Tamil Computer Tips and Tricks

Google-Translate-Chinese (Simplified) BETA Google-Translate-English to French Google-Translate-English to German Google-Translate-English to Italian Google-Translate-English to Japanese BETA Google-Translate-English to Korean BETA Google-Translate-English to Russian BETA Google-Translate-English to Spanish

Tuesday, March 29, 2011

வெப்சைட்டுக்கு வீடியோ

யு–ட்யூப் ஒன்றுதான் உங்கள் வீடியோக்களை இணையத்தில் பதிவு செய்திட அனுமதிக்கும் தளம் என்று நினைத்தால் அது தவறு. வீடியோவினைப் பகிர்ந்து கொள்ள, இன்னும் பல, ஏன் சிறந்த, வீடியோ தளங்கள் உள்ளன. அது மட்டுமின்றி உங்கள் வீடியோக்களில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து பரிசுகளை வழங்கும் தளங்களும் உள்ளன.

அருமையான வீடியோ ஒன்றை தயாரித்து இருக்கிறீர்கள். உங்களிடம் நண்பர்கள் சிலரிடம் போட்டுக் காட்டுகிறீர்கள். அவர்கள் அனைவரும் பாராட்டுகிறார்கள். இந்த உலகமும் காணட்டுமே என்று நினைக்கிறீர்கள். அந்த எண்ணம் தோன்றியவுடன் உங்கள் நினைவில் வருவது யு–ட்யூப் இணைய தளமே. அதில் உங்கள் வீடியோவை ஏற்றி வைத்துவிட்டால் உலகெங்கும் உள்ளவர்கள் அதனைப் பார்த்து மகிழலாம்


அதிர்ஷ்டம் இருந்தால் பலர் உங்களைத் தொடர்பு கொண்டு இன்னும் சில வீடியோ படங்களைத் தங்களுக்கு எடுத்துத் தருமாறு கேட்கலாம். இதனால் பணம் சம்பாதிக்கவும் செய்திடலாம். ஆனால் ஏன் யு–ட்யூப் தளத்தை மட்டும் நாடுகிறீர்கள். என்றாவது இதைப் போல வேறு சில தளங்களும் உள்ளன என்று எண்ணியதுண்டா? வேறு இருக்கிறதா! என்று கண்கள் அகல விரிய நீங்கள் கேட்பது எனக்குக் கேட்கிறது. இதோ அத்தகைய தளங்களைப் பற்றிய தகவல்களைத் தருகிறேன்.

1. www.break.com : முதலில் பணம் மற்றும் பரிசு தரும் தளத்தைப் பற்றிப் பார்ப்போம். இந்த தளத்தில் ஏற்றப்படும் உங்கள் வீடியோ இத்தள நிர்வாகிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் ஹோம் பேஜில் அது இடம் பெற்றால் உங்களுக்குக் கிடைக்கும் பரிசு ரூ.80,000. தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் காலரியில் வீடியோவோடு வீடியோவாக இடம் பெற்றால் பரிசு ரூ.1,000. இதில் வீடியோக்கள் பிரிக்கப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் நமக்குப் பிடித்த வீடியோவினைத் தேடிப் பெறுவது எளிதாகிறது. மிக எளிமையான கண்ட்ரோல்கள் தரப்பட்டிருப்பது இன்னும் சிறப்பு. காண்ட்ராஸ்ட், பிரைட்னஸ் என வீடியோக்களைக் கண்ட்ரோல் செய்து பார்க்கலாம். நம்முடைய வீடியோக்களை அப்லோட் செய்வதும் எளிதாக்கப் பட்டுள்ளது.


2.www.tubemogul.com அடிப்படையில் இது ஆன்லைன் வீடியோ க்களை ஆய்வு செய்திடும் நிறுவனத்தின் இணைய தளம். இதன் மூலம் தங்களின் வீடியோக்களின் தரத்தினை மக்கள் அறிந்து கொள்ள இயலும். இதன் இன்னொரு சிறப்பு என்னவெனில் இதன் மூலம் மற்ற வீடியோ தளங்களுக்கும் வீடியோக்களை ஒரே ஷாட்டில் அப்லோட் செய்திட முடியும்.
அது மட்டுமின்றி உங்கள் வீடியோவை யார், எப்போது, எங்கிருந்து பார்க்கிறார்கள் என்பதனையும் நீங்கள் அறிந்து கொள்ள முடியும். யு–ட்யூப், கூகுள் வீடியோ, ஏ.ஓ.எல். வீடியோ, மை ஸ்பேஸ் வீடியோ, மெடாகேப், ரெவ்வர் மற்றும் யாஹூ வீடியோ ஆகிய தளங்களை இந்த தளத்தின் மூலம் பெறலாம்.

