Tamil Computer Tips and Tricks

Google-Translate-Chinese (Simplified) BETA Google-Translate-English to French Google-Translate-English to German Google-Translate-English to Italian Google-Translate-English to Japanese BETA Google-Translate-English to Korean BETA Google-Translate-English to Russian BETA Google-Translate-English to Spanish

Tuesday, March 29, 2011

புதிய தேடுதல் தளம் கூல்


"மற்ற சர்ச் இஞ்சின்களைக் காட்டிலும் மூன்று பங்கு அதிகமான எண்ணிக்கையில் இணைய தளங்களைத் தேடி தகவல்களைத் தருகிறோம்' என்ற அறிவிப்புடன் கூல் ( Cuil.com ) என்ற பெயரில் சர்ச் இஞ்சின் தளம் ஒன்று கடந்த ஜூலை 28 முதல் அறிமுகமாகி பிரபலமாகி வருகிறது. இதனை உருவாக்கி வழங்கி வருபவர்கள் ஐரிஷ் நாட்டைச் சேர்ந்தவர்கள்.

ஐரிஷ் மொழியில் இதடிடூ என்ற சொல்லுக்கு அறிவு என்று பெயர். அறிவு வளர்ச்சியின் அடிப்படையே தேடல் தான். எனவே தேடலுக்குத் துணை புரியும் இந்த தளத்திற்கு இது சரியான பெயராகவே தோன்றுகிறது. நாம் தேடும் சொல்லுக்குத் தளங்களைத் தேடாமல், இருக்கின்ற கோடிக்கணக்கான தளங்களைத் தேடி வகைப்படுத்திக் கொண்டு அந்த தகவல் கட்டமைப்பிலிருந்து தளப்பட்டியலைத் தருகிறது கூல் தளம். கூகுள் தளத்தைக் காட்டிலும் மூன்று பங்கும், மைக்ரோசாப்ட் தளத்தைக் காட்டிலும் பத்து பங்கும் கூடுதலாக தளங்களைத் தேடி தகவல்களை எளிதான முறையில் புதிய பார்மட்களில் தருகிறோம் என இந்த தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது..

இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் (கணவன் மனைவியான) டாம் மற்றும் அன்னா . அலுவலகத் தலைமையிடம் கலிபோர்னியாவில் அமைந்துள்ளது. டாம் ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் இன்டர்நெட் ஆராய்ச்சி யாளராகப் பணியாற்றியவர்.

அன்னா பேட்டர்சன் கூகுள் அலுவலகத்தில் முதன்மை கட்டமைப்பாளராக பணியாற்றியவர். கூல் நிறுவனத்தில் அலுவலர்கள் 30 பேர். கூகுள் தளத்துடன் போட்டியிடும் அளவிற்கு சிறப்பாகத் தளத்தை வடிவமைத்துள்ளனர்.
கடந்த 15 ஆண்டுகளில் இன்டர்நெட் வளர்ச்சி பெற்ற அளவிற்கு அதில் பயன்படுத்தப்படும் சர்ச் இஞ்சின் என்னும் தேடல் தளங்கள் வளர்ச்சி அடையவில்லை. கூகுள் தளம் ஒன்றுதான் புதிய தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்திப் பல்வேறு வசதிகளைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தித் தந்து வருகிறது. தற்போது அதனை முந்தும் வகையில் கூல் தளம் வந்துள்ளது.

18 ஆயிரத்து 600 கோடி தளங்களை ஆய்வு செய்து அவற்றில் மோசமானவற்றையும் டூப்ளிகேட் தளங்களையும் விலக்கிவிட்டு 12 ஆயிரம் கோடி இணைய தளங்களை வகைப்படுத்தி பட்டியலிட்டு வைத்து தேடல் சொற்களுக்கேற்ப அவற்றைத் தருகிறது. தேடுதல் சொற்களுக்கான இத் தளம் தரும் பட்டியல் அடுக்கே மிக நன்றாக வேறுபாட்டுடன் இருக்கிறது. தளத்திலிருந்து சில வாக்கியங்கள், தளம் சார்ந்த போட் டோ என தளம் குறித்த அடிப்படைத் தகவல்கள் தரப்படுவதால் அதனைக் கிளிக் செய்து பின் அடடா இது தேவையில்லையே என்று ஏமாற வேண்டியதில்லை.

