Tamil Computer Tips and Tricks

Google-Translate-Chinese (Simplified) BETA Google-Translate-English to French Google-Translate-English to German Google-Translate-English to Italian Google-Translate-English to Japanese BETA Google-Translate-English to Korean BETA Google-Translate-English to Russian BETA Google-Translate-English to Spanish

Saturday, April 30, 2011

கணினியின் திரையில் தோன்றும் காட்சிகளை வீடியோவாக பதிவு செய்ய வேண்டுமா


     தங்களின் கணினியின் திரையில் தோன்றும் காட்சிகளை ஓர் அழகிய முழு நில வீடியோவாக பெற்றால் நன்றாக இருக்கும் தானே நண்பர்களே! அதுவும் இலவச மென்பொருள் ஒன்றை பயன்படுத்தி.


இதன் மூலம் இனி தாங்கள் ஏதேனும் தகவல்களை அதாவது தொடர் நிகழ்வு தகவல்களையோ அல்லது U-TUBE போன்ற வீடியோகளை பதிவிறக்க முடியாமல் இருக்கும் நேரத்தில் இந்த மென்பொருளை பயன்படுத்தி எளிமையான முறையில் அவற்றை தங்களின் கணினியில் ரேக்கார்ட் செய்து கொள்ளலாம். மேலும் சிறப்பாக தாங்கள் ஏதேனும் வீடியோ மூலம் சில செய்திகளையோ அல்லது கணினி சார்ந்த பாடங்களையும் இதில் பதிந்துகொள்ளலாம். இதனை பயன்படுத்துவது மிக எளிமை. RECORD என்னும் சிகப்பு கலர் பட்டனை அழுத்துவதன் மூலம் தங்களின் திரை காட்சிகளை படமாக்க படுகின்றன். அந்த செயலை நிறுத்த STOP என்னும் பட்டனை அழுத்துவதன் மூலம் மேற்கொள்ளலாம்.

இந்த மென்பொருளின் பெயர் DEBUT VIDEO CAPTUREஇரண்டு முறையில் இந்த மென்பொருள் கிடைக்கிறது. ஒன்று இலவசம் மற்றொன்று கட்டணம் செலுத்தி பெறுவது. இலவச மென்பொருளில் தாங்கள் தங்களின் ரேக்கார்ட் செய்ய பட்ட வீடியோவை தான் சேவ் செய்ய முடியும். இது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை. பிறகு Any Video Convertor Freeமென்பொருளை கொண்டு, தாங்கள் வேறு வகை வீடியோவாக Convertor  கொள்ளலாம். Any Video Convertor Free பற்றி காண கிளிக் செய்யவும் இங்கு.

இந்த வீடியோவை பதிவிறக்க கீழே கிளிக் செய்யவும்.
Download This Software

வைரஸை தங்கள் கணினியில் நுழைய விடாமல் தடுக்க



வைரஸை தங்கள் கணினியில் நுழைய விடாமல் தடுக்க!
     தங்கள் கணினியில் வைரஸை அறம்பத்திலே நுழையவிடாமல் தடுக்க, வேண்டும் நண்பர்களே!
எதையும் முன்னரே தடுப்பது நல்லது தான் நன்று நண்பர்களே. இந்த முறை தங்கள் கணினியை செயலிக்க செய்யும் வைரஸ்க்கும் பொருந்தும்.
தங்களின் கணினியை வைரஸ் தாக்கி செயலிக்க செய்த பின்னர், புலம்புவதில் பயனில்லை.

     தங்களின் கணினியை வைரஸ் தாக்குவதற்கு முன்னரே, தடுப்பது சிறப்பான செயல். இந்த சிறப்பான சேவையை FIREWALL செய்கின்றன. அனைவரின் கணினியிலுமே இந்த FIREWALL ஆனது இருக்கும். தங்களின் OS INSTALL செய்யும் போது இதுவும் இலவசமாக இணைத்து தரப்படும்.MICROSOFT நிறுவனம் வழங்கும் இந்த FIREWALL ஆனது அவ்வளவு சிறப்பான சேவையை வழங்கவில்லை.


