ஒரு பதிவராக நீங்கள் இருக்கும் பட்சத்தில், உங்களது இடுகைக்கு வருகின்ற பின்னூட்டங்கள், மட்டுறுத்தப்பட்டிருந்தாலும் இல்லையெனிலும், அதற்கான அறிவிப்பு மின்னஞ்சல் (ஏற்கனவே பிளாக்கர் செட்டிங்க்ஸ் கொடுத்திருப்பதனால்) மூலமாக உங்கள் ஜிமெயிலுக்கு வரும். அதனோடு சேர்த்து உங்களுக்கு வரும் தனிப்பட்ட மின்னஞ்சல்களும் இருக்கும்.
ஒரு சில சமயங்களில் இந்த பின்னூட்டங்களுக்கான மின்னஞ்சல்கள் நிறைய சேர்ந்து விடும். இவற்றை மட்டும் மொத்தமாக தேர்வு செய்து எப்படி டெலிட் செய்வது என்பதை பார்க்கலாம். உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொண்டு, Search Mail பட்டனுக்கு முன்பு உள்ள பெட்டியில் new comment on your post என டைப் செய்து Search Mail பொத்தானை க்ளிக் செய்யுங்கள்.
இப்பொழுது, பின்னூட்டங்கள் சம்பந்தப்பட்ட மின்னஞ்சல்கள் மட்டும் பட்டியலில் கிடைக்கும். இவற்றை மொத்தமாக தேர்வு செய்து டெலிட் செய்து கொள்ளலாம்.
இதே முறையில் தேவைப்படும் மின்ன்னஞ்சல்களை எளிதாக கையாள முடியும். இதென்ன மொக்கையான இடுகை என்று கேட்பவர்கள், தலைப்பில் புதியவர்களுக்கு என்று குறிப்பிட்டிருப்பதை கவனித்து விட்டு, ஓட்டு போட்டு செல்லவும்..
0 comments:
Post a Comment