Tamil Computer Tips and Tricks

Google-Translate-Chinese (Simplified) BETA Google-Translate-English to French Google-Translate-English to German Google-Translate-English to Italian Google-Translate-English to Japanese BETA Google-Translate-English to Korean BETA Google-Translate-English to Russian BETA Google-Translate-English to Spanish

Tuesday, March 29, 2011

அவுட்லுக் எக்ஸ்பிரஸின் சிறப்பு வசதிகள்

அவுட்லுக் எக்ஸ்பிரஸ்
சில எளிய பயன்பாடுகள்:
மைக்ரோசாஃப்ட்டின் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் மின்னஞ்சல் சேவையைப் பயன்படுத்தும் எல்லா பயனாளர்களுக்கும் மிகப் பெரிய கொடையாக உள்ளது. . இதன் சிறப்பான வசதிகள் சிறந்த பயன்பாட்டு வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனாலும் இதன் சில பயன்பாடுகள் பயனாளருக்கு எளிதாக புரிவதில்லை அல்லது பயனாளருக்கு அதனை புரிந்து கொள்ளுமளவிற்கு நேரம் கிடைப்பதில்லை. இதனை கருத்தில் கொண்டு எளிய முறையில் அவுட்லுக் எக்ஸ்பிரஸை பயன்படுத்த சில எளிதான வழிமுறைகளை நாம் காண்போம்.

1. தேதிகளை எளிதாக டைப் செய்ய...
ஏதேனும் ஒரு புதிய டாஸ்கை உருவாக்க விரும்புவோர் அதன் தொடக்க இறுதி நாட்களை உள்ளிட முழுவதுமாக டைப் செய்ய வேண்டியதில்லை. நீங்கள் குறிப்பிட வேண்டிய தேதி தற்போதைய மாதத்திலேயே இருந்தால் நாளை மட்டும் டைப் செய்தால் அவுட்லுக்கே மற்ற விவரங்களை சேர்த்து விடும். அதாவது மார்ச் மாதத்தில் இருக்கும் போது நீங்கள் 25 என்று தட்டச்சு செய்கிறீர்கள் என்றால் அவுட்லுக் எக்ஸ்பிரஸானது தானாகவே அதனை மார்ச் 25 என்று புரிந்து கொள்ளும். மேலும் தற்போதைய மாதத்தில் இல்லாத நாட்களில் உள்ளவற்றை டைப் செய்ய வேண்டுமென்றாலும் அதிலும் ஒரு எளிதான வழியை கொண்டுள்ளது அதாவது குறிப்பிட்ட நாளையும், மாதத்தையும் குறிப்பிட்டால் வருடத்தை தானாக அவுட்லுக் எக்ஸ்பிரஸே சேர்த்து கொண்டுவிடும். நீங்கள் பயன்படுத்திய நாள் குறிப்பிட்ட வருடத்தில் ஏற்கனவே முடிந்திருந்தால் மறு வருடத்தையும் இல்லாவிட்டால் இதே வருடத்தையும் எடுத்துக் கொள்ளும்.

2. அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களை சிறப்பாக சேமித்து வையுங்கள்
நாம் எப்போதெல்லாம் ஒரு மின்னஞ்சலுக்கு பதில் அனுப்புகிறோமோ அந்த மின்னஞ்சல்கள் 'செண்ட் மெயில்' (அனுப்பப்பட்ட அஞ்சல்கள்) என்ற ஃபோல்டரில் சேமிக்கப் படுகின்றன. இவ்வாறு சேமிக்கப்படுவதிலிருந்து ஏதெனும் ஒரு குறிப்பிட்ட தகவலை தேடி எடுக்க முற்படுவது மிகவும் சிரமமான காரியமாகும். எடுத்துகாட்டாக ஒருவர் தனக்கு வரும் மின்னஞ்சல்களை ஒரு குறிப்பிட்ட ஒரு ஃபோல்டருக்குள் சேமிக்கிறார் எனக்கொள்வோம். அதே போல் அந்த மின்னஞ்சல்களுக்கு இவர் அனுப்பும் பதில்களையும் அதே ஃபோல்டரில் சேமிக்க விரும்புகிறார் என்றால் அதற்கு அவர் செய்ய வேண்டிய படிகள்.
(i) "டூல்ஸ்" மெனுவிலிருந்து "ஆப்ஷன்ஸ்" என்ற மெனுவை தேர்வு செய்யவும்.
(ii) அதில் "பிரஃபரன்ஸஸ்" என்ற பிரிவிலிருந்து "ஈ-மெயில் ஆப்ஷன்ஸ்" என்ற பிரிவை தேர்ந்தெடுக்கவும்.
(iii) அதில் மெசெஜ் ஹாண்டலிங் செக்ஷன் என்ற பிரிவில் அட்வான்ஸ்ட் ஈ-மெயில் ஆப்ஷன்ஸ் என்பதை தேர்வு செய்யவும்.
(iv) பின் ஸேவ் மெசெஜஸ் என்ற பிரிவில் "ஸேவ் ரிப்ளைஸ் வித் த ஒரிஜினல் மெசெஜ்" என்ற பெட்டியை கிளிக் செய்யவும்.
இதன் பின்னால் அவுட்லுக்கானது நீங்கள் உருவாக்கிப் பயன்படுத்தி வருகின்ற எல்லா ஃபோல்டர்களுக்கும் இதே அமைப்பை பின்பற்றும்.

3. குறிப்பிட்ட அனுப்புனர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்களை கண்டறியுங்கள்.
குறிப்பிட்ட சிலரிடமிருந்து வரக்கூடிய மின்னஞ்சல்களை மட்டும் சில வண்ணங்களை அந்த மின்னஞ்சல்களுக்கு தருவதன் மூலம் கண்டறிய முடியும். முதலில் குறிப்பிட்ட மின்னஞ்சலுக்கு உரியவரிடமிருந்து வந்த ஏதேனும் ஒரு மின்னஞ்சலை தேர்வு செய்க. அவ்வாறு ஏதுமில்லையென்றால் முகவரியை தட்டச்சு செய்வதன் மூலம் தொடங்கலாம்.
முதலில் டூல்ஸ் மெனுவிலிருந்து "ஆர்கனைஸ்" என்பதை தேர்வு செய்யவும்.
அதில் "ஆர்கனைஸ் மெயில்" எனும் பிரிவில் கலர்ஸ் எனும் தொடர்பை தேர்வு செய்யவும்.
"கண்டிஷனல் ஸ்டேட்மெண்ட்" என்ற பிரிவில் "ஃப்ரம்" என்பதை தேர்வு செய்யவும்.
நீங்கள் ஏற்கனவே ஏதேனும் ஒரு செய்தியை தேர்வு செய்திருந்தால் அந்த செய்திக்குரியவரின் பெயர் "ஃப்ரம்" லிஸ்டில் காட்டப்படும். தேவையான பெயரைத் தேர்வு செய்த பின்இரண்டாவது லிஸ்டில் இருந்து தேவையான நிறத்தை தேர்ந்தெடுக்கவும்.இறுதியாக "அப்ளை கலர்" என்பதை கிளிக் செய்யவும்.

இதன் பின்னால் நீங்கள் தேர்வு செய்த மின்னஞ்சல் முகவரியிடமிருந்து ஏற்கனவே வந்துள்ள, வரக்கூடிய மின்னஞ்சல்கள் எல்லாமும் நீங்கள் தேர்வு செய்த நிறத்தில் காட்டப்படும்.

4. யுனிக்கோட்-ல் மின்னஞ்சல் அனுப்புவதற்கான வழிகள்
முதலில் நீங்கள் யாருக்காவது மின்னஞ்சல் அனுப்புவதற்கான மின்னஞ்சலை தட்டச்சு செய்யும்போது, ஃபார்மெட் --> என்கோடிங் என்பதை தேர்வு செய்யவும். அதில் UTF-8 என்பதை எனேபிள் செய்து விட்டு யுனிக்கோடில் தட்டச்சு செய்து அனுப்பினால் அந்த தகவல் சரியாக யுனிக்கோடில் அனுப்பப் பட்டுவிடும். அவ்வாறு செய்யாவிட்டாலும் தகவலை அனுப்பும் போது கீழே காணுமாறு ஒரு விண்டோ திறக்கும்.
இதில் "send as unicode" என்பதை தேர்வு செய்தால் தகவலானது யுனிகோடில் அனுப்பப்பட்டு விடும்.

