Tamil Computer Tips and Tricks

Google-Translate-Chinese (Simplified) BETA Google-Translate-English to French Google-Translate-English to German Google-Translate-English to Italian Google-Translate-English to Japanese BETA Google-Translate-English to Korean BETA Google-Translate-English to Russian BETA Google-Translate-English to Spanish

Tuesday, March 29, 2011

ஷார்ட் கட்

ஏன் எதற்கு? எப்படி?

உங்கள் கம்ப்யூட்டர் மானிட்டர் திரை முழுவதும் பல ஷார்ட் கட்களை அமைத்துக் கொண்டு அவற்றை அடிக்கடி நீங்கள் பயன்படுத்தி வரலாம். ஆனால் உங்களுக்கு ஷார்ட் கட் என்றால் என்ன? அது எப்படி எதற்காகச் செயல்படுகிறது என்று தெரியுமா? முதலில் அதன் பெயர் கூறுவது போல அது ஒரு சுருக்கு வழி.


சரி, அதற்கு மேலும் சில விளக்கங்களைப் பார்ப்போமா! கம்ப்யூட்டரைப் பொறுத்த வரையில் ஷார்ட் கட் என்பது நீங்கள் விரும்பும் எதனையும் உடனடியாகப் பெற அடிப்படையில் ஒரு ஐகானாக டெஸ்க்டாப் கம்ப்யூட்டரின் மானிட்டரில் அமர்ந்திருப்பதுதான் ஷார்ட் கட். அது ஓர் இணைய தளமாக இருக்கலாம், அல்லது டாகுமெண்ட், புரோகிராம் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.



அதற்கு ஒரு ஷார்ட்கட்டை உங்களால் உருவாக்க முடியும். இது நீங்கள் இயக்க விரும்பும் புரோகிராமிற்கான நேரடி வழியாகும். ஆனால் இந்த வழியை அழிப்பதனால் அது எடுத்துக் கொடுக்கும் புரோகிராம் அழியப்போவதில்லை.



இது உருவாக்கப்பட்டவுடன் அதன் கீழ் ஒரு சிறிய சதுரமும் அதில் இன்னும் சிறிய அம்புக் குறியும் இருக்கும். இது தான் மற்ற ஐகான்களுக்கும் ஷார்ட் கட் ஐகான்களுக்கும் உள்ள வேறுபாடு. இது வழி நடத்தும் புரோகிராமை இயக்க இதன் மீது மவுஸ் கர்சரைக் கொண்டு சென்று இரு முறை கிளிக் செய்தால் போதும்.


புரோகிராம் திறக்கப்படும். ஷார்ட் கட் உருவாக்குவதும் எளிது. டெஸ்க் டாப்பில் உள்ள காலி இடத்தில் மவுஸால் ரைட் கிளிக் செய்திடுக. அதன் பின் New, Shortcut எனச் சென்றிடுக. அதன் பின் கிடைக்கும் செட் அப் விஸார்ட் தரும் வழிகளுக்கேற்ப செயல்படுக.

வேர்ட் டெக்ஸ்ட்டுக்கு ஸ்டைல் உருவாக்கும் விதம்


கம்ப்யூட்டரில் அதிகமாக அனைவராலும் பயன்படுத்தப் படுவது மைக்ரோசாப்டின் வேர்ட் தொகுப்பாகும். ஆனால் அதைப் பயன்படுத்துபவர்கள் எல்லாரும் அதன் Style வசதியை நன்றாகப் புரிந்து கொண்டு தங்களது டாக்குமெண்டுகளில் அவற்றை நுழைத்திருப்பார்கள் என்று கூற முடியாது.