3. www.dailymotion.co: மற்ற வீடியோ இணைய தளங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் பல பண்புகளைக் கொண்டது இந்த தளம். இதில் பல சேனல்கள் உள்ளன; அவை – மியூசிக், கேம்ஸ், விளையாட்டு, படங்கள், கல்லூரிகள் என பட்டியல் நீள்கிறது. இதன் பபர் ரேட் அதிகமானதாக இருப்பதால் வீடியோவினை எந்த பிரச்னையுமின்றி பார்க்க முடிகிறது. வீடியோ வால்ஸ் என்ற வசதியின் மூலம் உங்கள் தளத்தில் 81 வீடியோக்கள் வரை காட்டலாம். ஜூக் பாக்ஸ் வீடியோக்களை வகைப்படுத்திக் காண வழி செய்கிறது. இந்த தளத்தில் பதிக்கப்படும் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மட்டும் காணும்படியும் செட் செய்திடலாம்.


4. www.dailymotion.com: இந்த தளத்தைப் பற்றி சிலர் அறிந்திருக்கலாம். இதில் உள்ள பபர் மெமரி குறிப்பிடத்தக்கது. வீடியோக்களை ரீவைண்ட் செய்தும் பாஸ்ட் பார்வேர்ட் செய்தும் பார்க்கும் வசதி இந்த தளத்திலேயே தரப் பட்டுள்ளது. இதில் உள்ள பேமிலி சேப் மோட் உங்கள் குழந்தைகள் என்ன வகையான வீடியோ மட்டும் பார்க்க வேண்டும் என்பதனை வரையறை செய்திடும் வசதியினைத் தருகிறது. இதில் உள்ள டைரக்டர்ஸ் கட் வீடியோ தயாரிப்பதில் தொடக்க நிலையில் உள்ளவர்களுக்கு உதவுகிறது. இந்த சேனலில் உள்ள மெட்டகபே புரோ வீடியோ தயாரிப்பது குறித்த தகவல்களைத் தருகிறது.இதில் உள்ள அப்ளிகேஷன் புரோகிராமினை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்தால் எந்தவித வெப் பிரவுசர் இன்றி நேரடியாக வீடியோக்களை அனுப்ப முடியும்.

5. www.jumpcut.com : வீடியோ தளங்களில் உங்கள் வீடியோக்களை அப்லோட் செய்திடுகையில் வீடியோக்
களை எடிட் செய்வதற்கான டூல்ஸ்கள் இருந்தால் நல்லது என்று எண்ணுகிறீர்களா! அப்படியானால் இந்த தளம் தான் உங்களுக்கு உகந்தது. இதில் உள்ள ரீமிக்ஸ் என்ற வசதியினைப் பயன்படுத்தி உங்கள் வீடியோக்களை மட்டுமல்ல, மற்றவர்களின் வீடியோக்களையும் கூட எடிட் செய்து பார்க்கலாம்.


பேக்ரவுண்ட் மியூசிக், திடீர் மாற்றங்கள், காட்சிஅமைப்பு, கிளிப் ஆடியோ மற்றும் காட்சி தோற்றங்கள் ஆகியவற்றில் மாற்றங்களை ஏற்படுத்த இதில் டூல்ஸ் தரப்பட்டுள்ளன. இந்த தளத்தில் உங்கள் யாஹூ ஐ.டி. மூலமும் லாக் இன் செய்து கொள்ளலாம். இல்லை என்றாலும் இதில் பதிவு செய்வது எளிதுதான்.


