பயர்பாக்ஸ் பிரவுசருக்கென ஆயிரக்கணக்கில் ஆட் ஆன் புரோகிராம்கள் இருப்பது போல, குரோம் பிரவுசருக்கும் பல கூடுதல் வசதிகளைத் தரும் புரோகிராம்கள், இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. இவற்றை எக்ஸ்டென்ஷன் புரோகிராம்கள் என அழைக்கின்றனர். குரோம் பதிப்பு 4 அண்மையில் வெளியான போது, இது போன்ற புதிய வசதிகள் 1,500 இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த புரோகிராம்கள், நாம் குரோம் பிரவுசர் வழியாக இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்கையில், கூடுதல் வேலைகளுக்கான வசதிகளை எளிதாகவும், எளிமையாகவும் தருகின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
பாப் அப் விண்டோவில் விக்கிபீடியா: ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பொருள் குறித்து விக்கிபீடியா தளம் சென்று தேடுபவரா நீங்கள்? நீங்கள் கூகுள் குரோம் பிரவுசரில், இன்டர்நெட் பிரவுசிங் செய்திடுகையில், விக்கிபீடியா பார்ப்பவராக இருந்தால், இனி புதிய டேப் அமைத்து, தளம் திறந்து பார்க்க வேண்டியதில்லை. பார்க்கின்ற தள விண்டோவிலேயே, ஒரு பாப் அப் விண்டோவில் விக்கிபீடியா தளத்தினைக் காணும் வசதி கிடைத்துள்ளது. விக்கிபீடியா கம்பேனியன் (Wikipedia Companion) என்னும் இந்த புதிய வசதி இந்த பாப் அப் விண்டோவைத் தருகிறது. விக்கிபீடியா கம்பேனியன் மூலம், குரோம் பிரவுசர் விண்டோவின் இடது பக்கத்தில் ஒரு விக்கிபீடியா பட்டன் ஒன்றை உருவாக்கலாம். மேலும் நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகள் சார்ந்த விக்கிபீடியா தளத்தினைப் பார்ப்பவராக இருந்தால், அதற்கான செட்டிங்ஸையும் மேற்கொண்டு, அதே பாப் அப் விண்டோவில் காணலாம். ஒரே கிளிக் மூலம் இதனை மேற்கொள்ளலாம்.
1. முதலில் கூகுள் குரோம் பிரவுசர் மூலம் கீழ்க்காணும் முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லுங்கள். https://chrome.google.com /extensions/detail/dhgpkiiipkgmckicafkhcihkcldbde. இந்த தளம் விக்கிபீடியா கம்பேனியன் என்னும் ஆட் ஆன் எக்ஸ்டென்ஷன் புரோகிராமினைக் கொண்டிருக்கும். அதில் உள்ள இன்ஸ்டால் பட்டனில் கிளிக் செய்தால், Confirm Installation என மீண்டும் ஒரு இன்ஸ்டால் பட்டன் தரப்படும். இதில் கிளிக் செய்தால், இந்த புரோகிராம் இன்ஸ்டால் ஆகும். இதன்பின் விக்கிபீடியா ஐகானைக் கிளிக் செய்து பிரவுசரைத் திறக்கவும். இதில் ஆப்ஷன்ஸ் என்னும் லிங்க்கினைக் கிளிக் செய்தால், எந்த மொழி விக்கிபீடியா முதன்மையானதாகவும் (Primary) எந்த மொழியில் உள்ள விக்கிபீடியா இரண்டாவது நிலையிலும் (Secondary) தேவைப்படும் என்பதனை செட் செய்திடலாம். விக்கிபீடியா தளத்தினை தனி டேப் மூலம் திறக்க விரும்பினாலும், அதன்படி செட் செய்திடலாம்.
2. பிரவுசரில் நோட்பேட் : இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்கையில், சிறிய குறிப்புகளை எழுத எண்ணுகிறீர்கள். இதற்கென நோட்பேட், வேர்ட்பேட் அல்லது வேறு ஒரு வேர்ட் ப்ராசசரைத் திறந்து, குறிப்புகளை அமைப்பது என்றால், அது சுற்றி வளைத்து வேலை பார்ப்பதாக இருக்கும். இருப்பினும் வேறு வழியில்லை. இந்த சிக்கலைத் தீர்ப்பதற்காக, குரோம் பிரவுசருக்குள்ளாகவே நோட்பேட் இயங்கும் வகையில் ஒரு எக்ஸ்டென்ஷன் புரோகிராம் கிடைக்கிற. குரோம்பேட் (Chrome Pad) என்பது இதன் பெயர். https://chrome.google.com/e xtensions/detail/kodgendbhboaendecabighpnngpodeij என்ற முகவரியில் உள்ள தளத்தில் இந்த புரோகிராமினைப் பெறலாம். இங்கு சென்று அங்குள்ள Install பட்டனில் கிளிக் செய்தால், Confirm Installation என மீண்டும் ஒரு Install பட்டன் தரப்படும். இதில் கிளிக் செய்தால், இந்த புரோகிராம் இன்ஸ்டால் ஆகும். இதன்பின் சிறிய பேட் உங்கள் குறிப்புகளுக்கென கிடைக்கும்.