சிறப்பு வசதிகள்:
ஈ-மெயில்களை அனுப்பவும், பெறவும் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் உதவுவது அனைவரும் அறிந்ததே. இதைத்தவிர அவுட்லுக் எக்ஸ்பிரஸில் என்னென்ன சிறப்புகள் உள்ளதென பார்ப்போமா?
  • மெயில்கள் அடங்கிய பட்டியலையும், தேர்வு செய்யப்பட்ட மெயிலின் உள்ளே உள்ள விவரத்தையும் ஒரே திரையில் பார்வையிட முடியும். மெயில் தொடர்பான எல்லா ஃபோல்டர்களையும் அதே திரையில் நாம் காண முடியும். எனவே ஒரு ஃபோல்டரில் இருந்து அடுத்த ஃபோல்டருக்கு நாம் விரைவாக மாற முடியும்.
  • அட்ரஸ் புக் ஒன்றை உருவாக்கி நாம் யாருக்கெல்லாம் ஈமெயில் அனுப்புவோமோ அவர்களின் ஈ-மெயில் முகவரிகளைப் சேகரித்து வைக்கலாம். ஈமெயில் அனுப்பும் பொழுது அட்ரஸ் புக்கைத் திறந்து ஈமெயில் அனுப்ப வேண்டியவரின் முகவரியை எடுத்துக்கொள்ளலாம்.
  • நம்மிடம் பல ஈ-மெயில் அக்கவுண்டுகள் இருந்தால் அவற்றிற்கான மெயில்களை ஒரே சட்டத்தில் பார்வையிட முடியும். மேலும் நம் வீட்டிலுள்ள/அலுவலகத்திலுள்ள இதர நபர்களுக்கும் ஈ-மெயில் அக்கவுண்டுகள் இருந்தால் அவர்களுக்கான ஐடென்டிட்டிகளை உருவாக்கலாம். இதனால் ஒவ்வொரு ஐடென்டிட்டிக்கும் தனி மெயில் ஃபோல்டர்களையும், அட்ரஸ் புக்கையும் உருவாக்கலாம்.
  • நம் தேவைக்கெற்ப பல ஃபோல்டர்களை நாம் உருவாக்கி, நமக்கு வருகிற ஈமெயில்களை அந்த ஃபோல்டர்களுக்கு இரு முறையில் நகர்த்தலாம். மெயில்களை ஏறுமுகம் மற்றும் இறங்குமுக வரிசையில் அடுக்கலாம்.
  • ஈமெயில்களில் பயன்படுத்த நம்முடைய கையெழுத்துக்களை உருவாக்கலாம். ஈமெயில் அக்கவுண்ட்டுகளின் தேவைக்கெற்ப கையெழுத்தை மெயிலுடன் அவுட்லுக் எக்ஸ்பிரஸில் அனுப்பலாம்.
  • டிஜிட்டல் என்பதைப் பயன்படுத்தி நாம் ஈமெயில்களை அனுப்பலாம். மெயில்களின் உள்ளே டிஜிட்டல் சிக்னேச்சர் காணப்படும். மேலும் அந்த மெயில்கள் என்கிரிப்ட் செய்யப்பட்டிருக்கும். என்கிரிப்ட் செய்யப்பட்டிருந்தால் அந்த மெயிலை உரியவர் மட்டுமே படிக்க முடியும், பிறர் எவரும் படிக்க முடியாது. ஈமெயிலின் உள்ளே டிஜிட்டல் சிக்னேச்சர் இருப்பதால் மெயிலை நாம் தான் ஈமெயிலை அனுப்பியுள்ளோம் என்பதை ஈமெயிலைப் பெறுபவர் அறிந்துகொள்வார்கள்

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Tamil Computer Tips

Popular Posts