Tamil Computer Tips and Tricks

Google-Translate-Chinese (Simplified) BETA Google-Translate-English to French Google-Translate-English to German Google-Translate-English to Italian Google-Translate-English to Japanese BETA Google-Translate-English to Korean BETA Google-Translate-English to Russian BETA Google-Translate-English to Spanish

Tuesday, March 29, 2011

யு.எஸ்.பி. எஜெக்டர்

பிளாஷ் டிரைவ்களைப் பயன்படுத்தாத நாள் இல்லை. யு.எஸ்.பி. போர்ட்டில் பல்வேறு சாதனங்களைப் பயன்படுத்தாமல் நம் கம்ப்யூட்டர் பயன்பாடு நிறைவடைவதில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் அதற்கான ஐகானை கிளிக் செய்து கிடைக்கும் டயலாக் பாக்ஸில் குறிப்பிட்ட சாதனத்தைத் தேர்ந்தெடுத்து பின் ஸ்டாப் அழுத்தி Safely Remove Hardware என்று செய்தி வந்தவுடன் போர்ட்டில் உள்ள சாதனத்தை வெளியே எடுக்கிறோம். அது பிளாஷ் டிரைவாகவோ, ஐபாட் சாதனமாகவோ, டிஜிட்டல் கேமராவாகவோ அல்லது மொபைல் போனாகவோ இருக்கலாம். இந்த சுற்று வழி செல்லும் சிரமத்தைப் போக்குவதற்காக யு.எஸ்.பி. எஜெக்டர் என்னும் புரோகிராம் இணைய தளத்தில் கிடைக்கிறது. இந்த புரோகிராம் என்ன செய்கிறது? போர்ட்டில் இணைத்துள்ள எந்த ஒரு சாதனைத்தையும் விரைவாக வெளியே எடுத்திட துணை புரிகிறது.

முதலில் இது பென் டிரைவ்களுக்கு மட்டுமே இயங்கியது. இப்போது யு.எஸ்.பி. டிரைவில் இணைக்கப்படும் அனைத்து சாதனங்களுக்கும் இயங்கி வருகிறது. இந்த புரோகிராமினை இன்ஸ்டால் செய்துவிட்டால் டிரைவில் இணைத்துள்ள எந்த சாதனத்தையும் டபுள் கிளிக் அல்லது என்டர் தட்டி உடனே எடுத்துவிடலாம். பலர் ஏற்கனவே எக்ஸ்பி தரும் வசதிக்கும் இதற்கும் என்ன வேறுபாடு? அது எளிதுதானே என எண்ணலாம். ஆனால் விரைவாகச் செயல்பட இதுவே சரியான புரோகிராம் ஆக உள்ளது. இந்த புரோகிராமினை http://quick.mixnmojo.com/usbdiskejector என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பெறலாம்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Tamil Computer Tips

Popular Posts