3.யு–டியூப் சர்ச்: கூகுள் குரோம் பிரவுசரில் ஏதேனும் ஒரு தளத்தினைக் காண்கையில், அந்த பொருள் குறித்த வீடியோ ஏதேனும் யு–டியூப் தளத்தில் உள்ளதா என்று அறிய விரும்பலாம். அப்போது புதிய டேப் ஒன்றைத் திறந்து, அதில் யு–டியூப் தளம் சென்று தேட வேண்டிய திருக்கும். அல்லது சர்ச் பாக்ஸில் உங்கள் வீடியோ குறித்த சொல் கொடுத்துத் தேடிப் பின் மீண்டும் அந்த தளம் செல்ல வேண்டியதிருக்கும். இந்த வேலைப் பளுவினைக் குறைக்கும் வகையில் "Fast YouTube Search" என்னும் எக்ஸ்டென்ஷன் புரோகிராம் ஒன்று தரப்பட்டுள்ளது. இதன் மூலம் யு–டியூப் சர்ச் பட்டன் ஒன்றை பிரவுசரில் ஒட்ட வைத்துக் கொள்ளலாம். இந்த எக்ஸ்டென்ஷன் புரோகிராமினைப் பெற https://chrome.google .com/extensions/detail/ggkljdkflooidjlkahdnfgodflkelkai என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். இங்கு சென்று அங்குள்ள Install பட்டனில் கிளிக் செய்தால், Confirm Installation என மீண்டும் ஒரு Install பட்டன் தரப்படும். இதில் கிளிக் செய்தால், இந்த புரோகிராம் இன்ஸ்டால் ஆகும். பின் அட்ரஸ் பார் வலது பக்கத்தில் "YouTube" என்று ஒரு பட்டன் கிடைக்கும். இதில் கிளிக் செய்தால்,சர்ச் பாக்ஸ் ஒன்று தரப்படும். இதில் உங்கள் தேடுதல் சொற்களை அமைத்துத் தேடவும். அதன்பின் மேக்னிபையிங் கிளாஸ் பட்டனில் கிளிக் செய்து சம்பந்தப்பட்ட வீடியோக்களைக் காணலாம். உங்கள் தேடுதல் சொற்களை அமைக்கும்போதே, அதற்கான சில கூடுதல் குறிப்புகளும் காட்டப்படும்.
4. கால்குலேட்டர்: கூகுள் தேடல் இஞ்சினில் கால்குலேட்டர் இணைந்தே வருகிறது. இதில் சில அடிப்படை கணக்குகள், கரன்சி மாற்றும் கணக்குகள், அளவை அலகு மாற்றங்கள் ஆகியவற்றைக் கணக் கிடலாம். இருப்பினும், ஏதேனும் ஒரு இன்டர்நெட் வெப்சைட்டில் இருக்கையில், அதனை விட்டு இன்னொரு டேப்பில் கூகுள் தேடல் தளம் சென்று, கால்குலேட்டரை இயக்குவது சிரமமாகும். இதனைத் தீர்க்க குரோமி கால்குலேட்டர் ("Chromey Calculator") என்னும் எக்ஸ்டென்ஷன் புரோகிராம் ஒன்று தரப்பட்டுள்ளது. இதன் மூலம் கால்குலேட்டர் பட்டன் ஒன்றை, நேரடியாக குரோம் பிரவுசரிலேயே அமைக்கலாம்.இதில் கிளிக் செய்வதன் மூலம் கூகுளின் கால்குலேட்டரைப் பெற்று இயக்கலாம். இந்த கால்குலேட்டரில் சில மதிப்புகளை (Values) குறியீடுகளுக்கு பொருத்தி கணக்கிடலாம்.
