Tamil Computer Tips and Tricks

Google-Translate-Chinese (Simplified) BETA Google-Translate-English to French Google-Translate-English to German Google-Translate-English to Italian Google-Translate-English to Japanese BETA Google-Translate-English to Korean BETA Google-Translate-English to Russian BETA Google-Translate-English to Spanish

Tuesday, March 29, 2011

கீபோர்ட் செட்டிங்ஸ் மாற்றுவது எப்படி?

ஒரு வரியை வேகமாக அழிக்க வேண்டும் என எண்ணி பேக் ஸ்பேஸை அழுத்த்த்துவீர்கள்; ஆனால் உங்கள் வேகத்திற்கு இடம் கொடுக்காமல் மேலே சொன்னபடி மெதுவாகவே அழிக்கப்படும்.

கீபோர்டில் என்ன செட்டிங் செய்திட முடியும் என்ற கேள்வி இந்த தலைப்பைப் பார்த்தவுடன் உங்களுக்குத் தோன்றலாம். எனக்கும் இந்த விபரம் கருமாத்தூரிலிருந்து எழுதிய வாசகர் ஒருவரின் கடிதத்தைப் பார்த்த பின்னரே தோன்றியது.

அவர் கம்ப்யூட்டரில் பணியாற்றும் போது அடிக்கடி ஏதேனும் ஒரு கீயை அழுத்திய வாறே சிந்திக்கும் பழக்கம் உடையவராம். இதனால் அந்த கீயின் எழுத்துக்கள் மிக வேகமாக டெக்ஸ்ட்டில் அமைந்துவிடுகிறது. ஒரு சில நொடிகளில் கூட நிறைய வரிகளில் இந்த கீ எழுத்து அமைந்துவிடுகிறது. இதனை எப்படி தடுக்கலாம்? அல்லது மெதுவாக அமையும்படி செய்யலாம் என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கான விபரங்களைத் தேடுகையில் எழுத்து வருவதனைத் தடுக்க முடியாது என்பதும் ஆனால் அது ஸ்கிரீனில் எழுத்தை அமைக்கும் வேகத்தை குறைக்க முடியும் என்பதனையும் தெரிந்து கொண்டேன்.

இதற்கு சில செட்டிங்குகளையும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தருகிறது. Start கீ அழுத்தி பின் கிடைக்கும் மெனுவில் தேர்ந்தெடுத்து Control Panel செல்லவும். அதன்பின் கிடைக்கும் விண்டோவில் சிஸ்டம் சார்ந்த பல பிரிவுகள் கிடைக்கும். உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் எக்ஸ்பிக்கு முந்தையதாக இருந்தால் Printers and Other Hardware என்னும் ஐகானிலும் விண்டோஸ் எக்ஸ்பியாக இருந்தால் Keyboard என்னும் ஐகானிலும் கிளிக் செய்திடவும்.

உடன் Keyboard Properties என்னும் விண்டோ கிடைக்கும். இதில் Speed என்னும் டேபை அழுத்த கிடைக்கும் பிரிவுகளில் இரண்டாவதான Character Repeat என்ற பிரிவினைக் காணவும். இதில் கொடுத்துள்ள நீள அளவைக் கோட்டில் Slow மற்றும் Fast என இரண்டு அளவுகள் கொடுக்கப்பட்டிருக்கும்.

இதில் ஒரு கீயைத் தொடர்ந்து அழுத்துகையில் அந்த கீக்கான எழுத்து எவ்வளவு வேகமாக அல்லது மெதுவாக திரையில் அமைக்கப்பட வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம். Slow என்பதனை நோக்கி அதில் உள்ள அளவுக் கோட்டினை இழுத்து அமைத்த பின் கீழே தரப்பட்டிருக்கும் நீள செவ்வகக் கட்டத்தில் எவ்வளவு மெதுவாக என்பதை ஒரு கீயை அழுத்திப் பார்த்து சோதனை செய்து கொள்ளலாம்.

பின் Apply மற்றும் ஓகே அழுத்தி வெளியேறலாம். இதன் பின் ஒரு கீயைத் தொடர்ந்து அழுத்தினால் அதற்கான எழுத்துக்கள் மெதுவாக டெக்ஸ்ட்டில் அமையும். ஆனால் ஒரு கீயை அழுத்துகையில் மட்டுமல்ல, தொடர்ந்து வேகமாக இதுவரை டெக்ஸ்ட் டைப் செய்து பழக்கப்பட்டவர்கள் இப்போது சிறிது மெதுவாக டெக்ஸ்ட் டைப் ஆவதை உணர்வீர்கள். மேலும் ஒரு வரியை வேகமாக அழிக்க வேண்டும் என எண்ணி பேக் ஸ்பேஸை அழுத்த்த்துவீர்கள்; ஆனால் உங்கள் வேகத்திற்கு இடம் கொடுக்காமல் மேலே சொன்னபடி மெதுவாகவே அழிக்கப்படும்.

அப்போது ஏண்டா இதனை மெதுவாக அமைத்தோம் என வருத்தப்படுவீர்கள். இதே அமைப்பில் இன்னொரு விஷயத்தையும் மேற்கொள்ளலாம். கம்ப்யூட்டரில் செயலாற்று கையில் செயலின் இதயத் துடிப்பைப் போல மின்னி மின்னி நமக்கு போக்கு காட்டுவது கர்சரின் துடிப்பே. இந்த துடிப்பினையும் வேகமாக இருக்க வேண்டுமா அல்லது மெதுவாக இருக்க வேண்டுமா என்பதனையும் இதே விண்டோவில் மேற்கொள்ளலாம். None / Fast என்ற இரு அளவுகளில் ஏதேனும் ஒரு நிலையில் அளவு கோட்டினை அமைக்கலாம்.

கர்சர் எப்படி துடிக்கும் என்பதனை அருகில் காட்டப்படும் கர்சர் துடிப்பதனைக் கொண்டு உணரலாம். நாம் விரும்பும்படி இதனையும் அமைத்துவிட்டு அப்ளை மற்றும் ஓகே கிளிக் செய்து வெளியே வரலாம். கருமாத்தூர் வாசகர் ஜெயபாலுக்கு இந்த விஷயத்தைக் கொண்டு வர சான்ஸ் தந்தமைக்கு நன்றி.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Tamil Computer Tips

Popular Posts