Tamil Computer Tips and Tricks

Google-Translate-Chinese (Simplified) BETA Google-Translate-English to French Google-Translate-English to German Google-Translate-English to Italian Google-Translate-English to Japanese BETA Google-Translate-English to Korean BETA Google-Translate-English to Russian BETA Google-Translate-English to Spanish

Thursday, April 7, 2011

டிபிராக்(Defrag) புரோகிராமினை டவுன்லோட் செய்வது எப்படி?


கொம்ப்யூட்டரில் பைல்களை தொடர்ந்து எழுதுவதும், அழிப்பதுமாக இருக்கையில், அவை தொடர்ச்சியாக ஹார்ட் டிஸ்க்கில் எழுதப்படுவதில்லை. ஏனெனில், அவ்வப்போது பைல்களை அழிக்கையில் ஏற்படும் வெற்றிடங்கள் தொடர்ச்சியாகஅடுத்த பைலுக்கு கிடைப்பதில்லை.இதனைசரி செய்திட விண்டோஸ் நமக்கு டிபிராக் (Defrag) என்னும் புரோகிராமினைத் தந்துள்ளது.இதன் மூலம் துண்டு துண்டாக ஹார்ட் டிஸ்க்கில் எழுதப்படும் புரோ கிராம்கள் மீண்டும் ஓரளவிற்கு தொடர்ச்சியாக எழுதப் படுகின்றன.
இவ்வாறு எழுதப்பட்ட பின் இந்த பைல்களை ஹார்ட் டிஸ்க்கில் இருந்து படிப்பது விரைவாக நடக்கிறது. எனவே, இந்த டிபிராக் செயல்பாட்டினை பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் ஹார்ட் டிஸ்க்கில் வெற்றிடங்கள் சிதறலாக இல்லாமல் தொடர்ச்சியாக நமக்கு கிடைக்கிறது.
ஆனால்,ஒரு முறை டிபிராக் செய்திட கொம்ப்யூட்டர் பிராசசரின் வேகம் மற்றும் ஏற்கனவே பைல்கள் ஹார்ட் டிஸ்கில் எழுதப்பட்ட விதம் ஆகியவற்றின் அடிப் படையில் நேரம் எடுத்துக் கொள்ளப்படும். இது சில வேளைகளில் நம் பொறுமையை சோதிக்கும் வகையில் இருக்கும். அந்த நேரத்தில் நம்மால் வேறு எந்த வேலையை யும் கொம்ப்யூட்டரில் மேற்கொள்ள முடியாது.இவ்வாறு இல்லாமல், எப்போதெல்லாம் கொம்ப்யூட்டரில் எந்த செயல்பாடும் மேற்கொள்ளப்படாமல், ஃபைல்கள் எதுவும் எழுதப்படாமல் இருக்கும் நேரத்தில், பின்னணியில் இந்த டிபிராக் செயல்பாடு தானாகவே மேற்கொள்ளப்பட்டால் நமக்கு நேரம் மிச்சமாகும். இரண்டாவதாக டிபிராக் உடனுக்குடன் செய்யப்படுவதால் புரோ கிராம்களையும், ஃபைல்களையும் இயக்கு வது வேகமாகவும் எளிதாகவும் மேற் கொள்ளப்படும். இந்த வேலையைத் தான் Smart Defrag  செய்கிறது. இது ஒரு இலவசமாக டவுண்லோட் செய்யப்படக் கூடிய புரோகிராமாகும். இதனைப் பதிந்து விட்டால் எப்போதெல்லாம் கொம்ப்யூட்டர் சும்மா இருக்கிறதோ, அப்போதெல்லாம் ஸ்மார்ட்டி பிராக் செயல்பட்டு ஹார்ட் டிஸ்க்கை ஒழுங்கு செய்கிறது. மீண்டும் கொம்ப்யூட்டரில் பணியாற்றத் தொடங்கிய வுடன் தற்காலிகமாக தன் செயல்பாட்டினை நிறுத்தி வைக்கிறது.
நீங்கள் உங்கள் வேலையை நிறுத்தும் வரை காத்திருக்கிறது. பின், மீண்டும் நீங்கள் வேலையை நிறுத்தியவுடன் தன் பணியை விட்ட இடத்தில் இருந்து தொடர்கிறது.
இதனால்,கொம்ப்யூட்டரைடிபிராக் செய்வது குறித்து கவலை கொள்ள தேவையில்லை.
இந்த புரோகிராமை பின்னணியில் இயங்கச் செய்துவிட்டு, நம் விருப்பம் போல் கொம்ப்யூட்டரை இயக்கி கொண்டிருக்கலாம்.
நம்முடைய கொம்பியூட்டர் ட்யூன் செய்யப்பட்டு எப்போதும், விரைவாகவும், எளிதாகவும் இயங்கும். இந்தபுரோகிராமினை http://www.download.com/Smart-Defrag/3000-2094_4-10759533.html என்ற இணையதள முகவரியில் டவுண்லோட் செய்து கொள்ளலாம்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Tamil Computer Tips

Popular Posts