6. www.revver.com: வீடியோ ஷேரிங் வெப்சைட்டாக இயங்கிய முதல் வெப்சைட் இதுதான். இதில் வெபிஸோட், அனிமேஷன், காமெடி, கேம்ஸ் மற்றும் வீடியோஸ் எனப் பிரிவுகள் உள்ளன. உங்கள் வீடியோக்களுக்கு மட்டுமல்ல, உங்களுக்குப் பிடித்த மற்ற வீடியோக்களையும் இதில் நீங்கள் அப்லோட் செய்திடலாம். அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் உங்களுக்கும் பங்கு தரப்படும். வீடியோக்களை அடிக்கடி பார்த்தது, பலரால் பகிர்ந்து பார்த்தது மற்றும் வீடியோவினை இயக்கியவர் என பதம் பிரித்துப் பார்க்கலாம். அதே போல இதன் சேனல்களும் வித்தியாசமானவை; பிரபலமானவர்கள் செய்தி, உடல்நலம் மற்றும் உடல் பாதுகாப்பு, தொழில் நுட்ப உதவி, வெபிசோட்ஸ் எனப் பல பிரிவுகளில் வீடியோக்கள் உள்ளன.


7. www.vimeo.com: மொத்தம் 6,340 சேனல்களை உள்ளடக்கியதாக இந்த தளம் தயாரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பல பொருட்களின் அடிப்படையிலும் நம் ஆர்வத்தின் அடிப்படையிலும் பல வீடியோக்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஸ்டாப் பிக்ஸ்(Staff Picks) என்ற பிரிவில் இந்த இணையதள அலுவலர்கள் தங்களுக்கு பிடித்தது எனத் தேர்ந்தெடுத்தவற்றைக் காணலாம்.


8. www.eyespot.com: இந்த தளத்தில் உங்கள் வீடியோக்களை அப்லோட் செய்திடும் முன் அவற்றை எடிட் செய்திடலாம். போட்டோக்கள் மற்றும் மியூசிக் இணைத்து மாற்றலாம். உங்களிடம் வீடியோ இல்லை என்றால் இதில் பதிந்துள்ள வீடியோக்களை எடுத்து எடிட் உங்கள் கற்பனைத் திறனுக்கேற்ற வகையில் மாற்றலாம். இதற்கென மிக்ஸபிள்ஸ், ரீசன்ட் மிக்ஸஸ், ரீசன்ட் அப்லோட்ஸ், மோஸ்ட் ஸ்கில்புல் மற்றும் மொபைல் ஷேர் எனப் பல வகைகளில் வீடியோக்கள் பதியப்பட்டு கிடைக்கின்றன. உங்கள் மொபைல் போனில் வீடியோக்களை எடுத்து நேரடியாக இந்த தளத்திற்கு வீடியோ படங்களை அனுப்பலாம். ஆனால் அனைத்து போன்களையும் இந்த தளம் ஏற்றுக் கொள்வதில்லை. நோக்கியா போன்களில் இ மற்றும் என் சிரீஸ் போன்களின் வீடியோக்களை மட்டும் ஏற்றுக் கொள்கிறது.


9. www.video.google.com: யு–ட்யூப் தளத்தின் இன்னொரு சகோதரி போல இது செயல்படுகிறது. யு–ட்யுப் தளத்தின் அத்தனை சங்கதிகளும் இதில் இருக்கின்றன. நீங்கள் அப்லோட் செய்த வீடியோக்களை நாள், மாதம் மற்றும் ஆண்டு வாரியாகப் பட்டியலிட்டு பார்க்கலாம்.


10. www.funnyordie.com: விழுந்து விழுந்து சிரிக்க வேண்டுமா? இந்த தளத்திற்குச் செல்லுங்கள் என்று இந்த தளம் அழைத்தாலும் பல சீரியஸ் வீடியோக்களும் இதில் உள்ளன. சில நகைச்சுவை நிகழ்ச்சிகள் படங்களாய்க் காட்டப்படுகின்றன. மேலே தரப்பட்ட தளங்களில் சில மற்றவற்றிலிருந்து வேறுபட்டுள்ளன. அதிக அளவிலான (300 எம்பி) வீடியோ பைல்களை ஏற்றுக் கொள்வது ட்யூப் மொகல் தளம். விமியோ தளம் வாரத்திற்கு 500 எம்பி அனுமதிக்கிறது. ட்யூப் மொகல் தவிர மற்ற தளங்கள் அனைத்தும் ஷேரிங் வசதியைத் தருகிறது. மெடா கேப் மற்றும் ரெவ்வர் மட்டுமே டவுண்லோடிங் வசதியைத் தந்துள்ளன. பரிசு மற்றும் பணம் தருவது பிரேக் தளம் மட்டுமே. அனைத்திலும் பதிந்து கொள்வதும் வீடியோக்களை அப்லோட் செய்வதும் இலவசமே.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Tamil Computer Tips

Popular Posts