Tamil Computer Tips and Tricks

Google-Translate-Chinese (Simplified) BETA Google-Translate-English to French Google-Translate-English to German Google-Translate-English to Italian Google-Translate-English to Japanese BETA Google-Translate-English to Korean BETA Google-Translate-English to Russian BETA Google-Translate-English to Spanish

Thursday, April 7, 2011

புரோகிராம்களை நீக்கும் புரோகிராம்கள்


இணையத்திலிருந்தும், இமெயில் வழியாகவும் மற்றும் பிற
வழிகளிலிருந்தும் பல்வேறு புரோகிராம்களை நம்
கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்கிறோம். பயன்படுத்திப்
பார்த்துவிட்டு அல்லது சில நாள் பழகிப் பார்த்துவிட்டு
இது எதற்கு என்று நீக்க விரும்புகிறோம். ஒரு சிலர் அது
பாட்டுக்கு இருந்துட்டுப் போகட்டும் என
விட்டுவிடுவார்கள். ஆனால் நீக்க விரும்புபவர்கள்
அதற்கான வழிகளை நாடுவார்கள்.

இவர்களுக்கு சில வழிகளை அந்த புரோகிராம் அல்லது
கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தருகிறது.சில
புரோகிராம்களில் அவற்றின் லிஸ்டிங் மெனுவிலேயே
தணடிணண்tச்டூடூ என்று ஒரு பிரிவு இருக்கும். அதனைக் கிளிக்
செய்தால் புரோகிராமினைச் சரியாக நீக்கிவிடும். சார்ந்த
எந்த இயக்க பைல்களும் கம்ப்யூட்டரில் தங்காது. ஏனென்றால்
புரோகிராமினை வடிவமைத்தவர்கள் சரியாக இந்த அன் இன்ஸ்டால்
புரோகிராமினை வடிவமைத்திருப்பார்கள். இரண்டாவதாக இன்னொரு
வழி இருக்கிறது. கண்ட்ரோல் பேனல் சென்று
Add or Remove Programs
பிரிவு சென்று
அங்கு பயன்படுத்தும் புரோகிராமின் பிரிவைக் கண்டுபிடித்து
எதிரே உள்ள கட்டத்தில் ரிமூவ் என்ற இடத்தில் கிளிக்
செய்தால் உடனே அன் இன்ஸ்டால் புரோகிராம் இயக்கப்பட்டு
புரோகிராம் நீக்கப்படும். இதில் என்ன சிக்கல் என்றால் ஒரு
சில பைல்களை கோடிட்டுக் காட்டி இந்த பைல் மற்ற
புரோகிராம்களினாலும் பங்கிட்டுக் கொள்ளப்படுகிறது;அழிக்காமல் விட்டுவிட்டால் கம்ப்யூட்டர் இயக்கத்திற்குத்
தீங்கு விளைவிக்காது; அழிக்கவா, விட்டுவிடவா என்ற
கேள்வியுடன் ஒரு டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதைக் கண்டவுடன்
நாம் சற்று திகைப்போம். இருந்தாலும் எதற்கு வம்பு என்று
அந்த பைலை அழிக்காமல் விட்டுவிடுவோம். சில வேளைகளில்
புரோகிராம் முழுமையாக நீக்கப்படாமல் ஒரு சில பைல்கள் தேங்கி
விடும். சில வேளைகளில் ஒரு சில புரோகிராம்களை நீக்குவதற்கு
மேலே சொல்லப்பட்ட இரண்டு வழிகளுமே கிடைக்காது.



இந்நிலையில் என்ன செய்வது? இதற்கு கை கொடுக்கத்தான்
புரோகிராம்களை நீக்கும் புரோகிராம்கள் இணையத்தில்
கிடைக்கின்றன. இவை இரண்டு வகைப் படுகின்றன. முதலாவதாக பயன்
பாடு போல அவற்றிலும் மேம்படுத்தப்பட்ட புரோகிராம்கள் சில
உள்ளன. இந்த புரோகிராம்கள் உங்கள் கம்ப்யூட்டரை
முழுமையாகப் படித்து என்ன என்ன புரோகிராம்கள் உங்கள்
கம்ப்யூட்டரில் உள்ளன என்று முழுவதுமாகப் படித்துப்
பார்த்து பட்டியலிடுகின்றன. இந்த புரோகிராம்கள் மூலமாக ஒரு
புதிய புரோகிராமை இன்ஸ்டால் மற்றும் அன் இன்ஸ்டால்
செய்திடலாம்.



