Tamil Computer Tips and Tricks

Google-Translate-Chinese (Simplified) BETA Google-Translate-English to French Google-Translate-English to German Google-Translate-English to Italian Google-Translate-English to Japanese BETA Google-Translate-English to Korean BETA Google-Translate-English to Russian BETA Google-Translate-English to Spanish

Wednesday, April 6, 2011

நார்டன் தரும் புதிய தொகுப்புகள்

வைரஸ்களுக்கு எதிரான தொகுப்புகளைத் தயாரித்து வழங்குவதில் முன்னணியில் இயங்கும் நார்டன் நிறுவனம் அடுத்த ஆண்டு வெளியிட இருக்கும் தொகுப்புகளின் சோதனைத் தொகுப்புகளை வாடிக்கையாளர்களுக்கென தன் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

Norton Internet Security 2009 மற்றும் Norton AntiVirus 2009 என இவை அழைக்கப்படுகின்றன. ஏற்கனவே உள்ள தொகுப்புகளின் மீதாக ஏறத்தாழ 300 புதிய வசதிகள் இதில் தரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது




பொதுவாக நார்டன் தொகுப்பு என்றாலே இன்ஸ்டால் செய்யும் நேரத்தில் சாப்பாட்டை முடித்துவிடலாம் என்று டெக்னீஷியன்கள் கூறுவார்கள். இந்த சலிப்பைப் போக்கும் வகையில் ஒரே நிமிடத்தில் இன்ஸ்டலேஷன் செய்து முடிக்கும் வகையில் தொகுப்பு அமைக்கப் பட்டுள்ளது. அதே போல வேகமாக இணைக்கப்படும் அப்டேட் தொகுப்புகள், குறைந்த அளவில் மெமரியைப் பயன்படுத்திச் செயல்படும் பைல்கள் என புதிய கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதே போல நேரத்தைத் தேவையில்லாமல் செலவழிப்பதனைக் குறைக்கும் பொருட்டு பைல்களை ஸ்கேனிங் செய்திடுகையில் வழக்கமாகக் கம்ப்யூட் டரில் காணப்படும் நம்பிக்கைக் குரிய பைல்களை ஸ்கேன் செய்வதனைத் தவிர்த்துவிடும் வகையில் வைரஸ் ஸ்கேனிங் செயல்முறை வழி அமைக்கப் பட்டுள்ளது.


வைரஸ்களுக்கு எதிரான பாதுகாப்பு பின்னணியில் செயல்படுகையில் கம்ப்யூட்டரின் இயக்கச் செயல்பாடுகள் வழக்கமான வேகத்தில் நடைபெற இயலாது. இது பொதுவாக அனைத்து ஆண்டி வைரஸ் தொகுப்புகளுக்கும் பொதுவான செயல்முறையாகும். இதனைப் புதிய தொகுப்புகள் தவிர்த்துள்ளன. எங்களுடைய இலக்கு உலகிலேயே மிக வேகமாக இயங்கி வைரஸ்களுக்கு எதிரான பாதுகாப்பு தரும் பேக்கேஜ்களைத் தருவதுதான் என்று இந்நிறுவனத்தின் நுகர்வோர் பொருட்கள் பிரிவு துணைத் தலைவர் ரோவன் தெரிவித்துள்ளார். சில புதிய வசதிகளாகக் கீழ்க்கண்டவற்றைக் காணலாம்.



அமைதியான இயக்கம்: (Silent mode) நாள் ஆகிவிட்டது, அப்டேட் செய்யலையா என்றெல்லாம் எச்சரிக்கை செய்தி வழங்கி நாம் ஆர்வத்துடன் கம்ப்யூட்டரில் விளையாடுகையிலும் வீடியோ பார்த்துக் கொண்டிருக்கையிலும் அல்லது முக்கியமான செயல்பாட்டில் இருக்கையிலும் நம்மை எரிச்சல் படுத்தும் வழக்கம் இனி இருக்காது. தானாக அமைதியாக இயங்கி அப்டேட் செய்திடும்.

எளிமையான பயனாளர் வழி நடத்தல்: (Simplified user interface) தெளிவாகவும் கூடுதலாகவும் தகவல்களைத் தந்து செட்டிங்ஸ் அமைத்து செயல்பாட் டின் நிலையை தெரிந்து அறிவித்தல்.



நார்டன் பாதுகாப்பு ஒருங்கு முறை: (Norton Protection System) வைரஸ்கள் தாக்கி தீயவிளைவினை ஏற்படுத்தும் முன் இயங்கி அவற்றைத் தடுத்தல். இது பல நிலைகளில் செயல்படுகிறது. நீ கோலத்தில் இருந்தால் நான் தடுக்கில் வருவேன் என்று சொல்கிற மாதிரி இன்டர்நெட் தள பைல்களில் எதிர்பார்க்காத வழிகளில் வைரஸ்கள் தங்கள் செயல்பாட்டினைக் காட்டும். இதற்கென ஒரு நிலையில் செயல்பாடு மேற்கொள்ளும் வகையில் இந்த தொகுப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எப்போதும் அனைத்து நிலைகளிலும் பாதுகாப்பு, தெரியாமல் ஊடுருவும் வழிகளில் காவல், அடிப்படை செயல்பாட்டு வழிகளில் தடுக்கும் முறைகள், வைரஸ் மற்றும் ஸ்பை வேர் களுக்கு எதிரான ஸ்பெஷல் தொழில் நுட்பங்கள் எனப் பல புதிய கோணங்களிலும் நிலைகளிலும் பாதுகாப்பு தரும் வகைகளில் தொகுப்பு தயாரிக்கப்பட்டுள்ளது.


தனிநபர் தகவல் பாதுகாப்பு: (Norton Identity Safe) இன்டர்நெட் மூலமாக நாம் தரும் நம்முடைய தனிநபர் தகவல்களைப் (பாஸ்வேர்ட், வங்கி எண், வாங்கும் பொருட்களின் விபரம், வங்கியுடனான பண பரிமாற்ற தகவல்கள்) பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்கென்றே புதிய பைல்கள் அமைக்கப்பட்டு அவை எந்நேரமும் செயல்படும் வகையில் தரப்பட்டுள்ளன.


தனி வலைப்பின்னல் சாதனங்கள் கண்காணிப்பு: (Home Networking feature) நாம் நமக்கென அமைத்து வைத்திருக்கும் சிறிய அளவிலான சாதனங்கள் இணைப்பில் ஒவ்வொரு சாதனமும் எப்படி இயங்குகின்றன என்று கண்காணிக்க தனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தகவல் திருட்டு தொகுப்பு எதிர்ப்பு: (AntiBot features) நம்முடைய பெர்சனல் கம்ப்யூட்டரில் வந்து அமர்ந்து கொண்டு நம் கம்ப்யூட்டரின் கட்டுப்பாட்டைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளும் தொகுப்புகளை அண்டவிடாமல் செய்திடும் வசதிகள் தரப்பட்டுள்ளன. மேலே உள்ள வசதிகளுடன் கூடிய சோதனைத் தொகுப்புகளைக் கமப்யூட்டர் பயன்படுத்தும் யாவரும் இறக்கிச் சோதித்துப் பார்க்கும் வகையில் http://www.symantec.com/nortonbeta/ என்னும் முகவரியில் உள்ள தளத்தில் தரப் பட் டுள்ளன. டவுண்லோட் செய்திடும் முன் அத்தளம் தரும் அனைத்து செய்திகளையும் படித்து பின் டவுண்லோட் செய்திடவும்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Tamil Computer Tips

Popular Posts