இந்த எக்ஸ்டென்ஷனைப் பெற்று இயக்க https://chrome.google.com/ extensions/detail/acgimceffoceigocablmjdpebeodphgc என்னும் முகவரியில் உள்ள தளம் செல்லவும். மேலே கூறப்பட்டுள்ளபடியே இங்கும் இன்ஸ்டால் செய்திடவும். "Chromey Calculator" இன்ஸ்டால் செய்யப்படும். அட்ரஸ் பாரில் இதற்கான பட்டன் கிடைக்கும். இதனை அழுத்தி கால்குலேட்டரைப் பெற்று இயக்கலாம்.
5. டேப்பில் ரைட் கிளிக் மெனு: இது எக்ஸ்டென்ஷன் புரோகிராம் குறித்தது அல்ல. டேப்கள் செயல்பாடு குறித்தது. கூகுள் குரோம் பிரவுசரில் உள்ள டேப்களில் ரைட் கிளிக் செய்து, கூடுதல் டேப் செயல்பாடுகளுக்கான வசதிகளைப் பெறலாம். இதில் உள்ள டேப்பில் ரைட் கிளிக் செய்தால் மெனு ஒன்று கிடைக்கும். அதில் கீழ்க்காணும் வசதிகள் தரப்படும். அவை:
Duplicate: அப்போது பார்த்துக் கொண்டிருக்கும் தளத் தகவல்கள் இன்னும் ஒரு கூகுள் குரோம் விண்டோவில் நகலாகக் கிடைக்கும்.
Close other Tabs: அப்போதைய டேப் தவிர, மீதம் உள்ள டேப்களில் உள்ள தளங்கள் அனைத்தும் மூடப்படும்.
Close Tabs to the Right: அப்போது தேர்ந்தெடுத்து கிளிக் செய்யப்படும் டேப்பிற்கு வலது பக்கம் உள்ள டேப்கள் அனைத்தும் மூடப்படும்.
Reload: அந்த டேப்பில் உள்ள தளத்தினை மீண்டும் லோட் செய்திடும். இதனை Ctrl + R அழுத்தியும் பெறலாம்.
Close Tab: அந்த டேப்பில் உள்ள தளத்தினை மூடும்.
விண்டோஸ்: சிங்கிள் மவுஸ் கிளிக்
விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் மவுஸை சிங்கிள் கிளிக் மவுஸாக மாற்றுவது எப்படி என்று வெகு காலம் முன் டிப்ஸாக எழுதி இருந்தேன். அண்மையில் வாசகர் ஒருவர் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7ல் இதனை எப்படி மேற்கொள்வது என்று கேட்டு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி இருந்தார். அப்புறம் தான் இதனை எப்படி மேற்கொள்ளலாம் என்று நான் தேடிப் பார்த்தேன். கிடைத்த தகவல்கள் இதோ! விஸ்டாவில் Start>Control Panel செல்லவும். இதில் கிளாசிக் வியூ இருப்பதனை உறுதி செய்து கொள்ளவும். இல்லை என்றால் மாற்றவும். அதன் பின் "Folder Options" என்பதில் கிளிக் செய்திடவும். விண்டோஸ் 7ல் Start கிளிக் செய்து சர்ச் பாக்ஸில் "Folder Options" என டைப் செய்து என்டர் அழுத்தவும். "Singleclick to open an item" என்பது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதா என்பதனை உறுதிப்படுத்தவும். பின் Apply என்பதில் கிளிக் செய்து, ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
Tuesday, March 29, 2011
குரோம் எக்ஸ்டென்ஷன் வசதிகள்
LoVe Me LoNg TiMe1
No comments
Tamil Computer Tips
-
▼
2011
(372)
-
▼
March
(275)
- Windows XP ® மொழி இடைமுகத் தொகுப்பு
- Windows Vista மொழி இடைமுகத் தொகுப்பு
- Windows 7 மொழி இடைமுகத் தொகுப்பு
- internet download manager free download
- Internet speed test for free
- Recover the files from a deleted data
- download the website as pdf
- download web designing ebook in tamil
- உங்கள் கணினியை auto shutdown செய்ய
- video chatting இல் background மாற்ற
- Vista Transformation Pack
- wireless password தொலைந்து விட்டதா ?
- வித விதமான 500 தமிழ் எழுத்துருக்கள் (fonts ) - இலவ...
- பல்வேறு கோப்புகளை எளிதாக scan செய்ய
- இலவச mp3 ஆல்பம் எடிட்டர்
- பெரிய கோப்புகள் மற்றும் தகவல்களை எளிதாக மின் அஞ்சல...
- உங்கள் பேஸ் புக் பயனர் கணக்கை ஹாக்கர்களிடம் இருந்த...
- ஃபார்மேட் செய்ய போறீங்களா?