எம்எஸ்வேர்டின் பார்மட்டிங் டூல்பாரில் உள்ள முதல் டூல்தான் ஸ்டைல்களுக்கானது. பொதுவாக Normal என அதில் தெரியும். அந்த டிராப்-டவுன் லிஸ்ட்டைக் கிளிக் செய்து பார்த்தால் பல ஸ்டைல்கள் அங்கு தெரியும். வேண்டிய ஸ்டைல் ஒன்றைக் கிளிக் செய்து விட்டு, டாக்குமெண்டில் டைப் செய்யுங்கள். நீங்கள் டைப் செய்தவை அந்த ஸ்டைலின் அடிப்படையில் காட்சி அளிக்கும்.


இதன் மூலம் எம்எஸ் வேர்டில் குறிப்பிட்ட ஸ்டைலில் பைல்களை நீங்கள் உருவாக்கவும் முடியும். எடுத்துக் காட்டாக Question மற்றும் Answer என்ற இரு பெயர்களில் நாம் ஸ்டைல்களை உருவாக்குவோம். இந்த ஸ்டைல்கள் எதற்கு? அவை என்ன வேலைகளை செய்யப் போகின்றன? என்பதை இங்கு பார்ப்போம்.


புத்தகங்களிலும், பத்திரிகைகளிலும் கேள்வி-பதில் பகுதிகளை நீங்கள் கவனித் திருக்கலாம். கேள்வி துவங்குவதற்கு முன்னர் கி என்ற எழுத்து பெரிய அளவில் தெரியும். கேள்வி முடிந்து, பின்பு விடை ஆரம்பிப்பதற்கு முன்பு அ என்ற எழுத்து பெரிய அளவில் தெரியும். எனவே கி எழுத்தை கவனித்த நீங்கள் அங்கு கேள்வி காணப்படுகிறது என்பதையும் அ எழுத்தைக் கவனித்த நீங்கள் அங்கு அந்த கேள்விக்கான பதில் உள்ளது என்பதையும் புரிந்து கொள்வீ ர்கள்.உங்கள் தேவை என்ன என்பதைப் பார்ப்போம்.
Question ஸ்டைலை நீங்கள் தேர்வு செய்த உடனேயே டாக்குமெண்டில் கி என்ற எழுத்து பெரிய அளவில் தானாகத் தோன்ற வேண்டும்.


கேள்வியை நீங்கள் டைப் செய்து எண்டர் கீயை அழுத்திய உடனேயே, அடுத்த வரியில் அ என்ற எழுத்து பெரிய அளவில் தானாக வர வேண்டும். Answer ஸ்டைலுக்கு எம்எஸ் வேர்ட் தானாக மாறிவிட வேண்டும். விடையை டைப் செய்து எண்டர் கீயை நீங்கள் அழுத்திய உடனேயே, கிதஞுண்tடிணிண ஸ்டைலுக்கு எம்எஸ் வேர்ட் மாறி, அடுத்த கேள்விக்கான கி எழுத்தைக் காட்ட வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு கேள் விக்கும் அது ஸ்டைல்களை மாற்ற வேண்டும்.

கேள்வி-பதில் டைப் செய்ய:


முதல் கேள்வியை கையில் எடுத்துக் கொள்ளுங்கள். பார்மட்டிங் டூல் பாரில் உள்ள முதல் டிராப்-டவுன் பட்டியலில் இருந்து Question ஸ்டைலைத் தேர்வு செய்யுங்கள்.


எழுத்து கி தெரியும் கேள்வியை டைப் செய்து முடித்தவுடன் எண்டர் கீயை அழுத்துங்கள். தானாகவே Answer ஸ்டைல் தேர்வாகும். எழுத்து அ தெரியும். பதிலை டைப் செய்யுங்கள். அது முடிந்தவுடன் எண்டர் கீயை அழுத்துங்கள். அடுத்த கேள்வியை டைப் செய்வதற்கு வசதியாக எழுத்து கி தானாக திரையில் தெரியும்.


கேள்வி-பதில்களை டைப் செய்து முடித்தவுடன் வேறு ஏதாவது ஸ்டைலுக்கு மாறிக் கொள்ளுங்கள்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Tamil Computer Tips

Popular Posts