இன்ஸ்டால் செய்திடும் முன் இந்த புரோகிராம் கம்ப்யூட்டரில்
உள்ளவற்றை ஒரு போட்டோ மாதிரி எடுத்து வைத்துக் கொள்கிறது.
பின் அன் இன்ஸ்டால் செய்திடுகையில் மீண்டும் ஒரு முறை
போட்டோ போல எடுத்து எவை எல்லாம் மாறி இருக்கின்றன என்று
கணக் கிட்டு, அதன் அடிப்படையில் நீக்க வேண்டியவற்றை
நீக்குகிறது. இரண்டாவதாக கிடைப்பது மிக அருமையாக நீக்கும்
மற்றும் பதியும் வேலையை மேற்கொள்கிறது. நீக்கும் நேரத்தில்
அந்த புரோகிராம் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும். ஆனல் இந்த
புரோகிராம் இன்னொரு புரோகிராமினை நீக்குகையில் சற்று நேரம்
எடுக்கிறது. கீழே ஒவ்வொரு வகைக்குமாக இரண்டு புரோகிராம்கள்
எடுத்துக் காட்டுக்களாகத் தரப்படுகிறது.

1. 1.) MyUninstaller :
www.nirsoft.net/utils/
myuninst.htmlஎன்ற முகவரி உள்ள தளத்தில் இந்த புரோகிராம்
கிடைக்கிறது. இந்த தளத்தைப் பார்த்தவுடன் எங்கே
புரோகிராமைக் காணோமே என்று கலவரப் பட வேண்டாம். இந்த தளம்
சற்று நீளமான பக்கத்தை ஹோம் பேஜாகக் கொண்டது. கீழாக நன்கு
ஸ்குரோல் செய்து சென்று இந்த புரோகிராமிற்கான லிங்க்கைக்
காணலாம். (http://www.nirsoft.net/utils/myuninst.zip) இதனை உங்கள் ஹார்ட் டிரைவில் டவுண்லோட் செய்து அந்த ஸிப் பைலில் இருந்து
“myunist.exe”
என்ற பைலை எக்ஸ்ட்ராக்ட் செய்திடவும். இந்த பைல் தான் நமக்கு இன்ஸ்டால் / அன் இன்ஸ்டால் செய்திடும் பணியை மேற்கொள்ளும் புரோகிராம் ஆகும். இந்த பைலை இன்ஸ்டால் செய்திட வேண்டியதில்லை.


அப்படியே கம்ப்யூட்டரில் இயங்கும். இதனை இயக்கியவுடனேயே உங்கள்
கம்ப்யூட்டரில் என்ன என்ன புரோகிராம் உள்ளது. அவை சார்ந்த
மற்ற புரோகிராம்கள் என்ன என்ன என்ற பட்டியலுடன் ஒரு டயலாக்
பாக்ஸ் கிடைக்கும். அத்துடன் அந்த பக்கத்தில் இரண்டு
ஐகான்களை மேலாகக் காணலாம். முதல் ஐகான் மூலம் வழக்கமான
வகையில் ஒரு புரோகிராமினை அன் இன்ஸ்டால் செய்திடலாம்.
அடுத்த ஐகான் ஏற்கனவே அன் இன்ஸ்டால் செய்யப்பட்ட
புரோகிராமின் மிச்ச மீதி பதிவுகளை, பைல்கள் இருந்தால்
அவற்றை, நீக்குவதற்கென தரப்பட்டுள்ளது. பெரும்பாலும்
ரெஜிஸ்ட்ரியில் உள்ள பதிவுகள் நீக்கப்படமால் இருந்தால்
அவற்றை இந்த ஐகானைக் கிளிக் செய்வதன் மூலம் நீக்கலாம்.
ரெஜிஸ்ட்ரி என்றவுடன் கவலைப் பட வேண்டாம். இந்த புரோகிராம்
அதனைச் சரியாக மேற்கொண்டு உங்களுக்கு எந்தவிதமான
பிரச்னையும் இன்றிப் பார்த்துக் கொள்ளும்.

