நாம் பயன்படுத்தும் பிரவுசர்கள் இணையதளத்தில் நாம் பார்க்கும் வெப்சைட்களின் முகவரிகளை பட்டியல் இட்டு பிரவுசிங் ஹிஸ்டரி என்ற பெயரில் போட்டு வைக்கிறது.
இதனால், நாம் அந்த பட்டியலுக்கு சென்று குறிப்பிட்ட வெப்சைட் வேண்டுமெனில் அதை கிளிக் செய்து பெற முடிகிறது. ஆனால் ஒரே தளத்தின் பல பிரிவுகளில் செல்கையில் இணையதள முகவரியில் ஓரிரு மாற்றங்கள் மட்டுமே ஏற்படுத்தப்படுவதால் எந்த முகவரியில் எதைப் பார்த்தோம் என்ற சிறிய குழப்பம் ஏற்படுகிறது.
இதனால், நாம் தேவையற்ற வகையில் அனைத்தையும் திறந்து பார்த்து மூட வேண்டியுள்ளது. இதற்கு பதிலாக நாம் பார்த்த ஒவ்வொரு இணையதள?ம் சிறிய படங்களாக இருந்தால் நன்றாக இருக்குமே என நினைக்க தோன்றும். அதைத் தான் வெப் மைண்ட் என்ற ஆட் ஆன் புரோகிராம் செய்கிறது.
ஒவ்வொரு தளத்தையும் ஸ்நாப் ஷாட் எனப்படும் வகையில் சிறிய படங்களாக பதிந்து வைக்கிறது. இதன் மூலம் பிரவுசிங் ஹிஸ்டரியை பார்க்கும்போது நாம் பார்த்த தளத்தின் சிறிய படத்தினை காணமுடிகிறது.
ஹிஸ்டரி மட்டுமின்றி, இந்த ஆட் ஆன் புரோகிராம், கூகுள் தேடுதல் இஞ்சின் மூலம் தேடும்போது அது வெப்மைண்ட் மற்றும் delicious பிரிவையும் இணைத்து தேடி முடிவுகளைத் தருகிறது. இது பயர்பாக்ஸ் பிரவுசருக்கான ஆட் ஆன் புரோகிராம் என்பதை நினைவில் கொள்ளவும்.
இதனை http://www.webmynd.com/html/ என்ற முகவரியிலிருந்து பெறலாம்.
0 comments:
Post a Comment