- கணிணி வேகத்தை அதிகரிக்க செய்ய கணிணி வேகம் அதிகரிக்...
- உங்கள் கணினியை வேகமாக Boot ஆக உங்கள் கணினியை வேகமா...
- கணினி பாஸ்வேர்ட் மறந்து போனால் உங்கள் கணினி பாஸ்வே...
- கணினி பயன்பாட்டு வேகம் அதிகரிக்க
- Saturday, May 15, 2010 பழுதடைந்த CD / DVD களை இயக்...
- கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள்
- TURN ON YOUR PC IN 10 SECONDS (Easy Method )
- how to Reset your Windows password [ Simple Method ]
- Virus வந்த pen drive ஐ Format பாதுகாப்பது செய்வது ...
- HACK செய்யப்பட்ட GOOGLE ACCOUNT ஐ மீட்பது எப்படி
- உங்கள் கணினி Registry Clean செய்ய Wise Registry Cl...
- கணினியில் உருவாகும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு
- TASK MANAGER HAS BEEB DISABLED க்கு ஒரு தீர்வு
- கணினியில் USB PORT ஐ DISABLE செய்வது எப்படி
- உங்கள் softwareக்கு இலவச serial number வேண்டுமா
- virus தாக்கிய fileஐ திரும்ப பெறுவது எப்படி
- Free Download Avast Antivirus 6.0 2011
- கணினியை பராமரிக்கும் வழி முறைகள்
- விண்டோஸ் shortcut keys
- gmail(ஜிமெயில்)shartcut keywords
- இப்படியும் உங்கள் passwordஐ திருடப்படலாம்
- Task Manager has been disabled by your administrator
- Open office சாப்ட்வேர் டவுண்லோட்
- How to change video file format
- இலவசமாக பேக்ஸ் அனுப்ப உதவும் இணையதளங்கள்
- கணினியில் startup programme ஐ எப்படி disable செய்வது
- USB storage devices பயன்பாட்டை ஐ எப்படி disable/en...
- விண்டோஸ் 7 ஷார்ட்கட் Keys
- விண்டோஸ் 7 இல் confirmation dialog box ஐ எப்படி de...
- இலவச AVG ஆண்டி வைரஸ் 2011
- விண்டோஸ் 7 SHORTCUT KEYS
- கணினி திரையை படம் பிடிக்கும் FREE SOFTWARES
- WINDOWS XP யில் பயன்படுத்தும் பல்வேறு வகையான RUN C...
- FILE'S மற்றும் FOLDER களை PASSWORD மூலம் LOCK செய்...
- YOUTUBE VIDEO வை DOWNLOAD செய்யும் மென்பொருள்
- folder ஐ ஒரே click இல் open பண்ணுங்க
- INTERNET EXPLORER FONT SIZEஐ எப்படி மாற்றலாம்
- WINDOWS VISTA வில் INTERNET மற்றும் DOWNLOAD SPEED...
- windows 7 இல் delete confirmation dialog boxஐ எப்ப...
- WORD 2007இல் SHORT KEY எப்படி பயன்படுத்தலாம்
- WINDOWS XP யில் COMPRESS FILE களை DISK CLEAN UP செ...
- விண்டோஸ் XP மற்றும் VISTA இல் STARTUP PROGRAMஐ DIS...
- கணினியை shutdown செய்ய அதிக நேரம் எடுத்துகொள்கிறதா
- HOW TO CREATE MULTIBLE GOOGLE TALK
- HOW INCREASE YOUR COMPUTER PERFORMANCE THROUGH MY ...
- உங்களுடைய SOFTWARE ஐ LOCK செய்துக்கொள்ளலாம்
- கணினியில் CACHE MEMORY யை அதிகரிக்க சில டிப்ஸ்
- HOW TO SPEED UP IN WINDOWS XP
- எளிதாக கம்ப்யூட்டரை assembling செய்ய கற்றுக்கொள்ளலாம்
- Kaspersky Internet Security 2011 11.0.0.204 Free D...
- நமது கம்ப்யூட்டர் TROJAN VIRUS ஆல் பாதிக்கப்பட்டால...
- உங்கள் கணினியில் DON'T SEND ERROR REPORT MESSAGE வ...
- உங்களுடைய FIREFOX ன் SPEED INCREASE செய்ய
- photoshop தமிழில் கற்றுக்கொள்ளலாம்
- உங்களுடைய SOFTWAREக்கு SERIAL NO வேண்டுமா?
- COMPUTER MAINTANANCE TIPS-பராமரிக்கும் முறை
- கணினியில் USB DRIVE யின் செயல்பாட்டை முடக்கலாம்
- உங்களது கணினியில் உள்ள anti virus work ஆகிறதா?எப்ப...