     இந்த சேவையை, பிற சில முன்னனி நிறுவனங்கள் வழங்குகின்றன, சிறப்பாக. அது தான் ZONE ALARAM வழங்கும் இலவச FIREWALL .தேவையற்ற மென்பொருள் மேலும் பல வகையான வைரஸ்களை தங்களின் கணினியில் நுழையவிடாமல் தடுத்துவிடுகின்றன.
இதை தங்களின் கணினியில் நிறுவியவுடன்.. முதல் தடவை மட்டும் தாங்கள் இயக்கும் எந்த மென்பொருளையும் செயல்பட அனுமதிக்கவா! என கேட்டும் இதற்கு தாங்கள் YES என தேர்வு செய்யவும்.

இந்த மென்பொருளை பதிவிறக்க கீழே கிளிக் செய்யவும்.
DOWNLOAD ZONE ALARAM

வெப்சைட் - தமிழ்நாடு அரசு


தமிழ்நாடு அரசு அறிவிப்புகள் மற்றும் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை போன்றவற்றை அறிந்துகொள்ளலாம்.
தமிழில் படிக்க

இங்கே டிரைவிங் லைசன்ஸ், ரேசன் கார்டு, ஜாதி சான்றிதழ், வசிப்பிட சான்றிதழ், பிறந்தநாள் சான்றிதழ், தண்ணீர் குழாய் புது இணைப்பு, வில்லங்கச் சான்றிதழ், வருமான சான்றிதழ், பட்டா மாற்றுதல், வாகனங்கள் பதிவு சான்றிதழ், போன்றவற்றிக்கான மேலும் பல விண்ணப்பப்படிவங்களை இங்கே இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இதற்கான ஆன்லைன் சேவையும் இங்கே கிடைக்கின்றது.


இதேபோல் சென்னை மாநகராட்சியின் வெப்சைட் இதுதான்
தமிழில் படிக்க

பள்ளி பாடப்புத்தகங்கள்

தமிழ்நாடு அரசு பள்ளி பாடப்புத்தகங்கள்(1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புவரை ) பிடிஎப்(PDF) வடிவில்..டவுன்லோட்( Download ) செய்ய இங்கே செல்லவும்
http://www.textbooksonline.tn.nic.in

சமச்சீர் கல்வி 10ம் வகுப்பு பாட நூல்கள் டவுன்லோட்( Download ) செய்ய

கணினியில் DON'T SEND ERROR MESSAGE இனை தடுப்பதற்கு..




நமது கணினியில் சில நேரம் DON'T SEND ERROR ரிப்போர்ட் அப்டிங்கற MESAAGE அடிக்கடி DESKTOP முன்னாடி வந்து நிற்கும் ..இதனை DISABLE செய்ய ஒரு IDEA இருக்கு இது ஒன்னும் புதுசு இல்ல ஏற்க்கனவே உள்ளதுதான் ..

First goto Right Click ->My Computer
Then goto properties.
Then goto advanced tab
Then click error reporting button


Click on disable error reporting

WINDOWS Shortcut KEYS

நீங்கள் கட்டாயம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய சில ஷார்ட்கட் கீ தொகுப்புகள் இங்கு தரப்பட்டுள்ளன. இவற்றை மனப்பாடம் செய்ய வேண்டாம். அடிக்கடி பயன்படுத்துங்கள். பின்  எப்போது கேட்டாலும் இவற்றை நீங்கள் சரியாகச் சொல்வீர்கள்.



1. CTRL+C (Copy): தேர்ந்தெடுத்தடெக்ஸ்ட், படம், பைல் என எதனையும் காப்பி செய்திட; காப்பி 

    செய்ததை அடுத்து எந்த இடத்திலும் எந்த பைலிலும் ஒட்டிக் கொள்ளலாம்.

2. CTRL+X (Cut): தேர்ந்தெடுத்தடெக்ஸ்ட், படம், பைல் என எதனையும் நீக்கிட; நீக்கப்பட்டவை  

    கிளிப் போர்டு மெமரியில் இருக்கும் அதனை பேஸ்ட் செய்து கொள்ளலாம்.

3. CTRL+V (Paste): ஏற்கனவே தேர்ந்தெடுத் ததை, கட் செய்ததை பேஸ்ட் செய்திட; இதற்குப் 

    பதிலாக இன்ஸெர்ட் கீயையும் பயன்படுத்தலாம்.

4. CTRL+Z (Undo): சற்று முன் மேற்கொண்ட செயலை மாற்றி பழைய நிலைக்குக் கொண்டு வர.

5. DELETE (Delete): எதனையும் அழித்துவிட; இதனை மீண்டும் கொண்டு வர ரீசைக்கிள் பின்னில் 

    தேட வேண்டும்; தேடிப் பெறாமல் பேஸ்ட் செய்திட முடியாது.

