கு ஓப்பரா பிரவுசரை பயன் படுத்தும் அனைவரும் அதுதான் மிகச்சிறந்த பிரவுசர் என அதற்கான பல அம்சங்களை எடுத்துச் சொல்வது வழக்கம்.
இருந்தபோதும், குரோம் வெளியான போது ஏற்பட்ட சலசலப்பு ஒருபோதும் ஓப்பராவிற்கு ஏற்பட்டதில்லை. தொடர்ந்து மறைவிலேயே பேசப்படாமல் இருந்த ஓப்பராவிற்கு புதிய பரிமாணங்கள் தரப் பட்டுள்ளன. இத்தொகுப்பின் டெஸ்க்டாப் பதிப்பு 9.6 தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் தற்போது கிடைக்கின்றன.
இதன் மொபைல் பிரவுசர் பதிப்பான ஓப்பரா மினியை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் மூன்றாவது இடத்தை இந்தியா பெற்றுள்ளதால் ஓப்பரா பிரவுசர் தயாரிப் பவர்கள், இந்திய மொழிகளில் ஆர்வம் கொண்டு அவற்றை வடிவமைத்துள்ளனர்.
தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் கிடைக்கும் வசதியுடன், இதனை கொம்ப் யூட்டர் மற்றும் மொபைல் போன்களில் உள்ள இமெயில் கிளையண்ட் புரோகிராம் களுடன் இணைந்தும் பயன்படுத்தலாம்.
டெஸ்க்டாப் கொம்ப்யூட்டர்களுக்கான பதிப்பினை http://www.opera.com என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்தும், மொபைல் போனுக்கான பதிப்பினை www.operamini.com/pc/generic/genericadvanced midp2/ என்ற தளத்திலிருந்தும் இலவசமாக இறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
ஓப்பராவின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:
* ஆப்பரா லிங்க் பயன்படுத்தி பல்வேறு கொம்ப்யூட்டர்களிடையே புக்மார்க்குகளை சிங்க்ரைனைஸ் செய்திடலாம்.
* இணையத் திருடர்களிடமிருந்து உங்கள் பெர்சனல் தகவல்களை காப்பாற்றும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
* படங்களை தேவைப்பட்டால் மட்டுமே கொடுப்பதன் மூலம் பேண்ட்வித் திறனை காப்பாற்றுகிறது.
* இதன் டவுண்லோட் மேனேஜர் டவுண்லோட் செய்யப்படுகையில் இடைவெளி ஏற்பட்டால் விட்ட இடத்திலிருந்து தொடர்கிறது.
* ஓப்பரா 9.6 குறைந்த மெமரி உள்ள பழைய கொம்ப்யூட்டர்களில் சிறப்பாக இயங்குகிறது.
* முழுத் திரையையும் பயன்படுத்தி இணையதளங்களை காட்டும் திறனும் இதற்கு உள்ளது.
* ஓப்பரா முழுமையான ஓப்பன் சோர்ஸ் புரோகிராமாக இருக்காது.
ஏனெனில், அனைத்து பிரவுசர்களுமே ஒரே மாதி?யாக இருந்துவிட்டால் பின் போட்டியும், அதனால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் அனுபவ?ம் கிடைக்காமல் போய்விடும்.
போட்டி இருந்தால் தான் ஒன்று மற்றவற்றை காட்டிலும் நல்லது என்று தெரிய வரும்.
* ஓப்பரா பிரவுசர் ஐபோனில் கிடைக்காது. ஓப்பரா பல காலமாக தந்து வந்த அம்சங்களையே காட்டி பயர்பாக்ஸ் அல்லது குரோம் ஆகியவை மீடியாக்கள் மூலமாக சலசலப்பை ஏற்படுத்திய போது ஓப்பரா என்றும் அமைதியாகவே இருந்தது.
ஆனால், வாடிக்கையாளர்களிடையே செய்தி பரவியதால் குரோம் வெளியானபோது, ஓப்பராவை டவுண்லோட் செய்தவர்கள் எண்ணிக்கை 20% உயர்ந்தது. ஒவ்வொரு போட்டி பிரவுசரும் வெளியாகும் போது இது நடப்பது வாடிக்கையாகிவிட்டது.
* ஒவ்வொரு முறை போட்டி பிரவுசர் வருகையிலும், அதனை ஒரு பயமுறுத்தலாகத்தான் ஆப்பரா எடுத்துக்கொள்கிறது.
ஆனால், பிரவுசர் வருகையில் ஆப்பராவின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்கிறது. ஏனெனில், புதிய பிரவுசர்களின் செயல்பாட்டை பற்றி குறிப்பிடுகையில் மீடியாக்களும், மக்களும் ஆப்பராவை பற்றி அதிகம் பேசுகின்றனர்.
*பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை பொறுத்தவரை, ஆப்பராவினை 2.5 கோடியிலிருந்து 3 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். மொபைல் போனுக்கான பிரவுசரை பொறுத்தவரை ஓப்பரா மினி மற்றும் ஓப்பரா மொபைல் முன்னணியில் உள்ளது.
* ஓப்பரா மினி மற்றும் ஓப்பரா மொபைல் பிரவுசர்கள் மிகக்குறைந்த அளவிலான பேண்ட் வித் கொண்டு இயங்கும் மொபைல் போன்களில் கூட நல்ல பிரவுசிங் அனுபவத்தை தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்கை பயர் போன்ற பிரவுசர்கள் அதிக அளவிலான பேண்ட் வித் மற்றும் அதிகளவில் டேட்டா வினை கையாளும் திட்டங்களை கொண்டுள்ளவர்களுக்கு உதவிடும் வகையில் உள்ளது. ஓப்பரா பிரவுசர்களுக்கு குறைந்த பேண்ட் வித் உள்ளபோது சிறப்பாக செயல்படும். அதிக பேண்ட்வித் கிடைக்கும்போது இன்னும் திறனுடன் செயல்படுகிறது.
* இதுவரை இல்லாத வகையில் மக்கள் அதிகமான நேரத்தை ஆன்லைனில் செலவிடுகிறார்கள். டெலிவிஷனில் செலவிடும் நேரத்தை காட்டிலும் இன்டர்நெட் பயன்படுத்துதல் கூடுதல் என்று சொன்னால் அது மிகையாகாது. இதனால், பிரவுசரின் பயன்பாட்டில் பல புதிய பரிமாணங்கள் உருவாகி வருகின்றன.
இதனால், ஓப்பரேட்டிங் சிஸ்டத்தின் முக்கியத்துவம் குறைந்து வருகிறது.
அதாவது, ஓப்பரேட்டிங் சிஸ்டங்களில் புதிய வழிகளோ, வகைகளோ ஏற்படுவது இல்லை.
http://www.opera.com
http://www.operamini.com

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Tamil Computer Tips

Popular Posts