Tamil Computer Tips and Tricks

Google-Translate-Chinese (Simplified) BETA Google-Translate-English to French Google-Translate-English to German Google-Translate-English to Italian Google-Translate-English to Japanese BETA Google-Translate-English to Korean BETA Google-Translate-English to Russian BETA Google-Translate-English to Spanish

Tuesday, March 29, 2011

உங்கள் மேக் கம்ப்யூட்டரை வேகப்படுத்துங்கள்

புதிய மேக் கம்ப்யூட்டர் ஒன்று வாங்கியிருக்கிறீர்களா! அழகுதான். அதில் செயல்படுவது ஒரு தனி அனுபவம்தான். ஆனால் வாங்கி இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டால் அதன் வேகம் குறைந்து இருக்கும்.
ஆம், நிச்சயம் குறைந்திருக்கும். வாங்கும்போது இருந்ததைக் காட்டிலும் இயங்கும் வேகம் சற்று குறைவுதான். ஒரு சிலர் மேக் கம்ப்யூட்டரின் இயக்கத்தினைப் பழையதாக்கும் புரோகிராம் ஒன்று இரண்டு ஆண்டுகளில் இயக்கப்பட்டு வேகத்தைத் தடுக்கும் என்றும் சொல்கின்றனர்.

இன்னும் சிலர் தகவல்கள் அடங்கிய பைல்கள் தொடர்ந்து சிஸ்டத்தில் அடுக்கப்படுவதால் அதன் சுமை இயக்க வேகத்தைக் கட்டுப்படுத்தலாம் என்று கூறுகின்றனர். இப்படி பல யூகங்களும் சில வேளைகளில் சரியான காரணங்களும் சொல்லப்பட்டாலும் ஒரு நல்ல முடிவொன்று நமக்குக் கிடைத்துள்ளது. உங்கள் மேக் சிஸ்டத்திற்கு மீண்டும் புத்துயிர் கொடுத்து அதனை அது வந்த முதல் நாள் எப்படி செயல்பட்டதோ அதே போன்று அமைத்துவிடலாம் என்பதே. இந்த ஊட்டச் சத்து டானிக் எப்படி வழங்கி சிஸ்டத்தை அமைப்பது என்று பார்ப்போம்.

1. முதலில் சிஸ்டத்தில் உள்ள பைல்கள் அனைத்தையும் பாதுகாப்பான ஒரு இடத்திற்கு அல்லது மீடியத்திற்குக் கொண்டு செல்லுங்கள். இதற்கு சூப்பர் டூப்பர் போன்ற புரோகிராமினைப் பயன்படுத்தலாம்; அல்லது ஆப்பிள் வழங்கும் பேக் அப் புரோகிராமினை இயக்கலாம். ஆப்பிள் புரோகிராம் பயன்படுத்தி பைல்கள் அனைத்தையும் நகர்த்தி, பின் மீண்டும் மேக் சிஸ்டத்தை அமைத்து அதன்பின் அனைத்து பைல்களையும் மீண்டும் கம்ப்யூட்டருக்குக் கொண்டுவரும் வேலையை மேற்கொள்வதாக இருந்தால் உங்களுக்கு ஒரு எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிரைவ் வேண்டும்.

2. அடுத்து உங்கள் அப்ளிகேஷன்ஸ் போல்டரைத் திறந்து (Macintosh HD\Applications) அதில் உள்ள அப்ளிகேஷன்ஸ் புரோகிராம்களை இழுத்து வந்து விடுங்கள். பல மாதங்களாக நீங்கள் பயன்படுத்தாத புரோகிராம்களை ஒதுக்கி விடுங்கள். பயன்படுத்தவில்லை என்றால் தேவை இல்லை என்றுதானே பொருள். அப்படியே வேண்டும் என்றால் பின் நாளில் டவுண்லோட் செய்திடலாம்.

3. அடுத்து முக்கிய டாகுமெண்ட்களை காப்பி செய்வது. இதற்கு Macintosh HD\Users\your account name\Documents என்ற போல்டரைத் திறந்து கொள்ளுங்கள். டாகுமென்ட்ஸ் எப்போதும் தேவை என்பதால் எதனையும் விட்டுவிட வேண்டாம். ஆப்பிள் மெயில் நீங்கள் பயன்படுத்துவதாக இருந்தால் உங்களுடைய இமெயில் போல்டர்களை (Macintosh HD\Users\your account name\Library\Mail) என்ற போல்டருக்குக் கொண்டு செல்லுங்கள்.

4. மீடியா சேவ் செய்திடுக: மீடியா பைல்களை காப்பி செய்வது மூன்று நிலைகளில் மேற்கொள்ள வேண்டும்.
நீங்கள் டிகூதணஞுண் மூலம் தான் உங்கள் பாடல் பைல்களைக் கேட்கிறீர்கள் என்றால் உங்களுடைய முழு ஐட்யூன்ஸ் போல்டரை (Macintosh HD\Users your account name\Music\iTunes) என்ற போல்டருக்குக் கொண்டு செல்லவும். இதே போல iPhoto library போல்டரை Macintosh HD\Users\your account name\Pictures\iPhoto Library என்ற போல்டருக்குக் கொண்டு செல்லவும். பொதுவாக மீடியா பைல்கள் பெரிய அளவில் இருக்கும் என்பதால் இதனை மாற்றுவதற்கு அதிக நேரம் எடுக்கலாம்; பொறு மை சற்று தேவை.