6. SHIFT+DELETE: நிரந்தரமாக அழித்துவிட; இந்த கட்டளை மூலம் அழிக்கையில் அது ரீ சைக்கிள்

    பின்னுக்குப் போகாது.

7. F2 Key: பைல் ஒன்றின் பெயரை மாற்றிப் புதிய பெயரிட.

8. CTRL+RIGHT ARROW: ஒவ்வொரு சொல்லாக கர்சரைக் கொண்டு செல்ல.

9. CTRL+UP ARROW: முந்தைய பாராவின் முதல் தொடக்கத்திற்குக் கொண்டு செல்ல.

10. CTRL: இந்த கீயை அழுத்திக் கொண்டு மவுஸை இழுத்தால் அதில் அடைபடும் டெக்ஸ்ட் 

      அல்லது படம் செலக்ட் செய்யப்படும்.

11. CTRL+DOWN ARROW: அடுத்த பாராவில் தொடக்கத்திற்குக் கொண்டு செல்ல.

12. SHIFT: இந்த கீயை அழுத்தியவாறே ஆரோ கீகளை அழுத்தினால் தொடர்ந்து கூடுதலாக

      வரிகளோ, எழுத்தோ பாராவோ செலக்ட் ஆகும்.

ஒரு சிடி அல்லது டிவிடியை அதன் ட்ரேயில் செலுத்தியபின் அதில் உள்ள ஆட்டோமெடிக் ஸ்டார்ட் அதனை இயக்கும். அந்த இயக்கத்தை நிறுத்த வேண்டுமாயின் இந்த கீயை சிடியை ட்ரேயில் வைத்து தள்ளிவிட்டபின் அழுத்திக் கொண்டிருக்க வேண்டும்.

13. CTRL+A: அனைத்தும் செலக்ட் செய்திட.

14. F3 Key: பைல் அல்லது போல்டரைத் தேட.

15. ALT+ENTER: தேர்ந்தெடுக்கப்பட்ட பைலின் புராபர்ட்டீஸ் விண்டோ காட்டப் படும்; இதில் பைல்

       குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.

16. ALT+F4: அப்போது இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராமை மூடலாம்.

17. ALT+SPACEBAR: எந்த விண்டோ இயங்கிக் கொண்டிருக்கிறதோ அதற்கான ஷார்ட் கட் 

     திறக்கப்படும்.

18. CTRL+F4: ஒரே நேரத்தில் பல டாகுமெண்ட்களைத் திறந்து பணியாற்றிக் கொண்டிருக்கையில் 

      நீங்கள் அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் பைலை மூடுவதற்கு உதவும்.

19. ALT+TAB: திறந்திருக்கும் புரோகிராம்களில் ஒவ்வொன்றாகச் செல்ல உதவும்; எந்த புரோகிராம்

       தேவையோ அதில் கர்சரை நிறுத்தி என்டர் செய்தால் அந்த புரோகிராம் திறக்கப்படும்.

20. ALT+ESC: டாஸ்க் பாரில் திறக்கப் பட்டுள்ள புரோகிராம் டேப்களில் ஒவ்வொன்றாகச் 

        செல்லும்; தேவையான புரோகிராம் தேர்ந்தெடுக்கப்படுகையில் கிளிக் அல்லது என்டர் 
        செய்தால் அந்த புரோகிராமில் உள்ள பைல் ஸ்கிரீனில் காட்டப்படும்.

21. CTRL+ESC : ஸ்டார்ட் மெனு திறக்க.

22. F10 Key: ஒரு மெனுபாரினை இந்த கீ இயக்கத் தொடங்கும்.

23. ESC: அப்போதைய செயல்பாட்டினைக் கேன்சல் செய்திடும்


Monday, April 18, 2011

VLC மீடியா ப்ளேயருக்கான 100+ அட்டகாசமான ஸ்கின்கள்


VLC Media Player பெரும்பாலான கணினி பயனாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதிலுள்ள ஆச்சர்ய படவைக்கும் வசதிகள், மற்றும் இது ஒரு சுதந்திர இலவச மென்பொருள் என்பதும் இதற்கு காரணமாக இருக்கிறது. இந்த ப்ளேயரை மேலும் அழகு படுத்த உங்களுக்காக அட்டகாசமான ஸ்கின்கள் (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது). தரவிறக்கம் செய்யும் ஸ்கின்களை எப்படி VLC யில் பதிவது என்பதை பார்க்கலாம். 
உங்கள் கணினியில் VLC ப்ளேயரின் Shortcut ஐ வலது க்ளிக் செய்து Properties க்ளிக் செய்து அங்கு shortcut டேபில் சென்று, VLC உங்கள் வன்தட்டில் எங்கு பதியப்பட்டுள்ளது என்று பார்த்துக் கொள்ளுங்கள். வழக்கமாக C:\Program Files\VideoLan\VLC என்று இருக்கும். 

