Tamil Computer Tips and Tricks

Google-Translate-Chinese (Simplified) BETA Google-Translate-English to French Google-Translate-English to German Google-Translate-English to Italian Google-Translate-English to Japanese BETA Google-Translate-English to Korean BETA Google-Translate-English to Russian BETA Google-Translate-English to Spanish

Tuesday, March 29, 2011

அனைவருக்குமான ஆன்லைன் பாதுகாப்பு

www.staysafe.org/ என்ற முகவரியில் உள்ள இந்த தளம் சென்று இதில் காணப்படும் தகவல்களை அவசியம் இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்திடும் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டும். இன்டர்நெட்டில் பயணிக்கையில் பாதுகாப்பாக பிரவுஸ் செய்ய வேண்டியது மிக மிக அவசியமாக உள்ளது.

நம் பெர்சனல் தகவல்களை நமக்குத் தெரியாமல் தூண்டில் போட்டு பிடிக்கும் பிஷ்ஷர்கள் ஒருபுறம், ஆன்லைன் திருடர்கள் மறுபுறம், வந்து ஜம்மென்று நம் கம்ப்யூட்டரில் அமர்ந்து நாச வேலைகளைச் செய்திடத் திட்டமிட்டு இன்டர்நெட்டில் அடையாளம் காட்டாத வைரஸ் பேய்கள் ஒருபுறம் என பல ஆபத்திற்கு நடுவில் நாம் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டியதுள்ளது.

பாதுகாப்பினை எந்த வழிகளிலெல்லாம் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து பல வகைகளில் பல்வேறு வயதினருக்கு என குழு பிரித்து ஒரு தளம் அறிவுரை கூறுகிறது. http://www.staysafe.org/ என்ற முகவரியில் உள்ள இந்த தளம் சென்று இதில் காணப்படும் தகவல்களை அவசியம் இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்திடும் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டும். இதில் சிறப்பான தகவல் என்னவெனில் பாதுகாப்பு வழிகள் அனைத்தும் வயது வாரியாகத் தரப்பட்டிருப்பதுதான். அந்த அந்த வயதில் எத்தகைய தளங்களைப் பார்வையிடுவார்கள் என்று கணக்கிட்டு அதில் எத்தகைய ஆபத்து இருக்கலாம் என்ற எச்சரிக்கையுடன் பாதுகாப்பு வழிகள் தரப்பட்டுள்ளன.

1. இளம் வயதினர் (Teenagers) : இந்த பிரிவில் இளம் வயதினர் எவ்வாறு பொறுப்பாக இணையத்தில் வலம் வர வேண்டும் என்பதில் தொடங்கி மியூசிக் மற்றும் வீடியோ டவுண்லோடிங், ஆன் லைனில் வருபவர்களிடம் சில்மிஷம் செய்தல் போன்றவை குறித்து அறிவுரை வழங்கப்படுகிறது. இளம் வயதினர் ஒவ்வொருவருக்கும் ஒரு அறிவுரை கிடைக்கிறது. இளம் வயதினர்கள் சிலர் இணையத்தில் பாதுகாப்பு குறித்து எடுத்த வீடியோ காட்சிகளும் இதில் பார்ப்பதற்கு உள்ளன.

2. பெற்றோர்கள் (Parents) : ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் குழந்தைகளை வழி நடத்தும் பொறுப்பு உள்ளதைச் சுட்டிக் காட்டி இணையத்தில் குழந்தைகளை எவ்வாறு வழி நடத்த வேண்டும் என்பது குறித்தும் அதற்கான தளங்கள் குறித்தும் அறிவுரை தரப்படுகிறது. அத்துடன் ஆண்டி வைரஸ் புரோகிராம், பயர்வால், ஸ்பைவேருக்கு எதிரான பாதுகாப்பினை எப்படி ஏற்படுத்துவது என்பது குறித்த வழிகளும் உள்ளன.

3. ஐம்பது வயதிற்கு மேல் (50+) : ஐம்பதிலும் ஆசை வரும் என்ற பாடல் கேட்டதுண்டா? இந்த பிரிவில் கம்ப்யூட்டரில் எப்படி பெர்சனல் தகவல்களை ஐம்பது வயதிற்கு மேலே உள்ளவர்களைக் குறி வைத்து பிடிக்கின்றனர் என்று காட்டப்பட்டுள்ளது.

4. கல்வியாளர்கள் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கென ஒரு தனிப் பிரிவினை உண்டாக்கி அவர்கள் மாணவர்களுக்கு பிரவுசிங் பாதுகாப்பு குறித்து என்ன என்ன சொல்லித் தர வேண்டும் என்று பட்டியலிடுகிறது இந்த தளம். மாணவர்களுக்குக் கம்ப்யூட்டர் பயன்பாட்டினைக் கற்றுக் கொடுத்து அவர்களைக் கம்ப்யூட்டர் பயன்படுத்தும்படி ஈடுபடுத்துவது நல்லதுதான். அதே நேரத்தில் இன்டர்நெட்டின் தன்மை மற்றும் ஆபத்துக்களையும் சொல்லி வைக்க வேண்டியதுள்ளது. இதை எல்லாம் இந்த பிரிவு தருகிறது.

5. இந்த பிரிவுகளோடு The Toolbox என்று ஒரு பிரிவு உள்ளது. இதில் பாதுகாப்பிற்கான சாதனங்களையும் புரோகிராம்களையும் எப்படி பயன்படுத்துவது எனக் காட்டப்படுகிறது. Firewalls, Antivirus, Parental controls, Networking மற்றும் External storage devices ஆகியன குறித்து விரிவான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிகள் அனைத்தும் கொண்டுள்ள இந்த தளத்திற்குக் கட்டாயம் நீங்கள் செல்ல வேண்டும்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Tamil Computer Tips

Popular Posts