5. செட்டிங்ஸ் மற்றும் புக்மார்க்: மேக் பயன்படுத்திய நாள்முதல் நீங்கள் ஏற்படுத்திய செட்டிங்ஸ் மற்றும் புக் மார்க்குகளை சேவ் செய்திட மறக்கக் கூடாது. இதற்கு உங்கள் செட்டிங்ஸ் அனைத்தையும் சிங்க் செய்வதுதான் சிறந்த வழி. இதற்கு Mac Sync தேர்ந்தெடுக்க வேண்டும். மேக் சிங்க் தேர்ந்தெடுக்க System Preferences செல்லவும். பின் Mac என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் டூல்பாரில் Syn மீது கிளிக் செய்திடவும். அதன்பின் எவற்றை சிங்க் செய்திட வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுத்து சிங்க் செய்யுங்கள். பிரவுசர் புக்மார்க்குகளை எப்படி சேவ் செய்வது என்று பார்ப்போம். சபாரி பயன்படுத்துவோர் File மீது கிளிக் செய்து Export Bookmarks என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அதன்பின் பைல்களை எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க்கில் சேவ் செய்திடவும். உங்களிடம் மேக் அக்கவுண்ட் இருந்தால் Preferences | Bookmarks சென்று Synchronize my bookmarks using.Mac என்பதில் செக் மார்க் அடையாளம் ஏற்படுத்தவும். பயர்பாக்ஸ் பயன்படுத்தினால் Bookmarks என்பதில் கிளிக் செய்திடவும். புக்மார்க்ஸ் விண்டோ திறந்தவுடன் File என்பதில் கிளிக் செய்து பின் Export திறந்து உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் பதிய கட்டளை கொடுக்கவும். இதே போல ஆப்பரா பயன்படுத்துபவர்கள் File | Import and Export | Export Opera Bookmarks என்று தரவும்.

6. ஸ்கிரீன் ஷாட்ஸ் : சில விஷயங்களை மேக் கம்ப்யூட்டரிலிருந்து எடுத்து ஹார்ட் டிஸ்க்கிற்குக் கொண்டு செல்ல முடியாது. எடுத்துக் காட்டாக மேக் திரை எப்படி காணப்படுகிறது. அழகாக ரசனையுடன் அமைத்திருப்பீர்கள். உங்களுடைய பைல்களை ஒரு குறிப்பிட்ட நீங்கள் விரும்பும் வகையில் அமைத்திருப்பீர்கள். இவை எல்லாம் கம்ப்யூட்டர் இயங்க முக்கியம் இல்லை என்றாலும் இவற்றை ஏன் நாம் இழக்க வேண்டும். பின் தீர்வு தான் என்ன? இவற்றை ஸ்கிரீன் ஷாட்களாக எடுத்து அந்த பைல்களை சேவ் செய்திடுங்கள். இதற்கு ShiftCommand3 என்ற வகையில் கட்டளை கொடுத்தால் ஸ்கிரின் ஷாட் கிடைக்கும்.

ShiftCommand 4 கொடுத்தால் எவை மட்டும் வேண்டுமோ அவை மட்டும் காப்பி ஆகும். உங்கள் எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க்கில் அனைத்தும் திணித்தாயிற்றா? இப்போது மேக் சிஸ்டம் பைல்களை ரீ இன்ஸ்டால் செய்திடும் வேளை வந்துவிட்டது. இது 30 நிமிடத்திலிருந்து 90 நிமிடம் வரை கூட நேரம் எடுக்கும். அது உங்கள் கம்ப்யூட்டர் பிராசசரின் வேகத் தைப் பொறுத்தது. இன்ஸ்டலேஷன் டிவிடியைப் போட்டுவிட்டு அது சொல்லும் வழிகளைப் பின்பற்றி வந்தால் போதும். ரீ இன்ஸ்டால் பணி மேற்கொள்ளப்படும்.

அடுத்து பைல்க ளை மீண்டும் எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க்கிலிருந்து கம்ப்யூட்டருக்கு மாற்ற வேண்டும். இதில் இரண்டு பணிகளைத் தனியே மேற்கொள்ள வேண் டும். சபாரி பிரவுசரின் புக்மார்க்குகளை மாற்ற சபாரியில் File திறந்து Import Bookmarks என்பதில் கிளிக் செய்திடவும். எங்கு இவை இருக்க வேண்டும் என்பதனையும் நீங்கள் சுட்டிக் காட்ட வேண்டும். பயர்பாக்ஸில் Bookmarks | Organize Bookmarks என்று சென்று File | Import என கட்டளை கொடுக்கவும். இமெயில் செட்டிங்ஸ் அமைக்க ஆப்பிள் மெயில் திறந்து பின் File என்பதில் கிளிக் செய்திடவும்.

பின்னர் mport Mailboxes என்று கட்டளை கொடுக்கவும். “Mail for Mac OS X” லிருந்து டேட்டாவினை இறக்கிட மெயில் போல்டரைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் மெயில்கள் அனைத்தும் “Imported.” என்னும் புதிய போல்டரில் காப்பி ஆகும். இதிலிருந்து அந்த அந்த மெயில் பாக்ஸ்களுக்கு மெயில்களை இழுத்து கொண்டு சென்று காப்பி செய்துவிடலாம். இவ்வளவும் செய்திட சற்று நேரம் பிடிக்கும் என்பது உண்மையே. மதியம் சாப்பாட்டிற்குப் பின் ஓய்வெடுக்கையில் இந்த செயலை மேற்கொள்ளுங்கள். வேலை முடிந்த பின்னர் மேக் கம்ப்யூட்டர் இயக்கத்தைப் பாருங்கள். புதிய வேகத்தில் இயங்கத் தொடங்கும்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Tamil Computer Tips

Popular Posts