Tamil Computer Tips and Tricks

Google-Translate-Chinese (Simplified) BETA Google-Translate-English to French Google-Translate-English to German Google-Translate-English to Italian Google-Translate-English to Japanese BETA Google-Translate-English to Korean BETA Google-Translate-English to Russian BETA Google-Translate-English to Spanish

Wednesday, April 6, 2011

வந்துவிட்டது அதிவேக ஓபரா பிரவுசர்


பிரவுசர் போட்டியில் பல்வேறு புதிய வசதிகளுடன் எப்போதும் ஓபரா அறிமுகமாகும். எனினும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பொக்ஸ், குரோம் பிரவுசர்களுக்குக் கிடைக்கும் விளம்பரம் மற்றும் பரபரப்பு இதற்குக் கிடைப்பதில்லை. ஆனால், இன்று பிரவுசர்களில் அதிக வசதிகளை ஓபரா தான் முதலில் வடிவமைத்தது என்பது அதன் சிறப்பு. டேப் பயன்பாடு, பக்கங்களுக்கான தம்ப்நெயில் உருவாக்கம், இணையப் பக் கங்களில் ஹெச்.டி.எம்.எல்.5 தொழில் நுட் பம் போன்ற புதிய வரை முறைகள் ஆகியவற்றை ஓபராதான் முதலில் கொண்டு வந்தது. இதேபோல், இப்போது வெளி யிடப்பட்டுள்ள பிரவுசரிலும் பல புதிய வச திகளைக் கொண்டுள்ளது.
ஓபரா தனக்கெனப் பல வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.
தொடர்ந்து இவர்கள் ஓபராவினையே பயன்படுத்தி வருகின்றனர். அண்மையில் வெளியாகியுள்ள ஓபரா 10 நிச்சயம் இதன் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளிப்பதாகவே இருக் கும்.
இதன் சிறப்பை இங்கு பட்டியலிடலாம்.
முதலில் இதன் வேகத்தைக் கூற வேண் டும்.

இது செயற்படும் தன்மை, முதன் முதலில் கூகுள் குரோம் பிரவுசரை இயக்கிய போது ஏற்பட்ட உணர்வைத் தருகிறது. மிக வேகமாக இது இயங்குகிறது. இதற்கு முன்னால் வந்த 9.6 பதிப்பைக் காட்டிலும் 40 சத வீதம் அதிகம் எனக் கணக் கிடப்பட்டுள்ளது.

மற்றப்படி இன்றைக்கு வருகின்ற பிரவுசர்களில் இருக்கும் புதிய வசதிகள் பல இதிலும் உள்ளன. பொப் அப் பிளாக்கர், ப்ளக் இன் வசதிகள், ஆர்.எஸ்.எஸ்.ரீடர், பிஷ்ஷிங் தடுக்கும் வசதி எனப் பல வசதிகள் இதில் கிடைக்கின்றன. மற்ற சில பிரவுசர்களில் இல்லாத இமெயில் கிளையண்ட் புரோகிராம் தரப்பட்டுள்ளது. இதில், பி.ஒ.பி.3 மற்றும் ஐ-மேம் மெயில் வசதி உள்ளது. இதனால், நீங்கள் உங்கள் பி.ஒ.பி.,3 மெயில்களை இந்த பிரவுசர் முலமாகவே கொம்ப்யூட்டருக்கு இறக் கிக்கொள்ளலாம். அனைத்து வசதிகளையும் பயன்படுத்த எளிதான யூசர் இன்டர்பேஸ் தரப்பட்டுள்ளது இதன் இன்னொரு சிறப்பு. இதன் டேப்களை அமைக்கும் வசதி சிறப்பாக உள்ளது. ஒவ்வொரு டேப்பின் மேலாக அதன் தளக்காட்சியினை ஒரு தம்ப் நெயில் படமாக அமைத்துக்கொள்ளலாம்.
இது ஒரு புதிய உத்தியாகும். மேலும், இவை அமைந்துள்ள டேப் பாரின் வலது இடதாக இழுத்து அமைத்துக்கொள்ளலாம்.
இப்போது கிடைக்கும் மிக அகல மானிட்டர் வைத்தி ருப்பவர்களுக்கு இது உதவியாக இருக்கும். அடுத்த சிறப்பு, இதன் ஸ்பீட் டயல் வசதி யாகும். நீங்கள் அடிக்கடி திறந்து பார்க்க விரும்பும் டேப்பிற்கான தளத்தினை அடுத் துப் பார்க்கும் 4 முதல் 24 தளங்களின் மேலாக, ஒரு தம்ப்நெயில் படமாக வைத்துக் கொள்ளலாம். எப்போதெல்லாம் அத்தளத்தைப் பார்க்க விரும்புகிறீர்களோ, அதனை கிளிக் செய்து தளத்திற்கு செல்லலாம்.

இந்த வசதி டிபால்ட் டாகக் கிடைக்கிறது. இதன் மற்றொரு குறிப்பிடத் தக்க வசதி, இதிலுள்ள இன்லைன் ஸ்பெல் செக்கர் வசதி. இது பிளாக்குளை அமைப்பவர்களுக்கு உதவி யாக இருக்கும். இதில், புதுமையாக ஓபரா டர்போ என்ற பேஜ் கம்ப்ரஸன் தொழில் நுட் பம் பயன்படுத்தப்படுகிறது.
இதன்முலம் டயல் அப் வகை இன்டர்நெட் இணைப்பில் கூட, வேகமாக பிரவுசிங் செய்திட முடியும். இணைய இணைப்பின் வேகம் குறையும் போது, இந்த தொழில்நுட்பம் அதனைக் கண்டறிந்து, இணையதளங்களை ஓபராவின் சர்வர்களில் கம்ப்ரஸ் செய்து பின் தருகிறது.

இதனால், டேட்டா குறைவாக இறக்கம் செய்யப்பட்டாலும், பின்னணியில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பக்கங்கள் கிடைக்கும். இவை தவிர, இணையப் பக்கங் களை வடிவமைப்பவர்களுக்குத் தொழில் ரீதியான ஆலோசனைகளையும், ஓபரா தந்துள்ளது.

ஆனால், ஒரே ஒரு முக்கியமான வசதி இல்லை என்பதை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். இப்போதைய பிரவுசர்கள் தரும் பிரைவேட் பிரவுசிங் வசதி இதில் இல்லை. இந்த வசதி இருந்தால் நாம் பிரவுசிங் செய்த தளங்கள் குறித்த குறிப்புகள் பிரவு சரில் தங்காது. பிரவுசரை மூடியவுடன் நீக் கப்படும். இந்த வசதியை ஓபரா பிரவுசர் தர வில்லை. எனவே இந்த வசதி கட்டாயம் வேண்டும் என்பவர்கள் இதன் பக்கம் போக வேண்டாம்.

உங்களுக்கு ஓபரா பிரவுசர் தேவையெ னில், கீழ்காணும் முகவரிக்கு சென்று டவுண் லோட் செய்துகொள்ளலாம்.
அனைத்து வகையான ஓப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கான பைல் இங்கு இலவசமாக கிடைக்கும்.

http://www.opera.com/browser/download/

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Tamil Computer Tips

Popular Posts