Tamil Computer Tips and Tricks

Google-Translate-Chinese (Simplified) BETA Google-Translate-English to French Google-Translate-English to German Google-Translate-English to Italian Google-Translate-English to Japanese BETA Google-Translate-English to Korean BETA Google-Translate-English to Russian BETA Google-Translate-English to Spanish

Wednesday, April 6, 2011

ஒன்றுக்கு இரண்டாய் வைரஸ் புரோகிராம்

பல வாசகர்கள் தங்கள் கம்ப்யூட்டரில் ஒரே நேரத்தில் இரண்டு ஆண்டி வைரஸ் புரோகிராம்களை பின்னணியில் இயக்கலாமா என்று எழுதிக் கேட்டுள்ளனர். இதற்கு சுருக்கமாய் பதில் சொல்வதென்றால் "கூடாது; ஒன்றுக்கு இரண்டாய் இத்தகைய புரோகிராம்களை இயக்கக் கூடாது”..’
ஏன்? கூடாது என்பதற்கு விளக்கம் சொல்ல வேண்டும் அல்லவா? இதோ. இது கொஞ்சம் சீரியஸ் மேட்டர் தான். பொதுவாக யாருமே நாம் வீட்டுக்கு ஒன்றுக்கு இரண்டு, மூன்று எனப் பூட்டு போடுவதில்லையா? அது போல இரண்டு வைரஸ் புரோகிராம் இருந்தால் என்ன? என்று கேட்கலாம். ஒன்றுக்கு அகப்படாத வைரஸ் இன்னொன்றுக்கு அகப்படுமே என்று நீங்கள் எண்ணலாம். ஆனால் அது சரியல்ல. ஆர்க்யுமெண்ட் சரிதான். ஆனால் கொஞ்சம் உள்ளே பார்த்தால் உண்மை விளங்கும். ஒன்றுக்கு மேற்பட்ட வைரஸ் புரோகிராம்கள் மட்டுமல்ல, ஒரே புரோகிராமின் பல்வேறு பதிப்புகள் இருந்தால் கூட அவை நமக்கு பிரச்னை தரும். அவை என்ன?
1. கம்ப்யூட்டர் மெமரி காலியாகுதே! ஒன்றுக்கு மேற்பட்ட புரோகிராம் ஒரே வேலையைச் செய்தாலும் அவை கம்ப்யூட்டர் மெமரியில் எடுத்துக் கொள்ளும் இடம் அநாவசியம் தானே. இதனால் மற்ற புரோகிராம்களுக்கு மெமரி இடம் கிடைப்பது தடைப்படுகிறதே.
2. ஆண்டி வைரஸ் புரோகிராம்கள் வைரஸ் ஒன்றின் குறியீடுகளைக் கொண்டு இன்னொன்றைக் கண்டு பிடிக்கின்றன. எனவே ஒரு புரோகிராமின் குறியீட்டை இன்னொரு புரோகிராம் அது வைரஸ் என்று தவறான செய்தியைக் கொடுத்து உங்களைக் கலவரப்படுத்தும் "நீங்கள் என்ன நினைப்பீர்கள்?" ஒன்றுக்கு இரண்டு இருந்தும் இது போல வைரஸ் உள்ளதே என்று எண்ணுவீர்கள். இன்னொன்றை வைரஸ் என எண்ணி அந்த புரோகிராமினை அழித்துவிட்டால் அடுத்த முறை அது இயங்காது. உடனே வைரஸ் வந்து ஆண்டி வைரஸ் புரோகிராமினை அழித்துவிட்டது என மீண்டும் பயப்படுவீர்கள் அல்லவா!
எனவே ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்டி வைரஸ் புரோகிராம் இருந்தால் ஒன்றை அன் இன்ஸ்டால் செய்துவிடுவதே நல்லது. சரி, எதைக் கொள்வது? எதை விடுவது? என்று அடுத்த குழப்பம் ஏற்படுமே! இதற்கு வழி என்ன?
எடுத்துக் காட்டாக மேக் அபி மற்றும் நார்டன் ஆண்டி வைரஸ் இருப்பதாக வைத்துக் கொள்வோம். இதில் எதை வைத்துக் கொள்ளலாம்? இரண்டுமே சரியானவை தான். எனவே வேறு சில கேள்விகளை மனதில் வைத்து இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். எது குறைந்த விலை? அப்கிரேட் செய்வதற்கு எது குறைந்த கட்டணத்தை வசூலிக்கிறது. இதனை அடிப்படையாகக் கொண்டும் ஆண்டி வைரஸ் புரோகிராமினை செலக்ட் செய்திடலாம். இந்த நேரத்தில் சில ஆண்டி வைரஸ்கள் இலவசமாகக் கிடைப்பதனையும் நீங்கள் மனதில் கொள்ள வேண்டும்.
எதை நீக்க வேண்டும் என்பதனை முடிவு செய்த பின் Start, Control Panel, Add/Remove Programs என்று பட்டியலில் நீக்க வேண்டிய புரோகிராம் கண்டுபிடித்து, பின் கீஞுட்ணிதிஞு மீது கிளிக் செய்து நீக்கலாம். இவ்வாறு செய்வதால் அதிக மெமரியைக் கம்ப்யூட்டர் பயன்படுத்த கொடுத்து நீங்கள் நல்லது செய்கிறீர்கள். இதற்குப் பிறகும் வைரஸ் வந்துவிடுமோ என்று கவலைப் படுகிறீர்களா? எதை வைத்துக் கொண்டிருக்கிறீர்களோ அதனைச் சரியான காலத்தில் அப்டேட் செய்து கொள்ளுங்கள். அவ்வப்போது இயக்கி வைரஸ் இருந்தால் நீக்கி விடுங்கள்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Tamil Computer Tips

Popular Posts