Tamil Computer Tips and Tricks

Google-Translate-Chinese (Simplified) BETA Google-Translate-English to French Google-Translate-English to German Google-Translate-English to Italian Google-Translate-English to Japanese BETA Google-Translate-English to Korean BETA Google-Translate-English to Russian BETA Google-Translate-English to Spanish

Wednesday, March 30, 2011

கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள்


Friday, May 14, 2010


கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள்

நண்பர்களே அனைவருக்கும் வணக்கம். உலகத்தில் எத்தனையோ மென்பொருட்கள் இருந்தாலும் சில மென்பொருட்கள் நம் கணணியில் கட்டாயம் இருக்க வேண்டிய மென்பொருட்கள் என்று சில உண்டு.

அதன் பட்டியல் கீழே கொடுத்துள்ளேன். இல்லாதவர்கள் தரவிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள். உங்களிடம் இருந்தால் தரவிறக்கி நிறுவ வேண்டாம்.
சி சி கீளினர் (CCleaner)



இந்த மென்பொருள் இருந்தால் உங்கள் தேவையில்லாத இண்டெர்நெட் குக்கீஸ், மற்றும் தற்காலிக கோப்புகள், தேவையில்லாத கோப்புகள் அனைத்தும் நீக்கி விடும். அதுமட்டும் அல்ல இதில் தேவையில்லாத ரெஜிஸ்டரி கீகளையும் நீக்கி தரும். உங்களுக்கு தேவையில்லாத மென்பொருட்கள் நிறுவி இருந்தால் இதன் மூலம் நீக்க முடியும்.

மென்பொருள் தரவிறக்க
சுட்டி
டெஸ்க்டாப் டோபியா (DesktopTopia)


உங்கள் கணணியில் உள்ள டெஸ்க்டாப்பில் வால்பேப்பர்கள் தானாகவே மாற்ற இது உதவும்
சுட்டி
ஆடாசிட்டி (AudaCity)


இந்த மென்பொருள் உங்களிடம் உள்ள எம்பி3 இசைக்கோப்புகளை திறந்து இசையை நீங்கள் விரும்பியவாறு மாற்றம் செய்ய உதவுகிறது.
சுட்டி
அப்டேட் செக்கர் (Update Checker)



நீங்கள் கணணியில் நிறுவி உள்ள அனைத்து மென்பொருட்களுக்கும் ஏதாவது புதிய பதிப்பு வெளியிடப்பட்டால் தானாகவே உங்களிடம் தெரிவித்து தரவிறக்கி தந்து நிறுவி விடும்.
சுட்டி
லான்சி (Launchy)


இந்த மென்பொருள் மூலம் பலதரப்பட்ட மென்பொருட்களை இயங்க வைக்க முடியும்.
சுட்டி
விஎல்சி ப்ளேயர் (VLC Player)



இந்த மென்பொருள் அனைவரும் அறிந்ததே. இருந்தாலும் தெரியாதவர்களுக்காக புதியவர்களுக்காக இந்த மென்பொருள் மூலம் நீங்கள் உங்களிடம் உள்ள ஒலி மற்றும் எந்த விதமான ஒலி ஒளி கோப்புகளையும் இயக்கிப் பார்க்க கேட்க முடியும்.
சுட்டி
பிக்காஸா (Picasa)


இந்த மென்பொருளை உருவாக்கியவர்கள் கூகிள் தேடல் நிறுவனத்தினர். இந்த மென்பொருள் மூலம் உங்கள் புகைப்படங்களை தனித்தனி தொகுப்புகளாக பதிந்து வைத்துக் கொள்ள முடியும். அது மட்டுமில்லை உங்கள் புகைப்படங்கள் எடிட் செய்ய முடியும்.
சுட்டி
யுட்யுப் டவுண்லோடர் (YouTube Downloader)


இந்த மென்பொருள் மூலம் யுட்யுப படங்களை தரவிறக்கி காண முடியும்.
இந்த மென்பொருள் இப்பொழுது யுட்யுப் மட்டும் இல்லாமல் டெயிலி மோசன், யாகூ வீடியோ போன்ற தளங்களையும் ஆதரிக்கிறது.
சுட்டி
டிபிராக்லர் (Defraggler)


மாதம் ஒரு முறை இந்த மென்பொருள் மூலம் டிபிராகிங் செய்தால் உங்கள் கோப்புகள் உங்கள் வன்தட்டில் பல இடங்களில் பிரித்து பதியப்பட்ட கோப்புகள் ஒரே கோட்டில் வரிசையாக பதிக்கப்படும் இதனால் உங்கள் கணணியில் உள்ள கோப்புகளை கையாளும் வேகம் வெகுவாக அதிகரிக்கும்.
சுட்டி

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Tamil Computer Tips

Popular Posts