2. ZSoft Uninstaller:

இனி அடுத்த வகை அன் இன்ஸ்டால் புரோகிராமினைப் பார்க்கலாம்.
இந்த புரோகிராமினைப் பெற

http://www.zsoft.dk/
என்ற முகவரியில் உள்ள
தளம் செல்லவும். இந்த புரோகிராமின் சோதனை தொகுப்பிற்கான
தளம் இது. இங்கு கிளிக் செய்தால் அது இன்னொரு தளத்திற்கு
உங்களை எடுத்துச் செல்கிறது. பின் மீண்டும் ஒரு தளம் சென்று
இறுதியாக
http://www.download.com/
என்ற முகவரியில் உள்ள டவுண்லோட் செயல்களுக்கான
பொதுவான தளத்திற்குச் செல்வீர்கள். இவ்வழியில் சென்று
டவுண்லோட் செய்து பின் வழக்கம்போல டவுண்லோட் செய்திடவும்.
இந்த புரோகிராம் மூலம் வழக்கமான வழியில் ஒரு புரோகிராமினை
அன் இன்ஸ்டால் செய்திடலாம். ஆனால் ஒரு ஐட்டத்தைத்
தேர்ந்தெடுத்து அதில் ரைட் கிளிக் செய்தால் புரோகிராம்
குறித்த கூடுதல் தகவல் கிடைக்கிறது. அன் இன்ஸ்டால்
செய்திடும் ஆப்ஷன் குறித்து இது என்ன சொல்கிறது என்று
பார்ப்போம். முதலில் Analyze பட்டனில் கிளிக் செய்திடவும். உடன் சில ஆப்ஷன்ஸ் கிடைக்கும். நீங்கள் இன்ஸ்டால் செய்வதாக இருந்தால்
“Analyze an installation.”
என்ற முதல் பட்டனில் கிளிக் செய்திடவும். இதன் பின் எந்த டிரைவ் அல்லது டிரைவ்களை அனலைஸ் செய்திட வேண்டும் எனக் குறிப்பிட வேண்டும். பொதுவாக இது சி டிரைவாகத்தான் இருக்கும். இதனைத் தேர்ந்தெடுத்தவுடன் புரோகிராம் மெதுவாக உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பைல்கள் மற்றும் ரெஜிஸ்ட்ரியில் உள்ள பதிவுகள் ஆகியவற்றை ஆய்வு செய்திடும்.

இதன் மூலம் இன்ஸ்டலேஷன் அல்லது அன் இன்ஸ்டலேஷன் பணிகளுக்கு முன் உள்ள நிலை குறித்த ஒரு போட்டோகிராபிக் ஐடியா ஒரு பைலாக
உருவாக்கிக் கொள்ளப்படுகிறது. தொடர்ந்து புரோகிராம்
இயங்குகையில் புதிய புரோகிராமின் இன்ஸ்டலேஷனைத் தொடங்கலாம்.
இந்த பணி முடிந்தவுடன் மீண்டும் ZSoft Uninstaller சென்று After Installation பட்டனைத் தட்டவும். மறுபடியும் அதே வரிசையில் செயல்பாடு தொடங்கப்படும். இப்போதும் ஒரு போட்டோகிராபிக் வியூவில் பைல்கள் குறித்த பைல் ஒன்று தயாரிக்கப்படும். அடுத்து இன்ஸ்டலேஷனுக்கு ஒரு
பெயர் வழங்கச் சொல்லி புரோகிராம் கேட்கும். புரோகிராம் உடனே
வேகமாக ஒரு கணக்குப் போட்டு தானே மூடிக் கொள்ளும். சரி, அன்
இன்ஸ்டலேஷன் எப்படி என்று பார்ப்போமா! மீண்டும்
ZSoft Uninstaller
என்பதில் தொடங்கவும்.
மெயின் ஸ்கிரீனில் Analyzed Programs என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அன்
இன்ஸ்டால் செய்ய வேண்டிய புரோகிராமினைத் தேர்ந்தெடுக்கவும்.
பின் ரைட் கிளிக் செய்திடவும். அதன் பின் க்ணடிணண்tச்டூடூ
என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். உடனே பல பாக்ஸ்களைப்
பார்க்கலாம். இதில் எல்லாம் நீங்கள் அவை கேட்கும்
கேள்விகளுக்கேற்ப டிக் அடையாளம் ஏற்படுத்த வேண்டும். இவை
மட்டுமின்றி இறுதியாக கீழே “I don’t want to confirm every delete” என்று
இருக்கும் பாக்ஸிலும் டிக் அடையாளம் ஏற்படுத்த வேண்டும்.
இல்லை என்றால் புரோகிராம் அழிக்கும் ஒவ்வொரு பைலுக்கும்
அதனை ஆமோதிக்க வேண்டும். எனவே இதனை முதலிலேயே
அழுத்திவிட்டால் முழுமையான அன் இன்ஸ்டால் ஆகிவிடும். இஸட்
சாப்ட் இன்ஸ்டாலர் இன்னும் பல புதுமைகளைக் கொண்டுள்ளது.
அதன் ஹெல்ப் பட்டனை அழுத்தினால் அவற்றை அறிந்து
பயன்படுத்தலாம்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Tamil Computer Tips

Popular Posts