Tamil Computer Tips and Tricks

Google-Translate-Chinese (Simplified) BETA Google-Translate-English to French Google-Translate-English to German Google-Translate-English to Italian Google-Translate-English to Japanese BETA Google-Translate-English to Korean BETA Google-Translate-English to Russian BETA Google-Translate-English to Spanish

Friday, June 17, 2011

உபயோகமுள்ள சிறந்த 5 ஐபேட் அப்ளிகேசன்ஸ்


Top 5 Productivity Apps for iPadஐபேட் பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். பல முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு பலதரப்பட்ட அம்சங்கள், வசதிகள் கொண்ட ஐபேட்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். ஐபேட் வெளிவரத்தொடங்கிய காலங்களில் இருந்து, அவை எவ்வளவு தூரம் சிறப்பாகவும், பயனுள்ளதாகவும் செயல்படும் என்ற சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் பல எழுந்தன. அவை அனைத்திற்கும் நல்ல விதமான பதில்களே ஓரளவுக்கு கிடைத்துள்ளன.
ஐபேட்களில் முக்கியமானவை அவைகளில் பயன்படுத்தப்படும் அப்ளிகேசன்ஸ். அதாவது நாம் அன்றாடம் தேவைக்கு பயன்படுத்துவது. அப்ளிகேசன்களில் பல வகைகள் உண்டு. பொழுதுபோக்கு சார்ந்த அப்ளிகேசன்ஸ் அவற்றுள் பிரபலமானவை. அவைகளை தாண்டி சிறந்த பலனுடைய அப்ளிகேசன்ஸ் பல இருக்கின்றது. அவற்றுள் உங்களுக்கு அவசியமான சிறந்த 5 அப்ளிகேசன்ஸ்.

Pages

Pages என்பது ஐபேட்ஸ்காக வடிவமைக்கப்பட்ட சக்தி வாய்ந்த word processorஅப்ளிகேசன்.
இந்த அப்ளிகேசன் மூலம் ஆவனங்கள்,கடிதங்கள்,அறிக்கைகள் போன்றவற்றை எளிதாக உருவாக்கலாம். முன்னரே தயார்நிலையில் உள்ள டெம்ப்லேட்களில் இருந்து உங்களுக்கு பிடித்தமான வண்ணங்களில்,தோற்றங்களில் ஆவனங்களை உருவாக்கலாம். மேலும் Microsoft Word documentகளில் இருந்து இதற்கு ஆவனங்களை ஏற்றி எடிட் செய்திடலாம். உருவாக்கிய ஆவனங்களை பகிர்ந்து கொள்ளவும் முடியும். நீங்கள் பிரிண்ட் செய்ய விரும்பினால் Airprint உபயோகித்து பிரிண்ட் செய்யலாம். எடிட் செய்வதும் onscreen கீபோர்டு மூலம் எளிதாகிறது.
pages onscreen keyboard
தேவையெனில் புகைப்படம் மற்றும் வீடியோக்களையும் இணைத்து கொள்ளலாம். ஆவனங்களை pdf தோற்றத்திலும் சேமிக்க முடியும்.
இந்த அப்ளிகேசன் 51.3 MB அளவில் வருகிறது.pages

GoodReader

GoodReader அப்ளிகேசன் ஒரு சிறந்த PDF Reader ஆகும். மேலும் இது நல்ல File Managerஆகவும் பயன்படுகிறது. இந்த அப்ளிகேசன் 100 MBக்குமேல் உள்ள pdf மற்றும் txt தோற்ற கோப்புகளையும் மிக எளிதாகவும்,வேகமாகவும் திறக்க உதவுகிறது. இந்த அம்சம் வேறு எந்த அப்ளிகேசனிலும் இல்லை. இது mark-up,typewriter text boxes, sticky notes, lines, arrows, freehand drawings போன்ற வசதிகளையும் தருகிறது. MS Office documents, iWork ’08 and ’09 documents, HTML webarchives, high resolution images, audio மற்றும் video files போன்றவைகளையும் திறந்து பார்க்க உறுதுணையாக இருக்கிறது. இதன் File Manager வசதி புதிதாக folderகளை உருவக்கவும், கோப்புகளை வேறு இடத்திற்கு நகர்த்த,பிரதி எடுக்க,பெயர்மாற்றம் செய்ய zip மற்றும் unzip செய்ய மற்றும் செய்யவும் மின்னஞ்சல் உதவுகிறது. உங்கள் pdf கோப்புகளை கையாள மிக சிறந்த அப்ளிகேசன் இதுவாகும்.
goodreader
இந்த அப்ளிகேசன் 13.6MB அளவில் வருகிறது.

