நம்மில் பலரும், சக பதிவர்களின் இடுகைகளை Google Reader மூலமாக படித்து வருகிறோம். ஆனால் அவ்வப்பொழுது Google Reader தளத்திற்கு சென்று புதிய நண்பர்களின் இடுகைகள் ஏதெனும் உள்ளதா? என பார்த்து வருவது கொஞ்சம் அலுப்பு தரக்கூடிய விஷயமாக உள்ளது. இந்த பணியை எளிதாக்க.. Google Chrome உலாவிக்கான பயனுள்ள நீட்சி Google நிறுவனத்தின் Google Reader Notifier.
(தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது.) இந்த நீட்சியை உங்கள் க்ரோம் உலாவியில் பதிந்து கொண்ட பிறகு, மேலே உள்ள டூல்பாரில் இந்த நீட்சிக்கான ஐகான் தோன்றியிருப்பதை கவனிக்கலாம்.
க்ரோம் உலாவியில் நீங்கள் ஒரு முறை உங்கள் Google பயனர் கணக்கில் நுழைந்து விட்டால், உடனடியாக நீங்கள் படிக்காமல் Google Reader இல் உள்ள இடுகைகளின் எண்ணிக்கை இந்த ஐகானில் அப்டேட் செய்யப்படும். அத்தோடு இந்த ஐகானை க்ளிக் செய்தால், Google Reader இல் Un Read இடுகைகளின் லிங்குகள் Popup ஆகும்.
இந்த நீட்சியின் Options பகுதிக்கு சென்று கீழே உள்ள வசதியை நமது தேவைக்கு ஏற்றபடி மாற்றிக் கொள்ளலாம்.
0 comments:
Post a Comment