Tamil Computer Tips and Tricks

Google-Translate-Chinese (Simplified) BETA Google-Translate-English to French Google-Translate-English to German Google-Translate-English to Italian Google-Translate-English to Japanese BETA Google-Translate-English to Korean BETA Google-Translate-English to Russian BETA Google-Translate-English to Spanish

Tuesday, March 29, 2011

படங்களை மொத்தமாக சுழற்ற

நீங்கள் உருவாக்கிய பைல்களை நீங்கள் மட்டுமே பார்க்க முடியும் என்ற நிலைக்கு மாற்ற வேண்டுமா? கம்ப்யூட்டர் பயன்படுத்தும் வேறு யாரும் பார்க்க முடியாதபடி அவற்றை நிறுத்த முடியுமா? முடியும்.

தேவையற்ற புரோகிராம்களை உடனடியாக அறிய: உங்கள் கம்ப்யூட்டர் ஸ்டார்ட் ஆகும்போது எக்கச் சக்க புரோகிராம்களை இயக்கத்திற்குக் கொண்டு வந்து பின்னணியில் இயங்கும் வண்ணம் வைத்திருந்தால் கம்ப்யூட்டர் மெதுவாகத்தான் செயல்படும். எனவே ஸ்டார்ட் ஆகும் நிலையில் இயங்கி நிற்கும் தேவையற்ற புரோகிராம்களை ஸ்டார்ட் அப் போல்டரிலிருந்து எடுக்க வேண்டும்.
இதற்கான ஸ்டார்ட், ஆல் புரோகிராம்ஸ் சென்று அங்கு ஸ்டார்ட் அப் சென்றால் தொடக்கத்தில் இயங்கும் அனைத்து புரோகிராம்களின் பெயர்களும் தெரியும். ஆனால் எந்த புரோகிராம் கட்டாயம் இருக்க வேண்டும்; எவை எல்லாம் இருக்கக் கூடாது என்று உங்களுக்குப் புரியாமல் எதற்கு வம்பு? என்று அப்படியே விட்டுவிடுவீர்கள். இல்லையா? அனைத்திற்கும் கை கொடுக்கும் இன்டர்நெட் இதற்கும் கை கொடுக்கிறது. இன்டர்நெட் இணைப்பு இருக்கையில் www.sysinfo.org/startuplist.php என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். இங்கு எந்தெந்த பைல்களெல்லாம் எப்படிப்பட்டவை? தேவையானவையா என்று நீங்கள் அறிந்து கொள்ளலாம். பின் ஸ்டார்ட் அப்பில் தேவையில்லாதவற்றை எடுத்துவிடலாம். படங்களை மொத்தமாகச் சுழற்ற: டிஜிட்டல் கேமரா அல்லது மெமரி கார்டுகளிலிருந்து போட்டோக்களை கம்ப்யூட்டருக்கு மாற்றுகையில் நெட்டு வாக்கில் எடுத்த படங்கள் படுக்கை வாக்கான நிலையில் தெரியும். இதனை நேராக அமைக்க வேண்டும் என்றால் ஒவ்வொன்றாகத் திறந்து Rotate என்னும் வசதியைப் பயன்படுத்தி அமைக்க வேண்டும். இதற்குப் பதிலாக சுழற்ற வேண்டிய படங்கள் அனைத்தையும் மொத்தமாக சுழற்றி அமைத்திட முடியும். போட்டோக்களை கம்ப்யூட்டருக்கு காப்பி செய்தவுடன் அவை உள்ள போல்டருக்குச் செல்லவும்.

போல்டரைத் திறந்து படங்களுக்கான Thumbnails எனப்படும் சிறிய படங்கள் கிடைக்கும் படி திறந்து கொள்ளவும். இந்த தம்ப் நெய்ல் படங்கள் கிடைக்க வேண்டும் எனில் மெனு பாரில் View வில் கிளிக் செய்து கிடைக்கும் மெனு கட்டத்தில் கூட Thumbnails என்னும் பிரிவில் கிளிக் செய்தால் போட்டோக்களின் சிறிய உருவங்கள் பைல்களின் பெயர்களுக்கு மேலாகத் தெரியும். இப்போது Ctrl கீயை அழுத்திக் கொண்டு எந்த போட்டோக்களை சுழற்ற வேண்டுமோ அதன் மீது ஒவ்வொன்றாக இடது மவுஸ் பட்டனால் கிளிக் செய்திடவும். இப்போது சுழற்ற வேண்டிய போட்டோக்கள் அனைத்தும் செலக்ட் செய்யப்பட்டுவிடும். இனி ஏதாவது ஒரு படத்தின் மீது ரைட் கிளிக் செய்யவும். கிடைக்கும் மெனுவில் Rotate Clockwise என்பதில் கிளிக் செய்தால் விண்டோஸ் உங்களுக்காக இந்த படங்களைச் சுழற்றிக் கொடுக்கும். இந்த வசதி விண்டோஸ் எக்ஸ்பியில் உள்ளது.