தளங்கள் அதில் தரப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டு ஒரு பத்திரிக்கையில் லே அவுட் போல காட்டப்படுகின்றன. அடையாளம் கண்டுகொள்ள முக்கிய வாக்கியங்கள் மற்றும் போட்டோக்கள் பட்டியலில் இடம் பெறுகின்றன. மற்ற தேடல் தளங்கள் அந்த தளங்களை எத்தனை பேர் பார்த்திருக்கின்றனர் என்ற ஹிட் ரேட் படி வரிசைப்படுத்தி பட்டியலிடுகின்றன. ஆனால் கூல் அவற்றில் தரப்பட்டுள்ள தகவல் அடிப்படையில் பட்டியலிட்டுக் காட்டுகிறது. கூல் தளத்தினைப் பயன்படுத்துபவர் குறித்த எந்த பெர்சனல் தகவல்களையும் இத்தளம் கேட்டுப் பெறுவதில்லை. பயன்படுத்துபவர் பிரைவசியில் தலையிடுவதே இல்லை.

தேடலுக்கான சொல்லை டைப் செய்கையில் பிற தளங்களில், நாம் ஏற்கனவே டைப் செய்த சொற்களை மட்டும் நினைவில் வைத்து பட்டியல் காட்டப்படும். ஆனால் கூல் தளத்தில், ஆன் லைன் டிக்ஷனரியில் கிடைப்பது போல, ஏற்கனவே கோடிக்கணக்கான தளங்களை ஆய்வு செய்து அமைக்கபட்ட பட்டியலிலிருந்து சார்ந்த சொற்கள் காட்டப்படுகின்றன. இதனால் முழுமையான சொல்லை நாம் டைப் செய்திட வேண்டிய தில்லை.

காட்டப்படும் பட்டியலில் அந்த தளத்தில் அதற்கான ஐகான் இருந்தால் அந்த ஐகான் காட்டப்படுகிறது. இதனால் நமக்கு வேண்டிய தளங்களை எளிதாக அடையாளம் காண முடிந்தது. தேடலைக் கூர்மைப்படுத்தி நமக்கு வேண்டியதை நோக்கி நம்மைச் செலுத்தும் வகையில் இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு தேடலை மேற்கொண்டபின் வலது பக்கம் ஒரு பேனல் தரப்படுகிறது. அதில் ‘Explore By Category’ என்று ஒரு வசதி தரப்பட்டுள்ளது.

நம் தேடலுடன் தொடர்புள்ள மற்ற பொருள் குறித்த பட்டியல் தரப்படுகிறது. இதில் கிளிக் செய்து முன்னேறுவதன் மூலம் தேடல் பொருளின் சரியான தகவல் தரும் தளத்திற்கு நாம் எடுத்துச் செல்லப்படுவோம். மேலும் இந்த வகையில் கர்சரைக் கொண்டு சென்றவுடன் சார்ந்த சொற்களுக்கான சரியான பொருள் பாப் அப் விண்டோவில் தரப்படுகிறது. இதைக் கொண்டு நாம் அந்த தளம் வேண்டுமா? அது நம் தேடலுடன் தொடர்புடையதா என்று முடிவெடுக்கலாம்.

