Tamil Computer Tips and Tricks

Google-Translate-Chinese (Simplified) BETA Google-Translate-English to French Google-Translate-English to German Google-Translate-English to Italian Google-Translate-English to Japanese BETA Google-Translate-English to Korean BETA Google-Translate-English to Russian BETA Google-Translate-English to Spanish

Tuesday, March 29, 2011

இலவச ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் தொகுப்புகள்

வைரஸ்களைத் தடுத்து நிறுத்தி அழித்திடும் தொகுப்புகள் இன்று கம்ப்யூட்டர் பயன்பாட்டில் கட்டாயத் தேவையாய் ஆகிவிட்டன. ஆப்பரேட்டிங் சிஸ்டமும் பிரவுசர் தொகுப்பும் எத்தனை பாதுகாப்பாய் அமைக்கப்பட்டாலும் வைரஸ்களும் ஸ்பைவேர்களும் நாளுக்கு நாள் பெருகி கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கு சவாலாய் உள்ளன.

எனவே தான் ஆண்டி வைரஸ்கள் பயன்படுத்தப்படுவது மட்டுமல்ல அவை அப்டேட் செய்யப்பட வேண்டும் என்று இந்த பக்கங்களில் குறிப்புகள் தொடர்ந்து தரப்பட்டு வருகின்றன. வாசகர்கள் பலர் இதற்கான தொகுப்புகளை விலை கொடுத்து வாங்கி ஆண்டு தோறும் அதனை மேம்படுத்த கட்டணம் செலுத்துவதும் இயலாததாய் உள்ளது என்றும் இலவசமாக கிடைக்கும் ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் தொகுப்புகளில் சிறந்தவை எவை என்று கேட்டு எழுதி வருகின்றனர். அவர்களுக்கான சில குறிப்புகள் இங்கு தரப்படுகின்றன. சைமாண்டெக், மேக் அபி, இசெட் மற்றும் மைக்ரோசாப்ட் உட்பட பல நிறுவனங்கள் ஆண்டி வைரஸ் தொகுப்புகளை தயாரித்து வழங்குகின்றன. இவற்றில் சில அனைத்து வகை பாதுகாப்பையும் தருவதாக விளம்பரப்படுத்துகின்றன. ஆனால் தொடக்க கட்டணம் ரூ.4,000 லிருந்து ரூ. 7,000 வரை உள்ளன. இதனால் தான் பலரும் இலவச தொகுப்புகளை நாடுகின்றனர். இணையத்தில் பல தொகுப்புகள் இலவசமாகக் கிடைக்கின்றன. இதில் என்ன வேடிக்கை என்றால் இலவசமாக ஆண்டி வைரஸ் தொகுப்பு தருகிறேன் என்று சொல்லி பல தளங்கள் வைரஸ்களையும் கம்ப்யூட்டர் செயல்பாட்டை முடக்கும் புரோகிராம்களையும் அனுப்பி கெடுதல் விளைவிக்கின்றன. இருப்பினும் சில ஆண்டி வைரஸ் புரோகிராம்கள் முற்றிலும் இலவசமாகவே பாதுகாப்பினைத் தருகின்றன. அவற்றில் சில பற்றிய குறிப்புகள்:

தொகுப்பு 1:


1. பெயர்: Avast! 4 Home EditIon
2. நிறுவனம் : ALWIL Software
3. பைல் அளவு: 26309 கேபி
4. கட்டணம் : இலவசம்
5. இயக்கத்தொகுப்பு : விண்டோஸ்
6.இணைய தள முகவரி : http://files.avast. comiavs4prosetupeng.exe