Keynote

Keynote என்பது ஐபேட்ஸ்காக வடிவமைக்கப்பட்ட presentation அப்ளிகேசன். இதில் 12 Apple-designed themes, 8 slide masters மற்றும் 20 professional-quality slide transitions உள்ளன.
keynote
இந்த அம்சங்களை கொண்டு கண்ணைக்கவரும் விதவிதமான பல presentationஸ் உருவாக்க முடியும். Microsoft PowerPoint fileஐ இந்த அப்ளிகேசனில் ஏற்றி எடிட் செய்திட முடியும். தரமான Slideகள் உருவாக்க புகைப்படம் மற்றும் வீடியோஸ் இணைத்து presentationஸ் உருவாக்கலாம். தரம் மிக்க அனிமேசன், அட்டவணை மற்றும் படங்களை கொண்டு சிறந்த presentationஸ் உருவாக்கலாம். இந்த அப்ளிகேசன் உங்கள் வியப்புக்கு தடை போடாது.
keynote_animations
இந்த அப்ளிகேசன் 66.9 MB அளவில் வருகிறது.

Numbers

Number ஒரு சக்திவாய்ந்த Spreadsheet அப்ளிகேசன். இது ஐபேட்காக தயாரிக்கப்பட்டSpreadsheet அப்ளிகேசன். இதில் 250க்க்கும் மேற்பட்ட Function௧ள் உள்ளன. கண்ணைகவரும் அட்டவணைகளும்,படங்களும், கொண்டு சிறந்த Spreadsheet௧ள் உருவாக்க முடியும். முன்னரே தயார் நிலையில் உள்ள டெம்ப்லேட்௧ள் கொண்டும் நாம் புதிய Spreadsheet௧ள் உருவாக்க முடியும்.மேலும் Microsoft Excel கோப்புகளையும் திறந்து பார்க்கமுடியும்.
numbers
ஒரு முறை நீங்கள் Spreadsheetஐ உருவாக்கிவிட்டீர்கள் எனில் நீங்கள் அதனை முழுத்திரையில் பார்க்க முடியும். மேலும் அதனை Airprint மூலம் பிரிண்ட் எடுத்து கொள்ளலாம்.
நீங்கள் ஒருமுறை இதனை பயன்படுத்திவிட்டால் நீங்கள் இத்தனை எப்போதும் விடமாட்டீர்கள்.
இந்த Number அப்ளிகேசன் 69.9 MB அளவில் வருகிறது.

Penultimate

Penultimate என்பது ஐபேட்ஸ்காக வடிவமைக்கப்பட்ட Handwritting அப்ளிகேசன். வருடக்கணக்காக ஐபேட்ஸ்கான Handwritting அப்ளிகேசன்களில் முதலிடத்தில் உள்ளது Penultimate. இந்த உபயோகப்படுத்துவதும் நிஜ தாள்களில் எழுதுவதும் கிட்டதட்ட ஒன்றே.
penultimate
ஏனெனில் அவ்வளவு தத்ரூபமாக உள்ளது. இந்த அப்ளிகேசன்ஐ குறிப்பு எடுக்கவும்,ஓவியம் தீட்டவும், யோசனைகளை கிறுக்கவும் பின்பு அவற்றை பகிர்ந்து கொள்ளவும் பயன்படுத்தலாம்.
Penultimate
பல கண்கவர் டெம்ப்லேட்ஸை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதில் Wrist protection technology உள்ளது. அதன்படி தவறுதலாக கை திரையில் உறைவதால் ஏற்படும் கிறுக்கல்களை சரி செய்கிறது.
penultimate
நீங்கள் எழுதிய கோப்புக்களை image மற்றும் pdf தோற்றங்களில் சேமித்துக்கொள்ளலாம்.
இந்த Penultimate அப்ளிகேசன் 17MB அளவில் வருகிறது.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Popular Posts