- FILEகளைஐ அழிக்க முடியவில்லையா
- INTERNET EXPLORERஐ வேகமாக இயங்க வைப்பது எப்படி?
- VIRUS இருக்கா? இல்லையா? எப்படி கண்டறிவது
- computer password மறந்து போனால் சில வழி
- COPMPUTER ஐ எப்படி FORMAT செய்வது
- உங்கள் COPMPUTER ஐ வேகமாக Boot ஆக சில வழிமுறைகள்
- உங்கள் COPMPUTER ஐ சுத்தப்படுத்த சில வழிகள்
- COMPUTER பழுதுபார்க்கும் 60 SOFTWARE ஒரே மென்பொருள...
- VIDEO CONVETER இலவச SOFTWARES பதிவிறக்கம் செய்ய
- உங்களுடைய TEXT FILE களை பேச வைக்கலாம்
- FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE செய்வதை தடுக்க
- கணினி (COMPUTER) TIPS
- Online இல்லாமல் எப்படி webpage பார்ப்பது
- Firefox 4.0 RC version Available
- உங்கள் Facebook நண்பர்கள் உலகம் முழுவதும் எங்கெல்ல...
- பிங் கூகிள் ரிசல்ட்- ஐ copy செய்கிறதா??
- How to create a Password Protected Folder
- எக்ஸெல் - குறிப்புகள்!
- நாள் குறித்து இமெயில் அனுப்பும் வசதி!
- கூகுளின் புதிய சோசியல்தளம் - Buzz
- குரோம் எக்ஸ்டென்ஷன் வசதிகள்
- கம்ப்யூட்டரை முறையாக இயக்கி உலக வெப்பமயம் ஆவதைத் த...
- விண்டோஸ் எக்ஸ்புளோரர்
- ஓபன் ஆபிஸ் சாப்ட்வேர் டவுண்லோட்!
-
▼
March
(275)
Popular Posts
-
நீங்க போட்டோஷாப் தமிழில் கற்கலாம்.உங்களுக்கு photoshop பற்றி நிறைய தெரியனும்னு அவசியம் இல்லைங்க கொஞ்சம் தெரிஞ்சாலே நாமும் photo edititni...
-
AIO - Computer Repair Utility Kit 2010 [60in1] Windows | Compatible with USB | Updated 2-2010 | 170 MB COMPUTER பயன்படுத்தும் அனைவருக்கு...
-
உங்கள் கணிபொறியில் problam வந்திடிச்சா கவலை வேண்டாம் ? நீங்கள் உங்கள் Hardware Engineer-ய் தொடர்பு கொள்ளவதற்கு முன் நீங்கலேஅதை சரி செ...
-
இன்று நாம் பார்க்க போகும் மென்பொருள் ஒரு சூப்பர் மென்பொருள். நம்முடைய மானிட்டரில் உயிருள்ள ஈக்கள் உலாவினால் எப்படி இருக்கும். மானிட்டர்ல எப...
-
நம்மிடத்தில் உள்ள சில முக்கியமான dataகளையும் மற்ற தகவல்களயும் வெளியே எடுத்து செல்ல நாம் பயன்படுதுவது CD,DVD அல்லது USB Drive போன்றவை ...
-
சில சமயம் நமக்கே தெரியாம நம்ம கணினிக்கு வைரஸ் வந்திடும் அது நம்மோட கணினி ஸ்பீட குறைச்சிடும் அதுமட்டும் இல்லாமல் கணினியின் செயல்பாட்டை கொஞ்சம...
-
நீங்கள் கட்டாயம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய சில ஷார்ட்கட் கீ தொகுப்புகள் இங்கு தரப்பட்டுள்ளன. இவற்றை மனப்பாடம் செய்ய வேண்டாம். அடிக்கடி ப...
-
Tamil is a Dravidian language spoken predominantly by Tamil people of the Indian subcontinent. It has official status in the Indian state...
-
வழக்கமாக நமது Facebook தளத்தின் தோற்றம் கீழே உள்ளது போன்று இருக்கும். ஆர்குட் போன்ற தளங்களில் நாம் Theme களை மாற்றுவது போல, Facebook தளத்...
-
வழமையான யுனிகோட் எழுத்துருவை பயன் படுத்தி அலுத்து விட்டதா ???அல்லது தமிழில் மிக அழகான மற்றும் வித்தியாசமான எழுத்துருக்களைப் பயன் படுத்த வி...
0 comments:
Post a Comment