இந்நிறுவனம் பல ஆண்டுகளாக இலவச ஆண்டி வைரஸ் தொகுப்புகளை வழங்கி வருகிறது. பல நிறுவனங்கள் இதன் தொகுப்புகளை மாடலாகக் கொண்டு இதே போல இலவச புரோகிராம்களை வழங்கி வருகின்றன. 4 ஏணிட்ஞு உஞீடிtடிணிண என்பது அண்மைக் காலத்திய பதிப்பாகும். இதில் ஒரு இன்ஸ்டண்ட் மெசேஜ் ஸ்கேனர், இமெயில் ஸ்கேனர், வைரஸ்களிடமிருந்து பாதுகாக்கும் வளையம் மற்றும் அனைத்து பைல்களையும் ஸ்கேன் செய்திடும் ஸ்கேனர் தரப்பட்டுள்ளது. இந்த தொகுப்பு அவ்வப்போது உருவாகி வரும் வைரஸ்களுக்கு எதிராகத் தன்னை வளப்படுத்தி எதிர்த்து தொடர்ந்து பாதுகாப்பு வழங்குகிறது. இதனுடைய ஸ்கேனிங் செய்திடும் வேகமும் கூடுதலாகவே உள்ளது. இந்த சாப்ட்வேர் தொகுப்பினை முதலில் ஓர் ஆண்டிற்கு இலவசமாகப் பதிந்து பெற்றுக் கொள்ளலாம். வெகு எளிதாகப் பதிந்து பெறும் வசதி தரப்பட்டுள்ளது.


தொகுப்பு 2:


1. பெயர்: Avast! AVG Antivirus 8 Free Edition
2. நிறுவனம் : Grisoft Inc
3. பைல் அளவு: 47924 kb
4. கட்டணம் : இலவசம்
5. இயக்கத்தொகுப்பு : விண்டோஸ்
6.இணைய தள முகவரி : http://www.goisoft.cz/filedir/inst/avg frestfen 8138a1332.எஷெ

பல ஆண்டுகளாகக் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களிடையே மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் இலவச ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் தொகுப்பு இது. ஒரு சில அலுவலகங்களில் பணம் கட்டி வேறு ஆண்டி வைரஸ் தொகுப்பு வாங்கினாலும் கம்ப்யூட்டரை இயக்குபவர்கள் தங்களுக்கு இதுதான் வேண்டும் என்று ஏ.வி.ஜி. ஆண்டி வைரஸ் தொகுப்பைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த தொகுப்பைப் பயன்படுத்துகையில் ஓரளவிற்கே சிஸ்டம் தரும் மெமரியைப் பயன்படுத்துவதால் பிரச்னை எதுவும் இதன் இயக்கத்தால் ஏற்படுவதில்லை. பைல்களை ஸ்கேன் செய்வதில் இந்த தொகுப்பு காட்டும் வேகம் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இலவசமாகவே இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது இதன் சிறந்த அம்சம். அதைப் போல இதன் அப்டேட்டுகளும் என்றைக்கும் இலவசமே.


தொகுப்பு 3:


1. பெயர்: Avira Anti Personal Edition
2. நிறுவனம் : Avira GmbH
3. பைல் அளவு: 24462 kb
4. கட்டணம் : இலவசம்
5. இயக்கத்தொகுப்பு : விண்டோஸ்
6.இணைய தள முகவரி : http://dl1.avgate.net/down/windows/antivirorkstation_win_en_h.exe

இந்த தொகுப்பிற்கும் பல ரசிகர்கள் உள்ளனர். அவாஸ்ட் தொகுப்பு போல பல வகைகளில் இது வைரஸ் தொகுப்பிற்கு எதிரான பாதுகாப்பினை வழங்கி வருகிறது. பயன் படுத்துவோரை வழி நடத்த இந்த தொகுப்பு தரும் டயலாக் பாக்ஸ்கள் குறிப்பிடத் தக்கவையாகும். பைல்களை மிக வேகமாக ஸ்கேன் செய்கிறது. ஆனால் அடிக்கடி வரும் பாப் அப் விண்டோக்கள் சில சமயம் எரிச்சலைத் தருகின்றன. முழுவதும் என்றும் இலவசமாய் இயங்கும் தொகுப்பு இது. இணையத்தில் இன்னும் பல சிறந்த ஆண்டி வைரஸ் தொகுப்புகள் உள்ளன. வரும் காலத்திலும் நிறைய கிடைக்கலாம். ஆனாலும் எச்சரிக்கையுடன் புதிய தொகுப்புகளை டவுண்லோட் செய்து பயன்படுத்த வேண்டும். எனவே தான் சோதிக்கப்பட்டு பலரால் பயன்படுத்தப்படும் பாதுகாப்பான மூன்று தொகுப்புகள் குறித்த விளக்கம் மேலே தரப்பட்டுள்ளது. வாசகர்கள் இவற்றைப் பயன்படுத்தலாம்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Tamil Computer Tips

Popular Posts