Tamil Computer Tips and Tricks

Google-Translate-Chinese (Simplified) BETA Google-Translate-English to French Google-Translate-English to German Google-Translate-English to Italian Google-Translate-English to Japanese BETA Google-Translate-English to Korean BETA Google-Translate-English to Russian BETA Google-Translate-English to Spanish

Tuesday, March 29, 2011

பவர் பாயிண்ட்!

எம்.எஸ் ஆபிஸில் பல அலுவலக தொகுப்பு மென்பொருட்கள் தொகுக்கப்பட்டுள்ளது. அணைவரும் அறிந்ததே இவற்றில் எந்த ஒரு அலுவலக மென்பொருளிலும் இல்லாத சிறப்பான மென்பொருள் என பவர்பாய்ண்டை குறிப்பிடலாம். பவர்பாய்ண்ட் இல்லாமல் எந்த ஒரு அலுவலக நிகழ்ச்சியோ, கருத்தரங்கமோ அல்லது விவாதமோ இல்லை என்று கூறலாம். மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் தொகுப்பில் அனிமேஷன் எபெக்ட்ஸ்கள், ஒலி அமைப்புகள் மற்றும் கண்ணைக் கவரும் கிராபிக்ஸ் காட்சிகளை உள்ளடக்கிய சாஃப்ட்வேராக பவர் பாயிண்ட் விளங்குகிறது. இதில் ப்ரசன்டேஷன் பணிகளை மிக எளிமையாக செய்ய முடியும்.
அனிமேஷன் மட்டுமல்லாமல் குறிப்பிட்ட டெக்ஸ்டின் மேல் மவுஸ் சென்றால் அதற்கு ஒலி அமைப்புகளை கொடுத்துக் கொள்ள முடியும். பவர் பாயிண்ட் உள்ளேயே நிறைய சவுண்டு ஃபைல்கள் உள்ளது. புதிதாக ஏதேனும் சவுண்டு ஃபைலை சேர்க்க வேண்டுமென்றால் இம்போர்ட் ஆப்ஷனை பயன்படுத்தி சவுண்டு ஃபைலை சேர்த்துக் கொள்ள முடியும்.
ஒரு நிறுவனம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது, அதன் படிப்படியான வளர்ச்சி, அதில் எத்தனை பேர் பணிபுரிகிறார்கள், அதன் தற்போதைய நிலவரம் போன்ற அனைத்து விபரங்களையும் பவர்பாயிண்டில் மிக எளிமையாகவும், கண்ணைக்கவரும் ஒலி, ஒளி அமைப்புடன் அழகாக செய்யலாம். இதில் உள்ள ஆட்டோ கன்டன்ட் விசார்டில் பல வகையான லேஅவுட் அமைப்புகள் இருக்கும். இதில் நமக்கு பிடித்தமான லேஅவுட்டை தேர்வு செய்து டைப் செய்து அதற்கு ஏதேனும் எபெக்ட்ஸை கொடுக்கலாம்.
எத்தனை பக்கங்கள் வேண்டுமானாலும் கூடுதலாக இதில் சேர்த்துக் கொள்ளலாம். டைப் செய்த டெக்ஸ்டிற்கு கலர் கொடுத்த பிறகு இங்குள்ள விதவிதமான அனிமேஷன் ஆப்ஷன்களை பயன்படுத்தி டெக்ஸ்டை அனிமேட் செய்யலாம்.
பவர் பாயிண்ட்டின் உள்ளேயே பல வகைகளில் கிளிப் ஆர்ட்கள் உள்ளது. டெக்ஸ்டிற்கு ஏற்றவாறு அதை பயன்படுத்திக் கொள்ளலாம். புதிதாக கிளிப் ஆர்ட்களை பயன்படுத்த வேண்டுமென்றால் இம்போர்ட் ஆப்ஷனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதில் உள்ள ஸ்லைடு ஷோ என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து அதில் உள்ள வியூ ஷோ என்ற ஆப்ஷனை தேர்வு செய்தால் ஃபுல் ஸ்கிரின் மோடுக்கு நாம் செய்த பணிகள் வந்து விடும். ஒவ்வொரு முறை மவுஸின் மூலம் கிளிக் செய்து அடுத்தடுத்த பக்கத்திற்கு போகலாம். ஸ்லைடு ஷோவை F5 கீயை அழுத்தியும் விரைவாக இயக்க முடியும். பவர் பாயிண்டில் சேமிக்கப்படும் ஃபைல்கள் .ppt என்ற ஃபார்மெட்டில் சேமிக்கப்படும்

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Tamil Computer Tips

Popular Posts