Tamil Computer Tips and Tricks

Google-Translate-Chinese (Simplified) BETA Google-Translate-English to French Google-Translate-English to German Google-Translate-English to Italian Google-Translate-English to Japanese BETA Google-Translate-English to Korean BETA Google-Translate-English to Russian BETA Google-Translate-English to Spanish

Tuesday, March 29, 2011

பவர் பாய்ண்ட் அனிமேஷன்

பவர்பாய்ண்ட் தொகுப்பில் ஸ்லைடுகளின் ஊடே நகரும் ஆப்ஜெக்ட்களை அமைக்கலாம் என்பதனை அதனைப் பயன்படுத்தும் பலர் அறியாமல் இருக்கின்றனர். இந்த தொகுப்பு அலுவலக ஆய்வுக் கூடங்கள் மற்றும் வர்த்தக ரீதியான கூட்டங்களில் பெரிதும் பயன்படுத்தப்படுவதால் இது போன்ற அனிமேஷன் வசதி இருக்காது என்றே கருதுகின்றனர்.
ஆனால் இத்தகைய அனிமேஷன், பவர்பாய்ண்ட் பயன்படுத்தும் காரணங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பது அதனைப் பயன்படுத்துவோருக் குத்தான் தெரியும். அனிமேஷன் களை அமைப்பது பற்றி இங்கு காண்போம்.


ஆப்ஜெக்ட் ஒன்றை, ஏதேனும் ஒரு ஆட்டோஷேப், கிராபிக்ஸ் அல்லது டெக்ஸ்ட் பாக்ஸ், ஸ்லைட் ஷோவின் இடையே திரையின் ஊடே நகர்ந்து செல்லுவதை நோக்கமாக வைத்துக் கொள்வோம். எனவே அதற்கென ஒரு பாதை ஒன்றை நாம் அனுமானித்து வைத்துக் கொள்வோம். இதனை எப்படி அமைக்கலாம் என்பதைப் பார்க்கலாம்.


1.முதலில் நீங்கள் இலக்கு வைத்திடும் ஆப்ஜெக்ட் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அதன்பின் Slide Show/Custom Animation என்பதனைத் தேர்ந்தெடுங்கள்.


2. பின் (Task pane) டாஸ்க் பேனில் Add Effect என்பதனைத் தேர்ந்தெடுங்கள். பிளை அவுட் மெனுவில் Motion Paths என்பதன் மீது கிளிக் செய்திடவும்.


3. நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள ஆப்ஜெக்ட் ஒரு நேர் கோட்டில் வலது பக்கமோ இடது பக்கமோ நகரச் செய்வதாக இருந்தால் தரப்பட்டுள்ள பிளை அவுட்டில் அதற்கேற்ற முறையில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.


உங்கள் அனிமேஷன் வேடிக்கையான முறையில் அமைய வேண்டும் என எண்ணினால் Draw Custom Path என்பதைத் தேர்ந்தெடுத்து பிளை அவுட்டில் இருந்து Scribble என்பதைத் தேர்ந்தெடுக்கவும். Scribble என்பதைத் தேர்ந்தெடுக்கையில் மவுஸ் பாய்ண்ட்டர் ஒரு பென்சிலாக மாறும். ஒரு கோடு அல்லது வளைகோட்டினை வரையவும். அல்லது ஸ்கிரீனில் ஏதாவது கிறுக்கவும். இதனை முடித்துவிட்டவுடன் நீங்கள் எப்படி கோடு அல்லது கிறுக்கல் போட்டீர்களோ அதன்படி ஆப்ஜெக்ட் நகரும். இதன் பாதை நீங்கள் டிசைன் செய்திடும்போதுதான் உங்கள் கண்களுக்குத் தெரியும். ஸ்லைட் ஷோ பிரசன்டேஷனின் போது அது தெரியாது. ஆப்ஜெக்ட் நகர்வதுதான் தெரியும். இந்த பாதையை எந்த நேரத்திலும் நீங்கள் எடிட் செய்திடலாம். அதே போல அனிமேஷனை எதிர்புறத்திலும் பின்னோக்கி நகரச் செய்திடலாம். இதற்கு ஏற்கனவே அமைத்த பாதையில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Reverse Path Direction என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இந்த பாதையை புதிய வடிவில் அமைத்திட மீண்டும் ரைட் கிளிக் செய்து Edit Points களைத் தேர்ந்தெடுக்கவும். இந்த பாதையில் உள்ள சில புள்ளிகளை நீக்க வேண்டும் என்றாலும் மெனு வரவழைத்து Delete Point கிளிக் செய்வதன் மூலம் நீக்கலாம். அதே போல புதிய பாய்ண்ட் அமைக்க வேண்டும் என்றால் Add Point என்பதனைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம். எல்லாம் முடிந்த பின் அனிமேஷன் எப்படி இருக்கும் என்பதனை பிரிவியூ பார்த்து முடிவு செய்து கொள்ளலாம். நீங்கள் விரும்பிய பாதையை அமைத்து இயக்கினால் சொல்ல விரும்பும் கருத்து சரியாகப் பார்ப்பவர்களுக்கு விளங்கும்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Tamil Computer Tips

Popular Posts