 
My Computer -ல் அந்து குறிப்பிட்ட லொகேஷனுக்கு சென்று அதிலுள்ள Skins ஃபோல்டருக்கு செல்லுங்கள்.

 
இந்த ஃபோல்டருக்குள்தான் நீங்கள் தரவிறக்கம் செய்யும் ஸ்கின்களை சேமித்து வைக்க வேண்டும். 





இப்படி சேமித்துக் கொண்ட பிறகு, VLC ப்ளேயரை திறந்து கொண்டு Tools மெனுவில் Preferences என்பதை க்ளிக் செய்யுங்கள்.


இப்பொழுது திறக்கும் Interface Settings திரையில் Use Custom Skin ரேடியோ பட்டனை க்ளிக் செய்து பிறகு Save பட்டனை க்ளிக் செய்து கொள்ளுங்கள். ஒரு முறை VLC ப்ளேயரை மூடி பின் திறக்கவும்.


இப்பொழுது Default skin உடன் VLC ப்ளேயர் திறக்கும்.  இந்த திரையில் வலது க்ளிக் செய்து Interface சென்று Select skin க்ளிக் செய்து, தேவையான Skin ஐ தேர்வு செய்து கொள்ளுங்கள். 
அவ்வளவுதான்.. இதோ இந்த முறையில் உங்கள் VLC ப்ளேயரை அழகுபடுத்துங்கள். 

YouTube: வீடியோக்களை வேண்டிய வடிவில் தரவிறக்க அட்டகாசமான கருவி


பலரும் YouTube வீடியோக்களை தங்களது கணினியில் தரவிறக்கி பார்ப்பதையே பெரும்பாலும் விரும்புகிறார்கள். இப்படி YouTube வீடியோக்களை தரவிறக்க பல மென்பொருட்கள் மற்றும் வலைப்பக்கங்கள் இருந்தாலும்,YouTube Downloader HD என்ற இலவச மென்பொருள் கருவி, நல்ல தரமானதாகவும், விரைவாக தரவிறக்கம் செய்யும்படியாகவும், பிற வீடியோ வடிவிற்கு மாற்றும் வசதியோடும் உள்ளது. 

(தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)


இதனை நிறுவும் பொழுது இறுதி திரையில் தேவையான வசதியை மட்டும் தேர்வு செய்து Finish பொத்தானை அழுத்துங்கள். 


இனி இந்த கருவியில் தேவையான தரத்தை (FLV video 240p / Medium quality/HQ 360p/HD 1080p) Download என்பதற்கு நேராக உள்ள லிஸ்ட் பாக்ஸில் தேர்வு செய்து கொள்ளுங்கள்.

பிறகு, YouTube தளத்தில் உங்களுக்கு தேவையான வீடியோ உள்ள பக்கத்திற்கு செல்லுங்கள்.


அந்த பக்கத்தின் URL ஐ அட்ரஸ் பாரிலிருந்து காப்பி செய்து கொண்டு, இந்த YouTube Downloder HD மென்பொருள் கருவியில் உள்ள Video URL என்பதற்கு நேராக பேஸ்ட் செய்து விடுங்கள்.


உங்கள் வன்தட்டில் எந்த ஃபோல்டரில் சேமிக்க வேண்டும் என்பதை Save to பகுதிக்கு நேராக கொடுத்து Download பொத்தானை அழுத்துங்கள்.


ஒருவேளை நீங்கள் தேர்வு செய்திருந்த quality யில் அந்த குறிப்பிட்ட வீடியோ இல்லையெனில், அதற்கடுத்த குறைந்த quality யில் முயற்சி செய்யட்டுமா? என்ற வசனப்பெட்டி தோன்றும், இதில் Yes பொத்தானை அழுத்துங்கள்.


அட்டகாசமான வேகத்தில் வீடியோ தரவிறக்கப்படுவதை பார்க்கலாம்.


இதன் வேகமும் தரமும், பிற கருவிகளை விட அருமையாக உள்ளது.