டாஸ்க் பாரை மாற்றி அமைக்க: கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவரும் டாஸ்க் பாரினைக் கீழாக வைத்திருக்க எண்ண மாட்டார்கள். ஒரு சிலர் அதனை வலது அல்லது இடது புறமாக நெட்டுவாக்கில் வைத்திருக்க விரும்பலாம். இதனை எப்படி அமைக்கலாம்? முதலில் டாஸ்க் பார் Lock ஆகியிருக்கிறதா என்று பார்க்கவும். செய்யப்பட்டிருந்தால் அதனை Unlock செய்திட வேண்டும். இதற்கு டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Lock the Taskbar என்னுமிடத்தில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். இப்போது மவுஸின் இடது பட்டனைக் கொண்டு டாஸ்க் பாரின் ஏதாவது ஒரு இடத்தில் கிளிக் செய்தபடி பட்டனை விடாமல் இழுக்கவும். டாஸ்க் பார் உயர்ந்து வரும். விரும்பும் இடத்தில் அதனை அமைத்து பட்டனை விட்டுவிடவும். பின் டாஸ்க் பாரின் அகலத்தை அட்ஜஸ்ட் செய்திடலாம். நீங்கள் விரும்பும் இடத்தில் விரும்பும் வகையில் அமைந்துவிட்ட பின் மீண்டும் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்து டாஸ்க் பாரினை லாக் செய்திடவும்.

வெவ்வேறு பெயர்களில் சேவ் செய்திடுவது நல்லது: பல பிரிவுகள் நிறைந்த ஒரு பெரிய டாகுமெண்ட் அல்லது படம் ஒன்றை எடிட் செய்கையில் சிறிய அளவிலான பல மாற்றங்களை மேற்கொண்டு வருவோம். குறிப்பாக புதிய புரோகிராம் ஒன்றைப் பயன்படுத்துகையில் அதன் பல்வேறு வசதிகளைப் பயன்படுத்தவே திட்டமிடுவோம். சில வேளைகளில் புதியதாக ஏற்படுத்திய மாற்றத்தைக் காட்டிலும் சில மாற்றங்களுக்கு முன்பிருந்த டாகுமெண்ட் அல்லது படமே நன்றாக இருந்தது என எண்ணி அதனைப் பெற எண்ணுவோம்.
ஆனால் புரோகிராம் அவ்வப்போது சேவ் செய்துவிடுவதால் பழைய நிலையில் டாகுமெண்ட் கிடைக்காது. இந்த குழப்பத்தினைப் போக்க டாகுமெண்ட்டில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்திய பின் அதனை பைல் பெயருடன் 1,2,3 என எண்கள் கொடுத்து சேவ் செய்திடலாம். பின் எந்நிலையில் உள்ள மாற்றங்களுடன் பைல் வேண்டுமோ அந்த நிலையில் சேவ் செய்த பைலைத் திறந்து பயன்படுத்தலாம்.

இன்ஸ்டால் செய்திருந்தால் இவற்றிலும் மேலே சொன்ன வகை பைல்களைத் திறந்து பயன்படுத்தலாம். ஆனால் அதற்கு ஒரு ப்ளக்–இன் பைல் சேர்க்கப்பட வேண்டும். இந்த ப்ளக் இன் புரோகிராமினை http://www.sun.com/software/star/odf_plugin/index.jsp என்ற முகவரியில் உள்ள தளத்தில் டவுண்லோட் செய்து கொள்ள லாம். இலவசம் தான். ஆனால் இந்த ப்ளக் இன் புரோகிராம் ஆபீஸ் 2007 தொகுப்புடன் இணைந்து செயலாற்றாது. எனக்கே எனக்காய்: நீங்கள் உருவாக்கிய பைல்களை நீங்கள் மட்டுமே பார்க்க முடியும் என்ற நிலைக்கு மாற்ற வேண் டுமா? கம்ப்யூட்டர் பயன்படுத்தும் வேறு யாரும் பார்க்க முடியாதபடி அவற்றை நிறுத்த முடியுமா? முடியும்.
உங்கள் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் என்.டி. பைல் சிஸ்டத்தைப் (NTFS) பயன்படுத்தினால் இவ்வாறு மாற்றிடலாம். நீங்கள் மட்டுமே திறந்து பார்க்கும்படி மாற்றப்பட வேண்டிய பைலை அல்லது போல்டர் இருக்கும் இடத்தை விண்டோஸ் எக்ஸ்புளோரரில் கண்டறியவும்.
பின் அதன் மீது ரைட் கிளிக் செய்து புராபர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் Sharing என்னும் டேபில் கிளிக் செய்திடவும்.
வரும்மெனுவில் Make this folder private என்பதில் கிளிக் செய்து பின் ஓகே என்டர் தட்டி வெளியே வரவும். இனி அந்த பைல் அல்லது போல்டரை நீங்கள் மட்டுமே அந்த கம்ப்யூட்டரைப் பயன்படுத்துகையில் பார்த்து திறக்க முடியும். மற்றவர்கள் அதே கம்ப்யூட்டரைப் பயன்படுத்துகையில் திறக்க முடியாது.

கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவரும் டாஸ்க் பாரினைக் கீழாக வைத்திருக்க எண்ண மாட்டார்கள். ஒரு சிலர் அதனை வலது அல்லது இடது புறமாக நெட்டுவாக்கில் வைத்திருக்க விரும்பலாம்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Tamil Computer Tips

Popular Posts