கூல் தளத்தில் தேடல் மேற்கொள்கையில் தேடல் சொல்லுடன் தொடர்புடைய வெவ்வேறு பொருள்களுக்கு தனித்தனி டேப்கள் தரப்படுகின்றன. இவற்றின் மூலம் நமக்குத் தேவையான தளத்தினைத் தேர்ந்தெடுத்துச் செல்லலாம். சேப் சர்ச் (Safe search) என்று ஒரு வசதி தரப்பட்டுள்ளது. இது தொடக்கத்திலேயே இயங்குகிறது. இதனால் பாலியியல் மற்றும் சிறுவர்கள் காணக் கூடாத தளங்கள் வடிகட்டப்பட்டு பட்டியலிடப்படுகின்றன. அனைத்து தளங்களும் வேண்டும் என்று விரும்புபவர்கள் இந்த வசதியை ஆப் செய்துவிட்டு தேடலாம்.

புதிய தேடுதல் தளம் – கூல்: ஐரிஷ் மொழியில் கூல் என்றால் அறிவு மற்றும் சால்மன் (வஞ்சிர மீன்) என்ற மீனையும் குறிக்கும். பழங்கால கதை ஒன்று அயர்லாந்து நாட்டில் இன்றும் வழங்குகிறது. சால்மன் மீன் ஒன்று ஒன்பது ஹேஸல்களை (பாதாம் பருப்பு கொட்டை போன்றது) மொத்தமாகத் தின்று விட்டு அறிவுக் குளத்தில் வீழ்ந்து விட்டது. அதன் மூலம் உலகின் அறிவு அனைத்தும் அந்த மீனுக்கு வந்துவிட்டது. இந்த மீனை பிடித்து முதலில் சாப்பிடுபவருக்கு மட்டும் உலக அறிவு வந்துவிடும் என்பது ஐதீகம்.

ஐரிஷ் நாட்டின் பிரபல கவிஞர் ஒருவர் இந்த மீனை எப்படியும் பிடித்துச் சாப்பிட்டுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் பாய்ன் என்ற ஆற்றில் பல ஆண்டுகள் மீன் பிடித்தாராம். இறுதியில் தன் முயற்சியில் வெற்றி பெற்று அந்த அறிவு மீனைப் பிடித்தார். அதைத் தன் சிஷ்யனான "பின்கூல்' என்பவனிடம் கொடுத்து மீனை வறுத்துக் கொடு; ஆனால் ஒரு பிட் கூடச் சாப்பிடக் கூடாது என்று மிரட்டிவிட்டு குளிக்கச் சென்றார்.

பின்கூல் தன் தலைவரின் ஆணைக்கேற்ப பொறுமையாக மீனை பொன் நிறத்திற்கு வறுக்கத் தொடங்கினான். சாப்பிட ஆசை இருந்தாலும் தலைவரின் எச்சரிக்கையால் அடக்கிக் கொண்டான். வறுவல் முடியும் தறுவாயில் வறுத்த மீனை கைகளில் எடுக்கும் போது கட்டைவிரலில் சூடு பட்டு பொறுக்க முடியாமல் உடனே சூடு தணிக்க விரலை வாயில் வைத்து சூப்பினான். விரலை அழுத்தி எடுத்ததால் விரலோடு வந்த மீனின் இறைச்சி வாயினுள் சென்றது. அதனால் அவனுக்கு உலக அறிவு வந்ததாக இன்றும் அயர்லாந்தில் கதை உண்டு.

(நம் நாட்டிலும் விரல் சூப்பும் பிள்ளைகளை அறிவு அதிகம் என்று சொல்வது இதனால்தானோ) ஐரிஷ் நாட்டு கதைகளில் எல்லாம் இந்த பின்கூல் ஒரு ஹீரோவாக இன்றும் வர்ணிக்கப்படுகிறார். அவரிடம் ஒரு கேள்வி கேட்டால் உடனே விரலை வாயில் வைத்து அதற்கான விடையைத் தந்துவிடுவதாக அனைத்து கதைகளும் சொல்கின்றன. கூல் தள நிறுவனர் இந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது மட்டுமின்றி அதே பாய்ன் என்ற ஆற்றில் அடிக்கடி மீன் பிடிப்பாராம். அதனாலேயே இந்த பெயரைத் தான் உருவாக்கிய தளத்திற்கு டாம் வழங்கியுள்ளார்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Tamil Computer Tips

Popular Posts