ஒவ்வொரு கணனிக்கும் தனித்தனி IP எண்கள் இருக்கும். இந்த IP எண்ணை வைத்தே இந்த கணனியை யார் உபயோகிக்கிறார்கள், எந்த இன்டர்நெட் connection உபயோகிக்கிறார்கள், அவர்களின் தொடர்பு மெயில்கள் ஆகியவைகளை சுலபமாக அறியலாம்.
விவரங்களை அறிய
1. முதலில் இந்த மென்பொருளை உங்கள் கணனியில் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
2. இந்த மென்பொருளை தரவிறக்கியவுடன் நேரடியாக உபயோகிக்கிலாம். உங்கள் கணனியில் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை.
3. இந்த மென்பொருளை ஓபன் செய்தவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
4. இது போல் உங்கள் IP எண்ணை கொடுத்தவுடன் கீழே உள்ள OK என்ற பட்டனை அழுத்தி விடுங்கள்.
5. அவ்வளவு தான் இனி நீங்கள் கொடுத்த IP எண்ணின் அனைத்து விவரங்களும் சுலபமாக அறிந்து கொள்ளலாம்.
6. இது போல தங்களுக்கு நீங்கள் கொடுத்த IP யின் மேலதிக விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.
7. ஒருவேளை தங்களுக்கு உங்கள் கணினியின் IP எண் தெரியவில்லை எனில் கவலை வேண்டாம். இந்த மென்பொருளில் HELP மெனுவில் சென்று அங்கு உள்ள Show my current Ip address கிளிக் செய்தால் உங்கள் கணனி இணையத்தோடு இணைக்கப்பட்டு உங்கள் IP நம்பர் கிடைக்கும்.
8. அந்த எண்ணை காப்பி செய்து கொண்டு இந்த மென்பொருளில் பேஸ்ட் செய்து விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.
9. இனி நமக்கு வரும் மெயிலில் உள்ள IP யை வைத்தே அந்த மெயில் அனுப்பியவரின் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
1 comments:
உங்கள் இணையம் மிகவும் பிரயோசனமாக இருக்கிறது...
நண்பரே எனக்கு ஒரு விடயம் அறிந்து கொள்ளவேண்டும்
ஒருவர் எனக்கு ஒரு mail அனுப்பினால் அந்த மைலைவைத்து அவருடைய IP கண்டுபிடிப்பது எப்படி என்பதை கொஞ்சம் சொல்லி தரமுடியுமா ...
இது எனது mail :-
murshidh7@gmail .com
Post a Comment