பிற AVI, MP4 போன்ற வடிவங்களில் மாற்றி சேமிக்கவும் இதில் வசதி உள்ளது.

YouTube Downloader HD free download

Google Chrome: பதிவர்களுக்கான பயனுள்ள நீட்சி!


நம்மில் பலரும், சக பதிவர்களின் இடுகைகளை Google Reader மூலமாக படித்து வருகிறோம். ஆனால் அவ்வப்பொழுது Google Reader தளத்திற்கு சென்று புதிய நண்பர்களின் இடுகைகள் ஏதெனும் உள்ளதா? என பார்த்து வருவது கொஞ்சம் அலுப்பு தரக்கூடிய விஷயமாக உள்ளது. இந்த பணியை எளிதாக்க.. Google Chrome உலாவிக்கான பயனுள்ள நீட்சி Google நிறுவனத்தின் Google Reader Notifier. 





(தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது.) இந்த நீட்சியை உங்கள் க்ரோம் உலாவியில் பதிந்து கொண்ட பிறகு, மேலே உள்ள டூல்பாரில் இந்த நீட்சிக்கான ஐகான் தோன்றியிருப்பதை கவனிக்கலாம்.


க்ரோம் உலாவியில் நீங்கள் ஒரு முறை உங்கள் Google பயனர் கணக்கில் நுழைந்து விட்டால், உடனடியாக நீங்கள் படிக்காமல் Google Reader இல் உள்ள இடுகைகளின் எண்ணிக்கை இந்த ஐகானில் அப்டேட் செய்யப்படும். அத்தோடு இந்த ஐகானை க்ளிக் செய்தால், Google Reader இல் Un Read இடுகைகளின் லிங்குகள் Popup ஆகும்.


இந்த நீட்சியின் Options பகுதிக்கு சென்று கீழே உள்ள வசதியை நமது தேவைக்கு ஏற்றபடி மாற்றிக் கொள்ளலாம்.



Facebook: உரையாடலை ரெக்கார்டு செய்வது எப்படி?


Facebook சமூக வலைப்பின்னல் நமது வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. Facebook இல் நண்பர்களுடன் அல்லது உறவினர்களுடன் chat செய்யும் பொழுது, அந்த முழு உரையாடலையும், ஆவணபடுத்த விரும்பி அவற்றை Record செய்து பிறிதொரு சந்தர்ப்பத்தில் உபயோகிக்க நெருப்பு நரி (FireFox) உலாவியில் Facebook Chat History Manager எனும் நீட்சி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. 



(231,784 பயனாளர்கள் உபயோகிக்கும் இந்த நீட்சியின் தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)


இந்த நீட்சியை தரவிறக்கி உங்கள் நெருப்பு நரி உலாவியில் பதிந்து கொண்ட பிறகு, முதலாவதாக செய்ய வேண்டியது.. Tools menu விற்கு சென்று Facebook Chat Manager மற்றும் Get Facebook ID ஐ க்ளிக் செய்யுங்கள்.


இப்பொழுது திறக்கும் வசன பெட்டியில் Facebook -இல் லாகின் செய்து, Allow என்ற பொத்தானை க்ளிக் செய்யுங்கள்.

அடுத்து உங்கள் Facebook இன் ID ஒரு வசனப் பெட்டியில் தோன்றும், இதனை தேர்வு செய்து காப்பி செய்து கொள்ளுங்கள்.



மறுபடியும் Tools - Facbook Chat Manager - Create Account க்ளிக் செய்யுங்கள்.


அடுத்து திறக்கும் வசனப் பெட்டியில், ஏற்கனவே காப்பி செய்து வைத்திருக்கும் Facebook ID ஐ பேஸ்ட் செய்து, உங்களுக்கான பயனர் கணக்கு ஒன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள்.



இனி Facebook இல் உங்கள் உரையாடல்கள் (Chat) அனைத்தும் பதிவு செய்யப்படும். இனி பிறகு உங்களுக்கு இந்த உரையாடல்கள் தேவைப்படும் பொழுது, Tools - Facebook Chat Manager -View History க்ளிக் செய்வதன் மூலமாகவோ அல்லது Ctrl+Alt+F கீகளை அழுத்துவதன் மூலமாகவோ, சேமிக்கப்பட்ட அனைத்து உரையாடல்களையும் பட்டியலில் காண முடியும்.

Related Posts Plugin for WordPress, Blogger...

Tamil Computer Tips

Popular Posts