Tamil Computer Tips and Tricks

Google-Translate-Chinese (Simplified) BETA Google-Translate-English to French Google-Translate-English to German Google-Translate-English to Italian Google-Translate-English to Japanese BETA Google-Translate-English to Korean BETA Google-Translate-English to Russian BETA Google-Translate-English to Spanish
Showing posts with label ஒரிஜினல்... அதே இடத்தில் அப்படியே. Show all posts
Showing posts with label ஒரிஜினல்... அதே இடத்தில் அப்படியே. Show all posts

Tuesday, March 29, 2011

ஒரிஜினல்... அதே இடத்தில் அப்படியே!

எம்.எஸ். வேர்ட், எக்ஸெல் அல்லது பவர்பாய்ண்ட் பைல்களைக் கையாள்கையில் சில வேளைகளில் பைல் ஒன்றில் மாற்றங்களை ஏற்படுத்துவீர்கள். உங்கள் நோக்கம் பழைய பைலை அப்படியே வைத்துக் கொண்டு மாற்றங்களுடனான புதிய பைல் வடிவத்தினை புதிய பெயரில் வைத்திட வேண்டும் என்பது. ஆனால் ஏதோ எண் ணத்தில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கையில் சேவ் அஸ் செல்லாமல் கண்ட்ரோல் + எஸ் கீகளை அழுத்தி ஒரிஜினல் பைலை மாற் றங்களுடன் சேவ் செய்து ஒரிஜினல் பைலை கோட்டைவிட்டுவிடுவீர்கள். இதற்கு தவறே ஏற்படுத்த முடியாத ஒரு வழி ஒன்று உள்ளது. File மெனு திறந்து Open பிரிவு செல்லுங்கள்.

இந்த விண்டோவில் நீங்கள் பயன்படுத்த விரும்பும் பைலைத் தேடுங்கள். பைலை கண் டுபிடித்தவுடன் Open பட்டனை அழுத்தும் முன் சற்று தாமதப்படுத்துங்கள். எப்போதாவது அந்த பட்டனில் கீழ் நோக்கி ஒரு அம்புக் குறி இருப்பதனைப் பார்த்திருக்கிறீர்களா? நிச்சயம் பார்த்திருக்க மாட்டீர்கள். இப்போது பாருங்கள். இது போன்ற அம்புக் குறி இருப்பது எதனைக் குறிக்கிறது? சம்பந்தப் பட்ட பட்டனுக்கு இன்னும் சில சாய்ஸ் இருப்பதனைக் காட்டுகிறது. இப்போது அந்த அம்புக் குறியினை கிளிக் செய்திடுங்கள். ஒரு சிறிய மெனு விரியும். அதில் “Open as Copy” என்ற பிரிவைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் புரோகிராம் நீங்கள் தேர்ந்தெடுத்த பைலின் காப்பி ஒன்றைத் தேர்ந்தெடுக்கும். இந்த பைலில் நீங்கள் மேற்கொள்ள விரும்பும் எடிட் வேலைகளை மேற்கொள்ளுங்கள். உங்கள் ஒரிஜினல் பைல் அப்படியே இந்த மாற்றங்கள் இன்றி இருக்கும்.

கிளிப் போர்டு வியூவர்

எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் நீங்கள் எந்த டெக்ஸ்ட், படம், கிராபிக்ஸ் என எதனை காப்பி அல்லது கட் செய்தாலும் அது கிளிப் போர்டு வியூவரில் தான் சென்று அமரும். எனவே எந்த ஒரு நிலையிலும் நீங்கள் இறுதியாகக் காப்பி செய்தது என்ன என்று தெரிந்து கொள்ள கிளிப் போர்டு வியூவரைக் காணலாம்.இதனை எங்கிருந்து பெறுவது? எந்த தொகுப்பிலும் டெக்ஸ்ட் ஒன்றை தேர்ந்தெடுத்து கண்ட்ரோல் + சி அழுத்துகிறீர்கள் அல்லவா? அப்போது இருமுறை சிஅழுத்துங்கள். உடனே கிளிப் போர்டு விரிவடையும். அதில் என்ன டெக்ஸ்ட் உள்ளது என்று தெரியவரும்.

இம்மி இம்மியாய் ஆப்ஜெக்ட் நகர்த்த

பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் ஸ்லைட் ஷோ புரோகிராம் ஒன்றை தயாரிக்கையில் ஆப்ஜெக்ட்டுகளைச் சரியான இடத்தில் வைத்தால் தான் நன்றாகத் தோற்றமளிக்கும். அது ஒரு படமாகவோ, சார்ட்டாகவோ அல்லது கிளிப் ஆர்ட்டாகவோ டெக்ஸ்ட் பாக்ஸாகவோ இருக்கலாம். ஆனால் இவற்றைச் சிறிது இழுத்தால் நாம் எதிர்பார்த்த இடத்தில் அமராமல் தள்ளி சென்று நிற்கும். மீண்டும் எதிர்த் திசையில் இழுத்தால் முன்பு இருந்த இடத்தையும் தாண்டிச் செல்லும். எரிச்சல் கூடி நாம் அந்த ஆப்ஜெக்டையே எடுக்கும் சூழலுக்குத் தள்ளப்படுவோம். இதற்கு ஒரு தீர்வு உள்ளது. முதலில் நகர்த்த வேண்டிய ஆப்ஜெக்டைத் தேர்ந்தெடுக்கவும். அது ஒரு டெக்ஸ்ட் பாக்ஸாக இருந்தால் டெக்ஸ்ட் பாக்ஸ் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதனை உறுதி செய்க. கர்சர் டெக்ஸ்ட் பாக்ஸுக்குள் இருக்கக் கூடாது. இனி ஆரோ கீ ஒன்றை ஒருமுறை தட்டவும். இப்போது ஆரோவின் திசையில் நகர்ந்திருக்கும். இனி கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு விரும்பிய திசைக்கான ஆரோ கீயை அழுத்துங்கள். ஆப்ஜெக்ட் சிறிது சிறிதாக இம்மி இம்மியாக நகர்வதனைப் பார்க்கலாம். இனி நீங்கள் விரும்பிய இடத்தில் துல்லிதமாக ஆப்ஜெக்டை அமைக்கலாம்.

Related Posts Plugin for WordPress, Blogger...

Popular Posts